...

0 views

புதிய தொடக்கம்
அத்தியாயம் 6

2 வருடம் முன் :




வர்மா வின் அப்பாவிடமிருந்து கால் வந்தத்து, வர்மா நீ படிச்சு முடிச்சு கண்டிப்பாக நம்ம பார்க்கிற துப்பறிவு துறை தானே செய்வ, அப்பா இங்க பாருங்க நமக்குச் சொந்தமாக ஒரு தொழில் இருக்கு ஆனாலும் இப்போ எதுக்கு இதைப் படிச்சுட்டு இருக்கேன் அங்க வந்து சேருவதற்க்கும் அப்புறம் எனக்குனு ஒரு அடையாளம் வேணும் அத்துக்குதானே, எனக் கூற ராஜா ஆதித்தியன் சரி வர்மா நீ இன்னும் ரெண்டு இல்லனா மூணு வருஷம் ல நீங்க ரெண்டு பேரும் நீ கதிர் உங்களுக்கு என ஒரு டீம் வேணும் உருவாக்கி வைங்க சரியா ஆபரேஷன் destruction தொடங்கணும் உங்க லைப் எங்க ஆரமிக்கபோது அதை நீங்கத் தான் முடிவு செய்யணும் நீங்க இருக்கிற திருநெல்வேலி யிலிருந்து ஆரமித்தா கூடச் சந்தோஷம் தான் உன் தாத்தா சொந்த ஊரு சரியா அங்க யும் ட்ரக்ஸ் போதை பொருள் எல்லாமே வர வைக்கத் தான் ஒரு கூட்டம் காத்து கிட்டு இருக்கு அதற்க்கு அரசியல்வாதிகள் பெரிய பெரிய முதலாளிகள் உடன் பட்டுத் தான் இதைச் செய்யப் போறதா எனக்குத் தகவல், பெரிய பெரிய திமிங்கலம் நாங்க பிடிக்கிறோம் நீங்கச் சுறாக்கள் ஆகச் சுத்து போடுங்க எனக் கூறி விட்டு வைத்து விட்டார் அன்று முதல் இப்போ வரை நானும் வர்மாவும் உங்களை எங்க டீம் ஆக மாத்த முயற்சி செய்தோம், எனக் கதிர் கூறினான், வர்மா எப்படி வெளியில் வந்தான் அடுத்த பகுதியில்




எங்கோ படித்தது.

கனவுகள் எப்போதும் எல்லோருக்கும் எதாவது ஒரு தடயம் விட்டுத் தான் செல்லும அந்தக் கனவுகள் சில நேரம் நமக்கு ஆதரவா காட்சிகள் கொடுக்கும் சில நேரம் அந்தக் காட்சிகள் நம்ம வாழக்கை மாற்றும் அப்படி சிலர் வாழக்கை தான் இந்தக் கதையா இருக்க போகிறது, தினம் தினம் புது புது கனவுகள் அடுத்து என்ன நடக்கும் எனப் புரியாத நிலையில் அவர்கள் செய்யும் தவறுகள் வாழக்கை என்ன ஆகப் போகிறதோ அறியாத நொடியில் மாறும் சம்பவங்கள், இரு வேறு உலகம் கனவுகளும் நிஜ உலக நினைவுகளும் ஒன்றாய் சங்கமிக்கும் பொழுதில் தொடரும் ஒரு காலம் நடுவில் வேறு பக்கம் மாறிச் செல்லத் தொடங்கிய பெரும் போர்க்களம்,




அங்கே என்ன நடந்தது என எல்லோரும் ஆச்சிரியமாகக் கேட்டுக் கொண்டு இருக்க கதிர் மட்டும் எனக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அமர்ந்து இருந்தான் என்ன தான் வர்மா பற்றி எல்லாமே தெரிந்து இருந்தாலும் ஏனோ அவன் சண்டை போட்ட தருணம் மட்டும் அவன் கேட்க விரும்ப வில்லை அதற்க்கு பெரிய காரணம் ஒண்ணும் இல்லை தன்னை விட்டு விட்டுப் பெரிய ஆக்ஷன் பிளாக் செய்து விட்டு வந்து விட்டானென வருத்தம் தான் கதிர் மனதில் இருக்க அதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட வர்மா, கதிர் அடுத்த சம்பவம் நீ நான் தான் சேர்வம் சரியா எனக் கேட்க வர்மா அருகில் வந்த கதிர் அனைத்து கொண்டான், இவர்கள் செய்வதை பார்த்து என்ன சொல்வது எனப் புரியாமல் இருந்த அனைவரின் முகம் கண்ட ஜூலி என்ன எல்லோரும் இப்படி பார்க்குறீங்க அவங்க அப்டி தான் சண்டை வம்பு என வந்த ரெண்டு பெரும் தான் சேர்ந்து செய்யணும் என நினைப்பாங்க, ஜாக் நடுவே வந்து வர்மா பாஸ் என்ன நடந்துது நீங்க எனக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்ப வில்லை என்றால் என்னால கதிர் அண்ணா கக்கு தெரிவித்து இருக்க முடியாது, நம்ம நினைச்சா எல்லாமே நடந்துச்சா இல்லை அந்தக் கடல் ஆமை எதுனா குட்டையை குழப்பி விட்டானா எனக் கேட்க ஜாக் பேசுவதை பார்த்த சதீஷ் வர்மா அருகில் வந்து என்ன வர்மா ஜாக் என்ன மாதிரியே பேசுறானெனக் கேட்க அதுக்கு பதில் அப்புறம் சொல்றேன் இப்போ அங்க என்ன நடந்தது என்று சொல்றேன், என வர்மா கூறினான் எல்லோரும் அங்கே இருக்கும் டேபிள் சுற்றி உக்காந்து இருந்தனர், வர்மா பேசத் தொடங்கினான் நான் காலேஜ் ல இருந்து அவங்க கூடப் போய்ட்டு இருக்கும்போதுஅந்த விக்கியென முகத்துல ஒரு துணி வச்சு மூடிட்டான் நானும் மயங்கிட்டேன், அவனுங்க என்னை என்ன கொண்டு போவாங்க என நான் கணித்து வச்ச இடத்துக்குத் தான் கூட்டிட்டு போனாங்க, நானும் அவங்க என்ன தான் பண்றாங்க எனப் பொறுமையா இருந்தேன், கதிர் அந்தக் கிஷோர் கக்கு எங்க அப்பா பத்தி தெரிஞ்சு இருக்கும் என நியணிக்கிறேன் என்னோட முகத்தைப் பார்த்தே அவனுக்கு அவளோ சந்தேகம் அவங்க டேட்டா பேஸ் யில் இருக்கும் எல்லா தகவலும் எடுத்து வச்சு இருக்க என்று சொன்ன, அத்துள்ள Black Hawk என்ற பெயரில் எதுனா மெசேஜ் இல்லை என்றால் ஏதாவது டீலிங் இல்லை ஏதாவது தகவல் இருக்கா எனப் பாரு எனக் கூற கதிர் ஜூலியிடம் சிவா கூடப் போய்ச் சர்வர் லத்தேடி பாரு எனக் கேட்க ஜூலியும் தலை அசைத்து விட்டுச் சிவா உடன் சென்றது, வர்மா சதீஷ் இடம் சதீஷ் நீ அந்தக் கம்பியூட்டர் ல உன்னோட சுரேஷ் ரம்யா நம்பர் நம்ம காலேஜ் அப்புறம் அவங்க அவங்க வீடு ல இருக்கிற மாதிரி லொகேஷன் மாத்தி வச்சுறு இங்க வந்த தடயம் இருக்க கூடாது சரியா எனக் கேட்கச் சதீஷ் சரியெனக் கூறினான், சுரேஷ் நான் என்ன செய்யட்டும் எனக் கேட்டான் எல்லோரும் அவங்க அவங்க வேலையைப் பாருங்க நான் சொல்ற அங்க நடந்த எல்லதையும் கேட்டுட்டேயெனக் கூற எல்லோரும் சாரியெனக் கூறி வர்மா சொல்வதை கேட்க ஆரமித்தனர், அவங்க இங்க ஒண்ணும் சும்மா திருநெல்வேலியை கட்டு பாட்டுகுள்ள வச்சுக்க வில்லை சரியா இந்த ஊரும் தூத்துக்குடி யும் தான் அவங்களுக்கு பெரிய பிடிப்பு அவங்க எல்லோரும் தூத்துக்குடி மூலமா கடல் வழி சரக்கை இறக்கி திருநெல்வேலியை பெரிய குடோன் மாதிரி வச்சு இருக்காங்க கேரளா பக்கம் அவங்களுக்கு போக முடிய வில்லை திருநெல்வேலி தான் முக்கிய இடமா இருக்கு அவங்களுக்கு எங்க அப்பா சொன்ன  மாதிரியே நான் நினைச்ச எல்லாமே நடந்து இருக்கு இவனுங்க கூட்டம் யார் யாரெனக் கண்டு பிடிக்கத் தான் நான் இப்படியொரு சம்பவம் நடத்தினேன் விக்கிச் சும்மா சாதாரண காலேஜ் ஸ்டூடண்ட் இல்லை அவன் பின்னாடி இருக்கிற பசங்களுக்கு அவன் தான் போதை மருந்தைக் கொடுத்து அவனுக்குச் சம்பளம் இல்லாத அடி ஆள் மாதிரி மாத்தி வச்சு இருக்கான், ரம்யா உன்னோட கிளாஸ் மேட் ராம் எத்தனை நாட்களா கல்லூரி வர வில்லையெனக் கேட்க ரம்யா ரெண்டு வாரம் ஏதோ உடம்பு சரி இல்லையென டிசி வாங்கிட்டு போய் விட்டானெனக் கூறினார்கள், வர்மா அதற்க்கு அவன் இறந்து மூணு நாள் ஆகுது, அவனோட மரணம் தான் நான்கு வருடம் அப்புறம் வெளி வர வேண்டிய ஆபரேஷன் இப்போவே ஆரமிக்க வேண்டியதா போச்சு எனக் கூறினான், கதிர் நடுவே குறிக்கிட்டு வர்மா இப்போ என்ன பண்ண போறோம் நமக்கு இப்போ இருக்கிறது காலேஜ் பையன் என்ற அடையாளம் தான் இதை வச்சு தான் நம்ம எதுனா பண்ணனும் முக்கியமா ரம்யா சதீஷ் சுரேஷ் மூணு பேருக்கும் எந்த ஆபத்தும் வரக் கூடாது எனக் கூறினான், கொஞ்ச பொறுமையா இரு கதிர் என வர்மா கூறி விட்டு, இங்க பாருங்க அங்க நடந்த எல்லாத்தையும் நான் சொல்லி முடிக்கிறேன் அப்புறம் நீங்க எல்லோரும் கேள்வி கேட்கலாம் ரம்யா சுரேஷ் உங்களுக்கும் தான் கொஞ்ச பொறுமையா இருங்க எனக் கூறி விட்டுத் தொடர ஆரமிதித்தான், அங்க அவங்க என்னைக் கட்டி வச்சி அடிக்க ஆரமிச்சாங்க நானும் கொஞ்ச பொறுமையா இருந்தேன் அப்போ விக்கி மறுபடியும் என்னைத் தேடி வந்தான், அவனுக்கு அவன் கையாள என்னை அடிக்க ஆசையாம் அதான் அவனுக்கும் எனக்கும் ரிங் லப்போட்டி வைக்கச் சொன்னான் அந்த லூசு, இதைக் கேட்டவுடன் கதிர் சிரித்து விட்டான், வர்மா உஷ் எனக் கூறி விட்டு நான் அதற்க்கு ஒரு நிபந்தனை வச்சேன் அதற்க்கு சரி என்று சொன்னால் நான் சண்டை போடுறேன் எனக் கூறினான் ஆனாலும் கிஷோர் விடவே இல்லை அவனுக்கு ரொம்ப பயம், இருந்தாலும் அந்த லூசு விக்கி நான் எழும்பும்  தோலுமா இருக்கேன் அடிச்சுரலாமென நினைச்சுட்டு ரொம்ப சீன் போட்டான், ரெண்டே அடி தான் அவன் அங்கயே மயங்கி விட்டான், ஐயோ என ரம்யா கூறி அப்பறம் அந்தக் கிஷோர் உன்னை எப்படி விட்டான், அதற்க்கு வர்மா அவன் எங்க விட்டான் நான் தான் அங்க இருந்த எல்லா தடி மாட்டையும் அடிச்சுட்டு வந்து இருக்கேன் எனக்குத் தெரிஞ்சு என்னைப் போட்டுத் தள்ள வருவாங்க என நினைக்கிறேன் எனக் கூறினான், ரம்யா கண்களில் கண்ணீர் வர வர்மா விடம் வர்மா நீயும் என்னை விட்டுப் போக மாட்டலா என அழுது கொண்டே கேட்டால் இங்க பாரு ரம்யா உனக்காக மட்டுமே இத்தனை வருஷமா வாழந்துட்டு இருக்கேன் உன்னை எப்படி விட்டுப் போக முடியும் எனக் கூறி விட்டு அனைத்து கொண்டான், சுரேஷ் இப்போ என்ன பண்ண போறோம் எனக் கேட்க, வர்மா சுரேஷ் பார்த்து இங்க பாரு சுரேஷ் நீ தான் ஜாக்கிரதை யாக இருக்கணும் தப்பி தவறி கூடக் கீதா கிட்ட சொல்லிடாத, சரியா இன்னும் ரெண்டு மாசம் தான் எக்ஸாம் வந்துரும் எல்லோரும் எக்ஸாம் முடிங்க அதுவரை நம்ம எல்லோரும் சாதாரணமா இருக்கலாம் உங்களுக்கு எங்க கம்பெனி ல இருந்து ஜாப் ஆப்பர் வரும் மாதம் 30000 சம்பளம் என ஆனா இது உங்க குடும்பத்துக்கும் சுத்தி இருக்கிற நண்பர்களுக்கு மட்டும் தெரிய படுத்த தான் உள்ளே எல்லோருக்கும் அதிகமா தான் சம்பளம் இருக்கும். சதீஷ் சுரேஷ் நீங்கக் கேட்டா எனக்கு டீச்சர் வேலை கிடைச்சு இருக்கு ஆனா அது ஒரு கம்பெனி யில் போகப் போக அதுல நிறைய சம்பளம் கிடைக்கும் மட்டும் சொல்லுங்க, ரம்யா உனக்குத் தானியா ஒரு பொறுப்பு இருக்கு நீ ஒரு ஸ்கூல் க்கு பிரின்சிபால் சரியா அது உன்னோட அப்பா கனவு அந்த ஸ்கூல் ல எல்லோருக்கும் தற்காப்பு கலை யோகா சொல்லிக் கொடுப்பாங்க நீயும் தற்காப்பு கலை மற்றும் gun handling லப்பெரிய ஜீத்துணு தெரியும் நீ இன்னும் நல்லா ட்ரைனிங் எடுக்கணும் சரியா கதிர் சதீஷ் சுரேஷ் கக்கு நீ தான் ட்ரைனிங் கொடுக்கணும் ரெண்டு பெரும் உடற்கல்வி லப்பெரிய ஜித்து தான் சீக்கிரம் கத்துபாங்க சரியா, கதிர் வர்மா வைப்பார்த்து நீ என்ன பண்ண போற எனக் கேட்க,

எனக்கு இன்னும் முடிக்க வேண்டிய சில லெவல் இருக்கு நான் அதை முடிக்கப் போறேன் எனக் கூற கதிர் திகைத்துப் பார்த்தான், என்ன வர்மா சொல்ற அதுக்கு தான் இன்னும் 4 வருஷம் இருக்கே இல்லை கதிர் அதுவரை நான் காத்திருக்க முடியாது, விக்ரம் தாத்தா கிட்ட போய் நான் இதுல இருந்து அடுத்த லெவல் போறேன் எனச் சொல்லிட்டு அடுத்த லெவல் போறேன் அப்போ தான் இன்னும் 3 மாசத்துல என்னால அதை முடிக்க முடியும்,

அது என்ன விக்ரமதித்தான் யின் விளையாட்டு வர்மா என்ன செய்யப் போகிறான், இவர்கள் அனைவருக்கும் அடுத்து அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி என்ன என்ன …   
© அருள்மொழி வேந்தன்