...

16 views

காதல் பயணம்-2
காதல் பயணம்_2

அஸ்வினும்,சந்தியாவும் ஒரே பேருந்தில் செல்கின்றனர்.பேருந்தின் நடு இருக்கையில் அஸ்வின் அமர்ந்திருக்கிறான்.நடுவில் சந்தியா நின்று கொண்டு இருக்கிறாள்.சந்தியா அஸ்வினை கவனிக்காமல் கைபேசியை பார்த்து கொண்டு இருக்கிறாள்.அஸ்வின் தன் நண்பனான ராமிடம் பேசி கொண்டு இருக்கிறான்.திடீரென போட்ட break ல் சந்தியாவின் கைபேசி கீழே விழுகிறது. அஸ்வின் அந்த கைபேசியை எடுத்து சந்தியாவிடம் கொடுத்தான். அன்று வரை காதலில் நம்பிக்கை இல்லாத அஸ்வின் சந்தியாவின் கண்களை பார்த்ததும் சந்தியா மீது காதல் கொள்கிறான்.

பேருந்து நிறுத்தம் வந்தது. சந்தியா கைபேசியை எடுத்து தந்ததற்கு நன்றி என கூறி விட்டு பேருந்திலிருந்து இறங்கி கல்லூரி நோக்கி செல்கிறாள். அஸ்வினும் ராம் கூப்பிடுவதை கூட கேட்காமல் சந்தியாவை பின் தொடர்கிறான்.சந்தியா கல்லூரிக்குள் சென்று அவளின் வகுப்பறையை தேடி அமர்கிறாள்.அஸ்வின் அவன் கல்லூரிக்கு சென்று விட்டான்.அன்று சந்தியாவுக்கு கல்லூரி அருமையாக சென்றது. நிறைய நண்பர்களை சந்தித்தாள். ரம்யா என்ற தோழி சந்தியாவிற்கு மிகவும் நெருக்கமானாள்.

இங்கு, அஸ்வினிற்கு மூன்றாமாண்டு முதல் நாள். அங்கு ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு கூட பதில் கூறாமல் சந்தியாவை பற்றி நினைத்து கொண்டு இருந்தான். உடனே ராகுல் அவன் என்றும் உணவை பற்றி தான் நினைவு இருக்கும் எவ்வாறு இங்கு நினைவு இருக்கும் என கூறினான்.(ராகும் அஸ்வினுடம் படிக்கும் மாணவன் எந்நேரமும் அஸ்வினை சீண்டி கொண்டே இருப்பான்)உடனே அஸ்வின் கோபம் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான்.

வெளியே சென்றும் அவள் மாலை நமது பேருந்தில் வருவாளா ?
என்று எண்ணி கொண்டு இருந்தான்.
கல்லூரி முடிந்தது. அவலாக முதலாக பேருந்து நிறுத்தம் சென்றான். எப்படியாவது அவளிடம் பேசி விட வேண்டும் என்று சென்றான். அதே போல் அவளும் அதே பேருந்தில் வந்தாள்.

அஸ்வின் சந்தியாவிடம் பேசினானா?
சந்தியாவிற்கு அஸ்வின் மீது காதல் வருமா? அடுத்த பகுதியில் காண்போம்!........



© மனதின்_காதலி