...

1 views

13to15) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 13 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .

" என்ன அக்கா . அந்த அண்ணா மேல எதுக்கு விழுந்த . " ஒரு சிறுவன் .

" நான் என்ன , வேணும்னே பண்ணனா . தெரியாம தானடா விழுந்தேன் . " கண்மணி .


" நீ வேணா தெரியாம விழுந்துருக்கலாம் . ஆனா அந்த அண்ணா வேணும்னே தான் விழுந்துச்சு .  " சிறுவன் .


" டேய் லூசு மாதிரி பேசாத டா . " என்ற கண்மணி தன் வீட்டிற்குள் நுழைந்து அவனை பார்த்து முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் .


அவனும் வேறு வழி இன்றி தன் வீட்டிற்கு செல்லும் பாதையில் சென்றான் அந்த சிறுவன் .


★★★★★★

இங்கு ஆதிக்கோ , அவளது நினைவுகள் தான் . அவளது நினைவுகளிலே படுத்து இருந்தவன் , தன் தங்கையின் வரவை கவனிக்க தவறினான் . அவளும் வந்து இவனை பார்த்து விட்டு மெல்ல வெளியேறி விட்டிருந்தாள் .


" அம்மா . " என்று அழைத்தவாறு உள்ளே நுழைந்தாள் ஈஷ்வரி .


" என்ன டி . " என்று திரும்பினார் அவர் .


" அம்மா , அண்ணா யாரோ ஒரு பொண்ண விரும்புராருன்னு நினைக்குறேன் . " ஈஷ்வரி .


" உனக்கு எப்டி டி தெரியும் . " அவள் தாய் .


" முகத்த பாத்தா தெரியாதா . தனியா சிரிக்குறாரு , சாப்பாட்ட போட்டு பிசஞ்சுட்டே உக்காந்துட்டு இருக்காறு . இதெல்லாம் காதல் வரதுக்கான அறிகுறிகள் அம்மா . " என்றாள் ஈஷ்வரி .


" என்ன டி பேசுற . " கமலம் .


" அம்மா , ஆதி அன்னா ஒரு பொண்ண காதலிக்குறாரு . " ஈஷ்வரி .


" பைத்தியம் மாதிரி ஒலராம போடி . " என்று விரட்டினார் அவர் .


அவளும் அவள் தாயை முறைத்து விட்டு வெளியேறி விட்டாள் .


அடுத்த நாள் காலை :

ஆதி எழுந்து மணியை பார்த்தான் . அது நான்கு என்று காட்டியது . அதை பார்த்து சிரித்து விட்டு , எழுந்து தன் வேலையை முடித்துக் கொண்டு ட்ராக் பான்ட் ஷர்ட ஓடு வெளியே வந்தான் . அந்த காலை வேலையிலும் அவன் தாய் எழுந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார் . அதை பார்த்தவனின் மனதில் , தனக்கும் இது போல் தான் மனைவி அமைய வேண்டும் என்று என்னினான் .


" அம்மா  , ஜாக்கிங் போய்ட்டு வந்தர்ரேன் . " என்றான் ஆதி .


" என்னப்பா . இவ்ளோ வெள்ளனா எந்துரிச்சுட்ட . " கமலம்


" இல்லம்மா . எப்பையும் நாலு மணிக்கே எந்திருச்சு பழகிட்டேன் . " என்றான் ஆதி .

" சரிப்பா  " கமலம் .

அவனும் தன் தாயிடம் விடை பெற்று தெருவில் இறங்கி ஓடினான் . இன்னும் சூரியன் விடிந்தும் விடியாமலும் இருந்தது . ஒருப்பக்கம் சூரியனின் கதிரொளி வெளியே எட்டி பார்த்துக் கொண்டிருக்க , மறுப்பக்கம் நிலவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது .

அதை ரசித்தவன் , தனது ஓட்டத்தை தொடர்ந்தான் . தெருவில் அவன் ஓடிக் கொண்டிருக்கும் போது தான் ஒன்றை கவனித்தான் , அவன் எந்த வழியில் வந்து கொண்டிருக்கிறான் என்பதை கவனிக்கவில்லை . இருளில் பாதையும் சரியாக தெரியவில்லை . என்ன செய்வதென தெரியாமல் , அப்படியே தனது நடையை தொடர்ந்தான் . எவரிடமாவது வழியை கேட்கலாம் என்று நடக்க , அங்கு ஒரு குடிசை இருந்தது . அந்த குடிசையின் முன் ஒரு பெண் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் . அதை  பார்த்தவன் மகிழ்ச்சியுடன் அந்த குடிசையின் அருகில் சென்றான். அருகில் சென்ற போது தான் அறிந்தான் , அது தான் அவன் மனதில் இடம் பிடித்த பெண் என்று .


அவள் அருகில் சென்று " எக்ஸ்க்யூஸ்மீ . " என்றான் .


அவளும் திருமிபினாள் . அவனை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள் போலும் . தன் விழிகளை அகல விரித்திருந்தாள் . " எ.....என்ன வேணும் . " திக்கித்தினறி கேட்டாள் .


" ஹே . கூல் . நா என்னோட வீட்டுக்கு போற திசையை மறந்துட்டேன் . ஐ மீன் , பாதை தவறிட்டேன் . " என்றான் அவன் .


" உங்க வீட்டுக்கு எப்டி போணும் . " கண்மணி .


" அது தெரிஞ்சா நான் ஏங்க உங்கள கேக்க போறேன் . " ஆதி .


" ஓஓஓஓஓ . ஆமால்ல . " என்று அவள் கூளும் போதே அவளின் தாய் வெளியே வந்து விட்டார் . " யார் கூட டி பேசிட்டு இருக்க . "


" இல்லம்மா . அவங்க வீட்டுக்கு போற வழி தவறிட்டாங்களாம் . " கண்மணி .


" யாருப்பா நீ   . "  விசாலாக்ஷி .


" இந்த ஊர்ல விஷ்வநாதன்னு ஒருத்தவங்க இருக்காங்கல்ல . அவங்க மகன் , ஆதி . " என்றான் அவன் .


" தலைவர் மகனாப்பா . " விசாலாக்ஷி .


" ஆமாங்க . அது , அப்டியே நிலாவ பாத்துட்டே வந்தனா . அதான் பாதைய கவனிக்கல . அனட் , நான் இந்த பாதைல வந்தது இல்ல . " ஆதி .


" பரவால்ல தம்பி . அடியேய் , ஏன் டி நிக்குற . போய் வழி காமி . " விசாலாக்ஷி .


" அம்மா . அது..... " என இழுத்தவளை பார்த்து முறைத்தார் அவள் தாய் .


" சரி போறேன் . " என்றவள் அவனுடன் நடக்க துவங்கினாள் .


" உங்க பேர் என்ன . " ஆதி .


" கண்மணி . " என்றாள் அவள் .


" ஓஓஓஓஓ . என்று ஓஓஓ போட்டவன் அமைதியாகி விட்டான் . காலை வேலை தென்றல் காற்று , தெரிந்தும் தெரியாமலும் சூரியன் , அருகில் மனம் கவர்ந்த பெண் . வேறு என்ன வேண்டும் அவனுக்கு . கோடி ஜென்மம் இப்படியே இந்த பாதை நீண்டு கொண்டே சென்றாலும் , அவள் அருகில் இருந்தால் நடந்து விடுவான் அவன் . ஆனால் அவனது கஷ்ட காலம் , அவனது வீடு வெகு விரைவிலேயே வந்து விட்டது .


அதை பார்த்து நொந்து கொண்டவன் , " சரி கண்மணி . நான் கிளம்புறேன் . " என்று விடை பெற்றான் . இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் அவனின் தாய் . கண்மணியை பார்த்து கோபமுற்றவர் , ஆதி வீட்டினுள் நுழைந்ததும் கண்மணியின் அருகில் வந்தார் .


" ஏய் . நில்லு டி . " கமலம் .


" என்னங்க அம்மா . " கண்மணி .


" எதுக்கு டி , என் பிள்ள பின்னாடி சுத்திட்டு இருக்க . " கோபமாக கத்தினார் .


" இல்லிங்க அம்மா , அவுரு தான் , பாதை தவறிட்டன்னு வழி கேட்டாரு . அதான் கொண்டாந்து விட்டேன் . " என்றாள்  தலையை குனிந்து கொண்டு .


" அவன் என்ன சின்ன பிள்ளையா டி . பாதை தவறுறதுக்கு . அப்படியே தவறிட்டாலும் , வாய்ல சொல்ல வேண்டியது தான . " கமலம் .

" இல்லிங்க..... " என்று வேறு எதுவோ கூற வருவதற்குள் அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது . யாரென திரும்பி பார்த்தால் , ஈஷ்வரி தான் கண்மணியின் கன்னத்தில் அறைந்து இருந்தாள் .


" என்னம்மா . இவக்கிட்டலாம் எதுக்கு பேசிட்டு இருக்கிங்க . அண்ணா கூட இவ வந்தத பாத்துட்டு தான் கீழ வந்தேன் . ஆளும் மூஞ்சியும் . என்ன டி , எங்கண்ணாவ மயக்கனும்னு நினைக்குரியா . அப்டி ஒரு என்னம் இருந்தா இதோட முடிச்சுக்கோ . இல்லன்னா சங்க அறுத்துபுடுவேன் பாத்துக்கோ . மேனாமினுக்கி மாதிரி திரிய வேண்டிது . " என்று வசை பாடினாள் அவள் . இதை எதிர் பார்க்காமல் , கண்மணி கூனி குருகி நின்றிருந்தாள் . அவள் பேசிய பேச்சுக்களில் கண்களில் நீர் உடைப்பெடுத்தது .


" என்ன டி . அழுது எல்லாரையும் உன் பக்கம் திருப்பிக்கலாம்னு பாக்குறியா . நா இருக்கற வரைக்கும் நடக்காது . இன்னொரு தடவ , எங்கண்ணா கூட உன்ன பாத்தேன் , அன்னிக்கு தான் உன்னோட கடைசி நாளா இருக்கும் . " என்றவள் தன் தாயை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து விட்டாள் .


கண்மணி தான் , தன் கண்களில் இருந்த மணிகளை துடைத்து விட்டு நகர்ந்தாள் .


சொல்லப்போணால் ஈஷ்வரியும் , கண்மணியும் ஒரே வயதுடையவர்கள் . ஒரே வயதுடைவர்கள் என்பதால் , ஒரே வகுப்பில் படித்தனர் . அப்போது இருந்தே , கண்மணியை அவளுக்கு பிடிக்காது . இவளை விட நன்றாக படிப்பதும் , அனைத்து ஆசிரியர்களிடமும் நல்ல பெயர் எடுப்பதுமாக அவள் இருக்க , இவளோ , படிப்பில் சுமாராக தான் இருந்தாள் . சிறு வயதிலே அவள் மீது ஒயு கோபம் . வயது ஏற ஏற , அவள் அழகும் சேர்ந்தே வளர்ந்தது . என்ன தான் செல்வாக்கு அவளுக்கு இருந்தாலும் , அவளை போன்ற அழகு இல்லை என்று நினைத்து வருந்துவாள் . அதுவும் , அவளின் கண்கள் . "  ப்ப்ப்பா  ,  என்ன கண்ணு டா " என்று பார்ப்பவர் கூறும் அளவிற்கு இருக்கும் . அவளின் சிவந்த இதழ்கள் , ஊவளுக்கு இல்லை . என்று இவளிடம் இல்லாததை நினைத்தே பொறாமையுடன் இருக்கிறாள் ஈஷ்வரி . அவளை போலவே இவளும் அழகி தான் . என்ன , அவள் வெள்ளை நிறம் . இவள் வெள்ளையாகவெல்லாம் இருக்க மாட்டாள் . சந்தன நிறம் . சிறய கண்கள் . அவளை விட கொஞ்சம் உயரம் கம்மி . ஆனாலும் அழகி தான் . என்ன , தன்னிடம் இருப்பதை பார்க்காமல் அடுத்தவரிடம் இருப்பதை பார்த்து பொறாமை கொள்கிறாள் . அந்த குனம் மட்டும் இல்லை என்றால் , இவளை போன்ற ஒரு பெண்ணை பார்ப்பது கடினம் . அவ்வளவு நல்லவள் . பார்ப்போம்..... விதி இவளை மாற்றுமா . இல்லை இவளால் விதி மாறுமா , என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.....


★★★★★★★





( 14 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .

கண்மணிக்கு அவள் பேசிய வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன . அவளை இவள் தோழியாக பார்த்தாலும் , அவள் இவளை எதிரியாக தான் பார்க்கிறாள் . அதை நினைத்து இவள் வருந்திக் கொண்டிருக்கையில் இவளது தாய் " அடியேய் கண்மணி . ஆறிவு இல்ல உனக்கு . இங்க இருக்குற வீட்டுக்கு போய்ட்டு வர உனக்கு இத்தன நேரமா டி . இதெல்லாம் யாரு சுத்தம் செய்வா , உங்கப்பாவா டி . போ , போய் இதெல்லாம் சுத்தம் பண்ணு . " என்று எச்சில் பாத்திரங்களை கான்பித்தார் அவள் தாய் . இவளும் கண்களில் நீர் சிந்தாமல் அதை உள்ளிழுத்துக் கொண்டு வேலை செய்ய சென்றாள் . அழுதால் , அதற்கும் ஒரு முறை திட்டுவாரே . எதற்கு இந்த வேலை . வாயை மூடிக் கொண்டு  அவர் சொன்னதை செய்ய சென்றாள் .


அவள் அதை செய்து கொண்டிருந்தாலும் , அவர் வாய் மட்டும் நிற்கவில்லை . " எதையாவது ஒழுங்கா செய்ரியா டி நீ . ஒழுங்கா தேய் . பாத்திரத்துக்கு வலிக்க போகுது , இன்னும் மெல்ல தேய் . " என்று அவளை விடாமல் வசைபாடி கொண்டிருந்தார் . அவளுக்க்கோ ஏன்டா பொறந்தோம் என்றாகிவிட்டது .

அரைமணியில் பாத்திரத்தை தேய்த்து வைத்து விட்டு வெளியேறினாள் கண்மணி . " ஏய் நில்லு டி . உனக்கு மாப்ள பாத்துருக்கேன் . நாளைக்கு பொண்ணு பாக்க வராங்க . தயாரா இரு . " என்று கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் அவள் தாய் .


கண்மணி தன் சிறு நண்பர்களுடன் விளையாட சென்று விட்டாள் . அங்கு அவர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தனர் . இவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும் .


" என்ன டா . எனக்காக காத்துட்டு இருக்கிங்களா .  " என்று கேட்டவாறு வந்தாள் கண்மணி .


" ஆமா அக்கா . " என்றான் ஒரு சிறுவன் .


" டேய் . " கண்மணி .

" என்ன அக்கா . " சிறுவன் .

" இன்னிக்கு எனக்கு விளையாடுற மூட் இல்ல டா . நீங்களே விளையாடுங்க . " கண்மணி .


" ஏன் அக்கா . என்ன ஆச்சு . " சிறுவன் .


அவளும் நடந்த அனைத்தையும் கூறினாள் .

" அக்கா விடு . அதான் எல்லாருக்கும் தெரியும்ல . அந்த ஈஷ்வரி அக்காவும் ,  உங்க அம்மாவும் எப்பவும் இப்டி தான் . விடு . " என்றான் அந்த சிறுவன் .


ஒரு பெரு மூச்சை வெளியிட்டு விட்டு " சரி டா . வா போய் விளையாடுலாம் . " கண்மணி கூறியவுடன் அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர் . முன்பு போல் இப்போது கண்ணாமூச்சி விளையாடவில்லை . மாறாக , அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் .


அதையும் ஆதி விட மாட்டான் போலும் . அவளை பார்க்க நேற்று பார்த்த இடத்திற்கே , இன்றும் வந்து விட்டான் .  அவளை கண்டறிந்து , அவள் பேசும் அழகை தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன் . அதை எதேர்ச்சியாக திரும்பிய கண்மணி பார்த்து விட்டாள் . அவனை பார்த்ததும் மனதினுள் அதிர்ந்தவள் , முகத்தை திருப்பிக் கொண்டாள் .


அதை பார்த்த அவன் இதையும் ரசிக்க தவறவில்லை . பார்த்து சிரித்துக் கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் . சிறிது நேரத்தில் அவளுக்கு அது புரிந்து விட  , சிறவர்களிடம் ஏதோ கூறி விட்டு அவன் அருகில் வந்தாள் . " எதுக்கு அப்டி பாக்குறிங்க . அதான் , நேத்தே மண்ணிப்பு கேட்டுட்டேன்ல . " என்று தலையை குனிந்து கொண்டே கேட்டாள் . அதையும் அவன் ரசிக்க , அவளுக்கு கோபம் வந்து விட்டது போலும் . " அப்டிலாம் பாக்காதிங்க . நாளைக்கு என்ன பொண்ணு பாக்க வராங்க . " என்றாள் கண்மணி . இம்முறை அவனுக்கு கோபம் வந்து விட்டது . " ஓய்  பொண்டாட்டி . யாரு வந்தாலும் , நீ எனக்கு தான் . யாரால மாத்த முடியும்னு பாக்குறேன் . ஆனாலும் அழகி தான் டி நீ . என்ன சொன்ன , நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்களா . எவன் வரான்னு நானும் பாக்குறேன் . சரி பொண்டாட்டி , வரட்டா . " என்று கேட்கவும் , அவள் கண்களை அகல விரித்து கொண்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் .


" என்ன டி , அப்டி பாக்குற . போ போய் , சின்ன பசங்க கூட விளையாடு . " என்று அவன் கூறி விட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டான் .


அதையும் சிலை போல் நின்று பார்த்து கொண்டிருந்தாள் கண்மணி .


" அக்காஆஆஆஆஆஆ . " என்று கத்தியவாறு வந்தனர் சிறுவர்கள் .


அதில் தன்னிலைக்கு வந்தவள் " என்னங்க டா . " என்று அவர்களை பார்த்து கேட்டாள் .

" ஒன்னுல்ல அக்கா . வா போய் விளையாடுலாம் . " என்று அவள் கை பிடித்து அழைத்தனர் . " இல்ல டா . நீங்க போய் விளையாடுங்க . நான் வீட்டுக்கு போறேன் . " என்றவள் வீட்டிற்கு சென்று விட்டாள் .


அடுத்த நாள் காலை :

" அடியேய் கண்மணி . " விசாலாக்ஷி .


" என்னம்மா . " கண்மணி .


" இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்லிருந்தன்ல , அவங்களுக்கு உன்ன பிடிக்கலையாம் . " என்றார் .


அவள் அமைதியாக நின்றாள் . " என்ன சொன்னாலும் , வாய மட்டும் தொரக்காத . " என்று கத்தி விட்டு சென்றார் அவர் .


அதை கேட்டவளுக்கு , ஒரு பக்கம் சந்தோஷமாகவும் , இன்னொரு பக்கம் கவலையாகவும் இருந்தது .


நாட்கள் உருண்டோடின , இதோ , இப்போது ஆதியும் கண்மணியும் காதலர்கள் . இந்த காலத்து காதலர்கள் , பீச் , பார்க் என்று சுற்றுவது போல் , அவர்இள் இருவரும் வயல் , ஆறு என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்  .



" கண்மணி . " ஆதி .


" ம்ம்ம் . " கண்மணி .


" கண்மணி . " ஆதி .


" என்னங்க . " கண்மணி .


" இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாமா . "  ஆதி .


" என்னங்க . உங்க அம்மா ஒத்துக்குவாங்களா . " கண்மணி .


" நான் சொன்னா , ஒத்துக்குவாங்க . " ஆதி .

" அன்னிக்கு உங்க கூட வந்ததுக்கே உங்க அம்மா திட்டுனாங்க . உங்க தங்கச்சி அடிச்சுட்டா , " கண்மணி .


" விடு டி . அதெல்லாம் ஒத்துக்குவாங்க . " ஆதி .


" ஆனா பயமா இருக்கு . " கண்மணி .


" எதுவும் ஆகாது டி . நான் தான் உன்னோட புருஷன் . போதுமா   " ஆதி .


" ம்ம்ம்ம்  . " கண்மணி .


" சிரி டி . செல்லமே . " என்றவன் அவளை தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டான் .



" அடியேய் . " ஆதி .


" என்னங்க . " கண்மணி .


" இல்ல டி , நீ எப்டி இவ்ளோ அழகா இருக்க . " ஆதி .


" அப்போ , நா அழகா இருக்கறதுனால தான் காதலிக்குறிங்களா . " கண்மணி முகத்தை சுறுக்கி கேட்டாள் .


" லூசு பொண்டாட்டி . நா உனக்கு பொருத்தமானவனா டி . " ஆதி .


" என்னது . நீங்க தான் வெளி நாடெல்லாம் போய் படிச்சுருக்கிங்க . நா அழகு மட்டும் தான் . நீங்க மனசலவுல அழகு . அதுமட்டுமில்லாம , நீங்களும் அழகா தான் இருக்கிங்க . " கண்மணி சிறு வெடக்கத்துடன் கூறினாள் .


" அழகா இருக்கனா டி . " ஆதி கண்மணியை நெறுங்கி அமர்ந்து கேட்டான் .


" ம்ம்ம் ஆமா . " கண்மணி .


" ஓஓஓஓஓ . அப்டிங்க்ளாங் மேடம் . " ஆதி .


" ஆமாங்க . " என்று அவன் முகத்தை பார்த்தாள் .


அதில் என்ன தெரிந்ததோ , அவளும் பார்த்தாள் . சிறிது நேரத்தல் , அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டாள் .


" என்ன மேடம் குனிஞ்சுக்குறிங்க . " ஆதி .


" என்னங்க..... " என்று அவள் சினுங்கினாள் .


" ஒனுல்லங்க மேடம் . " என்றவன் அவள் மடியில் படுத்துக் கொண்டான் .


" அண்ணாஆஆஆஆஆ . " பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது .

யாரென திரும்பி பார்த்தால் , அங்கு ஈஷ்வரி நின்று கொண்டிருந்தாள் .
" என்ன அண்ணா . போயும் போயும் இவளையா காதலிக்குற . " என்று கேட்டாள் .

" ஏன் . இவள லவ் பண்ண கூடாதா . " ஆதி .


" இவ எங்க , நீங்க எங்க . " ஈஷ்வரி .

" என்ன ஈஷ்வரி . " ஆதி .


" ஆமா அண்ணா . கேவலம் , வேலக்காரி மக தான . " ஈஷ்வரி .

அடுத்த நொடி , இவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது . ஆதி தான் அவளை அடித்து இருந்தான் . " என்ன டி , நெனச்சுட்டு இருக்க . இவ என்னோட பொண்டாட்டி . " ஆதி .


" போயும் போயும் , இவுளுக்காக என்ன அடுச்சுட்டிங்கள்ள . விட மாட்டேன் . ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆக விட மாட்டேன் . " என்ற ஈஷ்வரி வீட்டிற்கு சென்று விட்டாள் .


அவள் சென்றதும் இவன் கண்மணியை பார்த்தான் . அவள் கண்களில் நீர் திரண்டு இருந்தது . " என்னங்க . " என்று கண்மணி அழுகையுடன் அழைக்க , அவன் இவளை அனைத்துக் கொண்டான் .


" பயப்படாத டி . ஈஷ்வரி போய் சொல்ல மாட்டா . " ஆதி .


" எப்டி சொல்றிங்க . " கண்மணி .


" அவ ஒரு பையன காதலிக்குறா .  அது எனக்கு தெரியும் . அவ போய் இத சொன்னா , நான் போய் இத சொல்லிருவேன் . " ஆதி .


"ஓஓஓஓ . இருந்தாலும்  , அத்த ஒத்துக்க மாட்டாங்கள்ள . " கண்மணி .

" ஒத்துக்க வச்சுரலாம் . " என்ற ஆதி , அவளை இறுக்கி அனைத்துக் கொண்டான் .


★★★★★★

பார்க்கலாம் . கண்மணிக்கும் ஆதிக்கும் திருமணம் நடக்குமா . இல்லை நடக்காதா . பார்க்கலாம் . வெகு விரைவில் .


( 15 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள்👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻


ஈஷ்வரி தன் வீட்டிற்குள் நுழைந்தாள் . அங்கு , அவளது தாயும் தந்தையும் , அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் .


" அம்ம்மாஆஆஆஆஆ . " என்று கத்தினாள் ஈஷ்வரி .


" என்ன டி . எதுக்கு இப்டி கத்துற . " கமலம் .


" அம்மா , அந்த கண்மணி அண்ணாவ காதலிக்குறா . " என்றாள் இவள் .


" என்னது . "  விஷ்வநாதன் .


" ஆமா அப்பா . அவங்க ரெண்டு பேரும் பேசுறத , நானே கேட்டேன் . " ஈஷ்வரி .


" வீட்டுக்கு வருவான்ல . அப்புறம் இருக்கு . " என்றார் அவர் .



சில மணிகளில் ஆதியும் வீட்டிற்குள் நுழைந்தான் .


" என்ன ஆதி . நீ ஒரு பொண்ண காதலிக்குறியாமே . " விஷ்வநாதன் .


அவனுக்கு கோபம் வந்தது , தன் தங்கையின் மேல் . " ஆமா அப்பா . " ஆதி .

" அது கண்மணியா . " விஷ்வநாதன் .


" ம்ம்ம் . ஆமா அப்பா . " ஆதி .


பெரு மூச்சை வெளியிட்டவர் , " ஆதி , உனக்கு வேற ஒரு பொண்ணு பாத்துருக்கேன் . அவ வேண்டாம் . நாளைக்கு பொண்ணு பாக்க போரோம் . " விஷ்வநாதன் .


" அது முடியாது அப்பா . " ஆதி .

சிரித்தவர் , " முடியும் ஆதி . நீ நெனச்சா முடியும் . " என்றவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார் .


அவர் சென்றதும் , அவனின் தாயும் அவனை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து அகன்றார் .


ஈஷ்வரியும் அவனை பார்த்து ஒரு கேளி சிரிப்பை உதிர்த்து விட்டு அங்கிருந்து சென்றாள் .


ஆதி மீண்டும் வெளியேறிவிட்டான் .



★★★★★

கண்மணி வீட்டிற்கு செல்லாமல் , ஒரு குலத்தின் அருகே அமர்ந்து இருந்தாள் . அவளை தேடி வந்தான் ஆதி . " கண்மணி . " என்று ஆதியின் குரல் கேட்டதும் திரும்பினாள் .


" என்னங்க . " என்று கண்மணி எழுந்து நின்றாள் .


" இன்னிக்கு நைட்டே நம்ம ஊர விட்டு போரோம் . " ஆதி .


கண்மணி அதிர்ந்து நின்றாள் . " என்னங்க . வீட்ல ஒத்துக்கலையா . " கண்மணி .


" ஆமா . அம்மா கூட எதுவும் சொல்லல . போரோம் . நைட் ஒரு மணிக்கு  உன்னோட வீட்டுக்கு பின்னாடி வரேன் . தயாரா இரு . " ஆதி .


" இதெல்லாம் செரி வருமாங்க . " கண்மணி .


" அதெல்லாம் வரும் . " ஆதி .


ஆதி தன் முடிவில் உறுதியாக இருந்தான் . ஆனால் , அவன் செய்ய நினைப்பதை செய்தால் அவர்களின் உயிருக்கே ஆபத்து என்று பாவம் அவன் அறியவில்லை .



★★★★★★


இப்போது :


" என்ன நிருத்திட்ட . " நிலா .

சிரித்த அந்த உருவம் , " இது வரைக்கும் போதும் . என்ன , என்ன ஏமாத்த பாக்குரியா . " நெகெட்டிவ் எனர்ஜி .


அதை கேட்டு சிரித்தாள் நிலா . " ஓஓஓஓ . உன்ன ஏமாத்த பாக்குறது , உனக்கு இப்போ தான் புரியுதா . சில்லி கர்ல் . " நிலா .

" ஏய்ய்ய்ய் . " நெகெட்டிவ் எனர்ஜி .

" ஷ்ஷ்ஷ் . கத்தாத . காது வலிக்குது . " நிலா .

" போதும் . நீ இனி என்ன சொல்ல போறன்னு நா சொல்லட்டா . " நிலா .

" என்ன சொல்ல போற . " நெகெட்டிவ் எனர்ஜி .


" என்ன ஆகி இருக்கும்னு . " நிலா .


" நீ எப்டி சொல்லுவ . " நெகெட்டிவ் எனர்ஜி .


" ஐயோ நெகெட்டவ் எனர்ஜியே . யூ ஆர் சோ மக்கு   . " நிலா .


" ஏய் எரும . நீ நெகெட்டிவ் எனர்ஜிக்கே பல்ப் குடுக்குறியா . முதல்ல என்னன்னு சொல்லித் தொல . " ஜெனி .

" இதோ , இது என்னதுன்னு தெரியுமா . " நிலா .

" என்னது . " சூர்யா .


" இதுக்கு பேர் , ஹிஸ்ட்ரி மெமரி . " நிலா .

" என்ன . " ஜான் .

" இதுக்கு பேர் ஹிஸ்ட்ரி மெமரி . இதுல தான் நம்ம உலகத்துல நடக்குற எல்லாமே பதிவாகும் . என்னோட ஹிஸ்ட்ரி , உன்னோடது , ஏன் இந்த நெகெட்டிவ் எனர்ஜியோட ஹிஸ்ட்ரி கூட இதுல இருக்கும் . நம்லோட ஹிஸ்ட்ரில எதாவது ஒரு லைன் சொன்னாலும் , இது , அது எந்த டைம் , டேட் , ப்லேஸ்னு எல்லாமே சொல்லிரும் . நான் இங்க கொஞ்ச நேரம் இல்லல . சோ , நான் போய் அத பாத்துட்டு வந்துட்டேன் . " நிலா .


" நிலா . ஆர் யூ மேட் . " ஜெனி .

" ஓகே . என்ன நடந்துதுன்னு சொல்லு . " ஜெனி .


" என்ன நடந்துச்சு . கண்மணி ஓட அம்மாக்கு எல்லாமே தெரிஞ்சுரும் . கண்மணி ஓட அம்மா , அவங்களோட லவ் அ ஒத்துக்க மாட்டாங்க . சோ , கண்மணியும் ஆதியும் ஓடி பேய்ருவாங்க . ஆதி ஓட அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்ச ஒடனே ஆதியையும் , கண்மணியையும் கொண்ணுருவாங்க . கொல்லும் போது , என்னோட தாத்தாவும் அங்க இருப்பாங்க . அவங்கள எல்லாம் பழி வாங்குன கண்மணி , இப்போ இங்க வந்துருக்கா . " நிலா .


" லூசு . நீ அங்க போய் , எதையோ மாத்திருக்க . " ஜெனி .

" நா எதையும் மாத்தல . " நிலா .

" நல்லா மோசிச்சு பாரு . நீ எதையோ மாத்திட்ட . நீ சொன்னது எல்லாம் உண்மை தான் . உன்னோட தாத்தா , எல்லாம் . ஆனா , இந்த நெகெட்டிவ் எனர்ஜி சொன்னது  ஆதி ஓட வீட்டுக்கு தெரிஞ்சுருச்சுன்னு தான் சொல்லும் . ஆனா நீ வேர சொல்ற . அப்படின்னா , நீ ஏதோ மாத்திருக்க . ஒவ்வொரு தடவ மெச்யூர்டா இருக்க . ஒவ்வொரு தடவ சின்ன கொழந்த மாதிரி பிஹேவ் பண்ற . " ஜெனி .

" ப்ராமிசா , எனக்கு ஞாபகம் இல்ல டி . " நிலா .

" நீ மாத்திருக்க . " வினு .

நிலா அமைதியாக நின்றாள் . " அப்போ நீ என்ன மாத்துன . " ஜெனி .


" தெரில . " நிலா .

" போ டி . " என்று கத்தினாள் வினு .

★★★★★★

நிலா அப்டி என்ன மாத்திருப்பா . அவ மாத்துனதுனால தான் இவ்ளோ பெரிய ப்ரெச்சனையா . பார்க்கலாம் .



© Ashwini