...

0 views

வர்மா பற்றிய உண்மைகள் தெரிய வருமா
அத்தியாயம் 5

வர்மா என்ன செய்து கொண்டு இருப்பானென மூவரும் யோசித்து கொண்டு இருக்கும் பொழுதில் அங்கே இருக்கும் ஜாக் ஏதும் கவலை படாமல் மூவருக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க, மூவரும் ஒரு வினோதமாகப் வாசலிலிருந்து இருந்து சத்தம் வர மூவரும் மற்றும் ஜாக் திரும்பிப் பார்க்க அங்கே கதிர் சிவா ஜூலி நின்று கொண்டு இருந்தனர் ஜூலி உள்ளே வந்து ஜாக் மண்டையில் கொட்ட கதிர் உள்ளே வந்து இருவரையும் பிரித்து விட்டான் வந்தவுடனே அண்ணன் தங்கச்சி சண்டை போட ஆரமிசுட்டீங்களா கொஞ்ச நேரம் சும்மா இருங்க ரெண்டு பெரும் கதிர் அங்கே இருக்கும் மூவரையும் பார்த்து விட்டுச் சதிஷ் நோக்கி வர வணக்கம் சதீஷ் நான் கதிர் வர்மா டீம் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மெண்ட் லீடர் எனக் கூற மூவரும் திகைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தனர், சதீஷ் பயத்தில் கை நீட்டிக் கைக்கொடுத்தான், அன்பாகப் பற்றிக் கொண்ட கதிர் கண்டிப்பா உங்களுக்கு நான் நன்றி சொல்லணும் கூடவே இருந்து என்னோட நண்பன் வர்மா வை நல்லா பாத்துக்கிட்டீங்க ரம்யா வணக்கம என்னோட பெயர் கதிர் நான் வர்மா நண்பன் எனக் கூறி வணக்கம் வைத்தான் சிறிது நகர்ந்து சுரேஷ் தலையில் ரெண்டு கொட்டு கொட்டி விட்டு இது வர்மா வைப்பீல் பண்ண வச்சதுக்கு எனக் கூறி விட்டு மன்னிப்பும் கேட்டுச் சுரேஷ் நான் கதிர் எனக் கூறினான் இவங்க ஜூலி என்னோட அசிஸ்டண்ட் இங்க இருக்கிற ஜாக் தங்கச்சி அப்பறம் இவரு சிவா எனக் கூற அந்த மூவருக்கும் ஜூலி மற்றும் சிவா தங்களை அறிமுக படுத்தி கொண்டனர் ஜூலி ரம்யா அருகில் வந்து கதிரைப் பார்த்து இவங்க தான் நம்ம புது அண்ணி ய எனக் கேட்க ஜூலி முக திரையில் வெட்கம் மட்டும் ஒரு சந்தோஷ முக பாவம் வந்து சென்றது.




ரம்யா தயக்கத்துடன் இங்கே என்ன நடக்குது நீங்க எல்லோரும் யாரு வர்மா யாரு நான் ஒண்ணு நினைச்சா இங்க எல்லாமே வேற மாதிரி இருக்கு உண்மையா என்ன தான் நடக்குது வர்மா வை அந்தக் கிஷோர் அவன் பையன் விக்கிக் கடத்தி கொண்டு போய் வச்சு இருக்காங்க அவனை எப்படி காப்பாத்த போறோம் எனப் பயத்துடன் கேட்டால் ரம்யா, இருங்க ரம்யா வர்மா ஒரு காரியத்தோடு தான் அங்க போய் இருக்கான் அவன் மிஷன் முடித்து விட்டு இந்நேரம் கிளம்பி இருக்கணும் இல்லை என்றால் கொஞ்ச நேரம் லக்கிளம்பி வந்துருவான் நீங்க எதையும் நினைச்சி கவலை படாதீங்க, கதிர் எங்களைப் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும் இதுவரை நான் உங்களைப் பார்த்தது இல்லையெனச் சதீஷ் கூற நான் தூத்துக்குடி ல இருக்கேன் நானும் வர்மா வும் 1 வயசு ல இருந்து ஒண்ணா தான் வளர்ந்தவம் வர்மா வட குடும்பத்துல தான் நான் வளர்ந்தேன் என்னோட அப்பா வர்மா அப்பாக்கு நண்பர் நான் வர்மா க்கு நண்பன் எங்க குடும்பம் எல்லாமே வர்மா குடும்பத்துக்கு நண்பர்கள் தான், வர்மா வந்த அப்றம் எல்லாமே உங்களுக்குப் புரியும், ரம்யா நீங்க ஏன் வேந்தன் குடும்பம் என்று சொல்லாம இருக்கீங்க உங்க குடும்பத்துக்கும் ஆதித்யா குடும்பத்துக்கும் ரொம்ப வருஷமா நல்ல உறவு இருக்கே அப்புறம் ஏன் நீங்க எல்லா மறைத்து விட்டு இப்படியொரு அடையாளம் ல இருக்கீங்க, எனக் கேட்கக் கூட இருந்த சதீஷ் சுரேஷ் திகைத்துப் போனார்கள் அதும் வேந்தன் குடும்பம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப் பெரிய குடும்பம் அவர்கள் எல்லோரும் தற்காப்பு கலைகளில் சிறந்தவர்கள் இங்கே இருக்கும் வர்மா கதிர் இருவரும் ரம்யா வின் மாமா கார் முகில் வேந்தன் மாணவர்கள் தான் அதனால் தான் ரம்யா வின் காதல் பற்றித் தெரிந்த வுடன் ரம்யா பற்றிய தகவல் யாவும்கதிர் வர்மா தேடி எடுத்தனர். ஆனால் இப்பொழுது அந்தக் குடும்பதில் குமரி வேந்தன் (தலைவர்) ரம்யா வேந்தன் குமரி வேந்தன் மகள் வழி பேத்தி, கார் முகில் வேந்தன் ரம்யா வின் மாமா மூவர் மட்டும் தான் இருக்கிறார்கள் 10 வருடம் முன் நடந்த சில சூழச்சி களால் வேந்தன் குடும்பம் மொத்தமாய் சரிந்தது அதிலிருந்து இந்த மூவர் மட்டுமே தப்பித்தனர்.




கதிர் கூறியதை கேட்ட ரம்யா திகைத்துப் போனால், அப்போ நான் யார் என்று வர்மா கக்கு தெரியுமா தெரிஞ்சு தான் என்னோட காதலை ஏற்று கொண்டானா எனக் கேட்டக ஆமாம் ரம்யா வர்மா உங்களை 10 வருஷமா காதலிக்கிறான் உங்க குடும்பம் அந்தச் சூழச்சி யில் மாட்டி அழிந்த அப்றம் வர்மா உங்களைத் தேடி தான் அவங்க அப்பா கிட்ட உதவி கேட்டான் அதிலிருந்து ஒரு வாரத்தில் எல்லாமே மாறிவிட்டது வர்மா அப்பா அவங்க குடும்பம் நமக்கு ரொம்ப வேண்டிய குடும்பம் இதை நாங்க பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறி விட்டு அவர் செல்ல அப்போ தான் வர்மா முடிவு செஞ்சான் உன்னை எப்படியாவது கண்டு பிடிக்கணும் என்று அந்தக் கடவுள் முடிவோ என்னவோ அவரே உண்ண வர்மா கிட்ட கொடுத்து விட்டாரெனக் கூற ரம்யா திகைத்துப் போய் நின்றால். அடுத்து என்ன நடக்கும் சதீஷ் யாரெனக் கதிர் கூறுவானா... மர்மம் தொடரும்  




கதிர் எல்லோரும் முன் ரம்யா பற்றி உளறி விடச் சதீஷ் சுரேஷ் திகைத்துப் பார்த்துதுதுது கொண்டு இருந்தனர், அது மட்டுமில்லாமல் ரம்யா தன் குடும்ப விஷயம் வெளியுள் வந்ததால் அவளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை சதீஷ் சுரேஷ் கொடுக்கத் தொடங்கினர் அது மட்டுமில்லாமல் அவள்பற்றிய அனைத்தும் கதிர் வர்மா அனைவருக்கும் தெரிந்து விட்டதால் உடனே தான் மாமா கக்கு கால் செய்து இங்க நடந்ததை கூறினார், யாவரும் சிரித்து கொண்டே வர்மா என்னோட மாணவன் தான் அவனைத் தான் உண்ண பார்த்துக் கொள்ள அனுப்பி வச்சேன் நீ கண்டிப்பா அவனைக் காதலிப்ப நு தெரியும் உன் மேல வர்மா க்கு அவளோ காதல் என யாவரும் கூற இங்கே என்ன தான் நடக்கிறது எனப் புரியாமல் இருக்க அப்போது வெளியில் கையில் ஒரு கட்டுடன் வர்மா வந்து நின்றான் வர்மா வந்ததை பார்த்த ஜாக் ஓடிச் சென்று கையை ஸ்கேன் செய்து கையில் இருக்கும் காயம்பற்றித் தெரிந்து கொண்டு ஜூலியிடம உள்ளே இருக்கும் முதலுதவி பெட்டி யை எடுத்து வரச் சொன்னது. அப்போது ரம்யா பயத்துடன் வந்து வர்மாவின் கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டு இருந்தால், வர்மா சாதாரணமாக இருந்தான் கதிர் நடுவே வந்து என்ன ஆச்சு வர்மா அந்தக் கிஷோர் உண்மையா எதும் சொல்லிட்டானா இல்லை அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லையென உருட்டிட்டு இருக்கானா அந்த வீனபோனவன் எனக் கோபமாகக் கேட்டான், வர்மா எதையும் கூறாமல் மெதுவாக நடந்து சென்று அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து யோசிக்க ஆரமித்தான், ஜாக் எனக் கூற ஜாக் அவன் முன் வந்து என்ன வேணும் பாஸ் சொல்லுங்க எனக் கூற எனக்கு ஒரு உதவி பண்ணு என்னோட கம்பியூட்டர் இருக்கிற அந்த டாக்குமென்ட் எல்லாமே இங்க இருக்கிற எல்லோருக்கும் காட்டு எனக் கூறினான் ஜாக் எடுத்துக் கொண்டு வர உள்ளே செல்ல வர்மா மெதுவாக ரம்யா வைப்பார்த்து என்ன மன்னித்துவிடு ரம்யா உன் கிட்ட எந்த உண்மையும் சொல்லக் கூடாது என இல்லை சில காரணம் அதனால தானென வர்மா கூற, ரம்யா அருகில் வந்து வர்மாவின் கன்னத்தில் அடித்து விட்டு அனைத்து கொண்டால், அவளின் அடி வர்மா வின் முகத்தில் பலமாகப் பதிந்து இருக்க ஒரு நிமிடம் எல்லோரும் திகைத்து விட்டனர், வர்மா கை அசைத்து விட்டு எதும் சொல்ல வேண்டாமெனக் கூறினான், ஜாக் வெளியே வந்து சதீஷ் முகத்தைப் பார்த்து அவன் அருகில் சென்று நீங்க ஹாக்கர் ஆக எனக் கேட்கச் சதீஷ் திரு திரு வென முழித்தான், வர்மா சதீஷ் முகத்தைப் பார்த்து உண்மையா சொல்லு சதீஷ் உண்ண பத்தி எனக்கு நல்ல தெரியும், என வர்மா கூற சதீஷ் சுரேஷ் ரெண்டு பேரும் ஒப்பு கொண்டனர், கதிர் நடுவில் வந்து சிரித்து விட்டு வர்மா ரெண்டு பெரும் பயந்துட போறாங்க நம்ம எனக் கூற வர்மா வும் சிரித்து கொண்டே ஆமாம் மச்சான் நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ பெரிய கேடிங்க என்று நல்லா தெரியும் எனக் கதிர் வர்மா ஜாக் ஜூலியென அனைவரும் வில்ல தனமாகச் சிரித்தனர், ரம்யா இடையில் வந்து அங்க என்ன நடந்தது எனக் கேட்க, இப்போவே சொல்லனுமா என வர்மா கேட்டான் ஆமாம் வர்மா நீ எப்படி வந்த அங்க இருந்து உண்மையாக நீ யாரு தான் வர்மா இங்க என்ன தான் நடக்குது கொஞ்ச தெளிவா சொல்லுங்க ரெண்டு பேரும் எனக் கேட்கக் கதிர் கூற ஆரமித்தான்,

அடுத்து என்ன நடக்கும் 

( குழப்பம் நிறைந்த உலகில் மேலும் குழப்பம் தரவே சிலர் இருப்பது போல் சிலர் நமக்குத் துணையாக இருக்க வருகிறார்கள் ஆனால் என்ன செய்யச் சில சூழச்சிகள் நடக்கும் பொழுதில் யாவும்  நாம் கைகள் விட்டுத் தூரம் சென்று விடுகிறது என்ன தான் பல முறை போர் செய்த போர்வீரணாக இறந்தாலும் சூழச்சி என்னும் சிலந்தி வகையில் ஒரு தடவை என்னும் சிக்கி தான் விடுகிறார்கள் சிலர் அப்பொழுதும் துணை கொண்டு மீண்டு வர முயற்ச்சி செய்கிறார்கள் சிலர் மாட்டி விட்டோம் என்பதை கூடத் தெரிந்து கொல்லாமள் உடன் இருக்கும் சொந்தம் என்னும் சூனியம் நடுவில் புதைந்து கொள்ள மரணம் கூட வேண்டிக் கேட்டுக் கிடைக்காத விரக்தியில் வாழ்க்கை எங்கு அழைத்துச் செல்கிறதோ அதன் உடன் செல்கின்றனர், என்ன தான் பல இன்னல்கள் இருந்தாலும் எல்லோரும் மனதில் ஒரு முறையாவது தானும் ஒரு நாயகன்போல் வர மாட்டோமா எனப் பல ஏக்கம்  கொண்டு இருக்க தான் செய்கிறார்கள்  )
© அருள்மொழி வேந்தன்