மகத்துவமான மனோதத்துவம்
ஒருவன் ஞானியிடம் வந்து மனோதத்துவத்தை உங்களால் நேரிடையாக விளக்கிக்காட்ட முடியுமா என்றான்.
அவனை ஞானி கிராமத்திற்கு அழைத்துச்சென்றார்.
மக்கள் வரவேற்றனர்.இரவு நேரம் பிரசங்கம் தொடங்கியது.
வந்தவன் ஞாநியின் அருகில் அமர்ந்து உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தான்.
ஞாநி ஒரு கத்தியை எடுத்துவர பணித்தார்.
கத்தியை கையில் பெற்றுக்கொண்ட அவர் இந்த கத்தியை எதற்காக உபயோகப்படுத்துவீர்கள் என ஒவ்வொருவரிடமும் ஒரே கேள்வியை கேட்டார்.
அவர்கள்கூறிய பதில்
முதலாமவர்:வீட்டு சமயலறை வேலைக்கு
இரண்டாமவர்:எங்க வீட்டு தோட்டத்துல இருக்கிற இலை,பழங்களை பறிச்சி உறவுக்காரங்க,அக்கம் பக்கத்து வீட் டுக்காரங்களுக்கு கொடுப்பேன்
மூன்றாமவர்:எனக்கு எதிரி இருக்கான் அவனை கொன்னப்பரந்தான் மறுவேலயே.
நான்காமவர்:என்னுடைய தற்காப்புக்கு பயன்படுத்திக்குவேன்
ஐந்தாமவர்:பணம் கேட்டா கொடுக்காதவங்களை மிரட்ட பயன்படுத்திக்குவேன்.
ஆறாமவர்:சுடலை மாடன் சாமிக்கு கத்தி வாங்கி வைக்கிற வேண்டுதலை நிறைவேத்துவேன்.
ஏழாமவர்:எல்லோரும் வேண்டாமென தூக்கி எறிந்த பொருட்களை எடுத்து வந்து பத்திரப்படுத்தற பொருளா உருவாக்கி தருவேன்
எட்டாமவர்:கத்திய உருவாக்கி வயித்துக்காக விக்கிறதுமட்டும்தான்க என்னோடது
ஒன்பதாமவர்:கசாப்பு கடை வச்சிருக்கிற எனக்கு ஆடு,கோழி அறுக்கத்தான்
பத்தாமவர்:அமைதியாக இருந்த ஒருவன் கடைசியாக கூறினான்.விவரமே இல்லாம ஒரு கேள்விய கேட்டு எங்களுக்கு என்னத்த நல்லது சொல்லப்போறீங்க.இந்த கேள்விய உங்க சுயபுத்தியில கேட்டீங்களோ இல்லை எவனாவது கேட்கச்சொல்லி கேட்டீங்களோ.முதல்ல அவனையும் அப்புறம் உன்னையுந்தான்யா போடணும்.ஆமா இம்புட்டு பேர கேட்டியே பதில சொல்லி தொலைச்சிப்புட்டுப் போ என்றான்.
ஞாநி பதிலளித்தார்.
உங்களில் ஒவ்வொருத்தர் கேட்ட கேள்வி மற்றவருக்கான பதில்.
உங்களை நான்கேட்ட கேள்விக்கான பதில் என்னை கேட்கச்சொன்னவனுக்கு.
உங்கள் அனைவரது குழப்பமான பதிலே எனக்கான விடை என்று கூறி விட்டு மவுனமாக அங்கிருந்து அகன்றார்
© MASILAMANI(Mass)(yamee)