வீடு திரும்புவோம்!
வீடு திரும்புவோம்!
================
"ஹாய் அனு!" என்றவாறு உள்ளே நுழைந்தான் இராஜசேகர். அன்புடன் வரவேற்றாள் அனு.
இராஜசேகர்?
இளைஞன். கூரறிவும் உழைப்பும் நிறைந்தவன். கடந்த ஐந்து வருடங்களாக மேல்நாடுகளில் வேலை நிமித்தம் இருந்துவிட்டு இப்போது தான் தாயகம் திரும்பியிருக்கிறான்.
அனு தன் பொறியியல் பட்டப்படிப்பு முடிந்து முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்தபோது அவள் குழுவின் தலைவனாக இராஜசேகர் இருந்தான். அனுவின் சுறுசுறுவென்ற வேலைத் திறமும், வேலைகளைச் சட்டென்று புரிந்துகொள்ளும் கற்பூர புத்தியும் தான் அவனை முதலில் கவர்ந்தன. அதன்பின் பிரச்சனைகளை சமாளிப்பதில் அவளுக்கிருந்த விடாமுயற்சியும், அவளது தனித்துவமான சிந்தனைகளும், எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைபோன்று கள்ளங்கபடமின்றிப் பழகும் அவளது குணமும் அவள்மீது அவனுக்கிருந்த மதிப்பை உயர்த்திக் கொண்டே போயின.
சில மாதப் பழக்கத்திற்குப் பின் ஒரு நாள் அவனை வீட்டிற்கு அழைத்தாள் அனு. நல்ல அற்புதமான விருந்தளித்து அவன் கையில் ராக்கியைக் கட்டினாள். அதிலிருந்து கூடப்பிறந்தவர்கள் போலவே பழகி வந்தார்கள் இருவரும்.
ஊருக்கு வந்ததிலிருந்தே அனுவைப் பார்க்க வேண்டும்...