...

1 views

16-18) வஞ்சம் தீர்க்க வருகிறாள். (Last episode)

( 16 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .

நிலா நிகழ்வை மாற்றுவதற்கு முன் :

[ நிலாவே சொல்லிருப்பா . ஆனா , அறையும் கொறையுமா சொல்லிட்டா ]

கண்மணியும் ஆதியும் காதலித்ததை கண்மணியின் தாய் கண்டுபிடித்து விடுவார் . கண்மணி எவ்வளவோ கெஞ்சியும் அவர் , அவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை . அதனால் , எங்கே தன் தாயும் தந்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார்களோ என்ற அச்சத்தில் இருவரும் வேறு ஒரு ஊருக்கு சென்று விடுவார்கள் . அப்படியே மூன்று வருங்கள் கடந்தது . அந்த மூன்று வருடத்தில் ,
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருந்தது . அந்த குழந்தைக்கு " வெற்றி செல்வன் " என்று பெயரிட்டனர் இருவரும் . அப்போது தான் இங்கு ஈஷ்வரிக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தனர் . அந்தை மாப்பிள்ளை யாரென்றால் , கண்மணியும் , ஆதியும் வசிக்கும் ஊர்த்தலைவரின் மகன் . அவனுக்கு ஈஷ்வரியை கொடுக்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்து இருந்தனர் .
அப்படி அவர்களை பார்க்க அந்த ஊருக்கு வரும் போது தான் கண்மணியையும் ஆதியையும் அவர்கள் பார்த்து விடுவார்கள் .  அவர்கள் இருவரையும் , அந்த ஊரின் தலைவரின் முன்னிலையில் கொன்றும் விடுவார்கள் . [ அவர்களின் மகனை காப்பாற்றி விட்டு , இருவரும் இறந்து விடுவார்கள் . ]


இப்டி குட்டியா இருந்தத , பெருசாக்கிட்டா , இந்த நிலா . அப்டி என்ன பன்னா , பாக்கலாம்.....


நிலா மாற்றியதற்கு பின் .

நல்லிரவு ஒரு மணி :


ஆதி கண்மணியின்  வீட்டிற்கு பின்னால் காத்துக் கொண்டிருக்கிறான் . அப்போது தான் கண்மணி ஓடி வந்தாள் . " என்ன டி , இவ்ளோ லேட் ஆ வர . " ஆதி .

" சாரிங்க . அம்மா இப்போ தான் தூங்குனாங்க . " கண்மணி .


" சரி வா போலாம் . " ஆதி . இருவரும் வேறு ஒரு ஊருக்கு செல்கிறார்கள் . அதுவும் அவனின் பைக்கிலேயே . கண்மணி அவனின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் . இருவரும் பக்கத்து ஊருக்கு தான் சென்றிருக்கின்றனர் .

அந்த ஊரின் தலைவர் பெயர் " மகேந்திரன் "  அவருக்கு இரண்டு மகன்கள் . மூத்தவன் " விஷ்வாமித்ரன் " இளையவன் " விஜய ராகவன் " . மூத்தவனுக்கு திருமணம் முடிந்து விட்டது . அவனின் மணைவ " சங்கமித்திரை " மூத்தவனும் , இளையவனும் நேர் எதிர் துருவங்கள் . மூத்தவன் அமைதியானவன் . இளையவனோ , எதற்கெடுத்தாலும் அதிரடி தான் . அது போக , நல்லவனா என்று கேட்டால் , அதுவும் இல்லை . கேடு கெட்ட பொறுக்கி .  பெண்களின் மீது , அவனின்  தவறான பார்வை போகும் .  இது வரை , எவ்வளவோ பெண்களின் வாழ்க்கையை கெடுத்துருக்கிறான் . பார்ப்போம் . இவர்களின் வாழ்க்கையில் , இவன் எப்படி விளையாடுகிறான் என்று .

ஆதியும்  , கண்மணியும் , ஆதியின் நண்பன் பார்த்த வீட்டில் குடியேறினார்கள் . அது ஒரு குடிசை தான் . இருந்தாலும் இருவரின் மனமும் நிறைந்து இருந்தது .

" என்ன டி , பொண்டாட்டி . கல்யாணம் பண்ணிக்கலாமா . " ஆதி .


" ஓஓஓஓஓ . பண்ணிக்கலாமே . " கண்மணி .

அங்கிருந்த ஒரு கோவிலில் இருவரின் திருமணமும் எளிமையாக நடந்தேறியது .


அவர்களின் வீட்டில் :

" ஓய் பேபி . " ஆதி .

" என்னங்க . " கண்மணி .

" செல்லமே , நீ என்னிக்கு ரொம்பபபபப அழகா இருக்க டி . " ஆதி .

" நீங்களும் . "  கண்மணி .

" ஓஓஓஓஓ . " என்று ஓஓ  போட்டவன் , அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான் .

" என்ன ஓஓஓஓ . " கண்மணி .

" பேபிஇஇஇஇ . " ஆதி .

" என்ன பேபி . " கண்மணி .

" பார்ரா..... " ஆதி .

" என்னங்க... " கண்மணி .

" மேடம் பேபினு சொல்றிங்க . " ஆதி .


" நா எப்போ சொன்னேன் . " கண்மணி .

" மக்கு கண்மணி . நீ தான இப்போ , " என்ன பேபி " னு கேட்ட . " ஆதி .

" அது . என்ன பேபி னா , என்ன ஓஓஓ னு கேட்டேன்ல . அந்த மாதிரி தான் கேட்டேன் . " கண்மணி .


" போ பேசாத , என் கிட்ட . " ஆதி .


" என்னங்க . "ஆதி .

" ஒரு தடவையாவது , நீ என்ன பேபினு கூப்ட்ருக்கியா . " ஆதி .

" அப்டிலாம் கூப்ட கூடாது . வேணும்னா மாமானு கூப்டவா . " கண்மணி .


" மாமா னா . கூப்டு . செம்ம கிக்கா இருக்கும்   . " ஆதி .

" ம்ம்ம்ம் . "கண்மணி .

" அப்பறம் , நா உன்ன என்னனு கூப்புட்ரது . " ஆதி .

" கண்மணினு கூப்டுங்க . " கண்மணி .

" போடி . " ஆதி .

" அப்போ..... கண்ணம்மா னு கூப்டுங்க . " கண்மணி .

இதை கேட்டதும் இவளை அவன் ஒரு புருவத்தை உயர்த்தி பார்த்தான் . " என்னங்க . " கண்மணி .

" ஒன்னுல்ல " என்ற ஆதி , அவளை அனைத்துக் கொண்டே படுத்து விட்டான் .


அப்படியே மூன்று வருடங்கள் சென்றன .

இப்போது அவர்களுக்கு ஒரு மகன் . அவனுக்கு " வெற்றி செல்வன் " என்று பெயரிட்டனர் .

" டேய் வெற்றி . அப்பாவ மாதிரியே , குறும்பு டா உனக்கு . " என்று தன் செல்ல மகனை திட்டினாள் கண்மணி .

" என்ன டி . என்னோட பையன திட்டுரியா . " ஆதி .

" போங்கங்க . இவன் ரொம்ப சேட்ட பண்றான் . " கண்மணி .

" கண்மணி , கொழந்தைங்கனா அப்டி தான் இருப்பாங்க . " என்ற ஆதி அவனின் மகனை தூக்கிக் கொண்டான் .


" ஓய்ய்ய் . " ஆதி .

" என்னங்க . " கண்மணி .

" நான் போய் வீட்டுக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வந்தர்ரேன் . " என்ற ஆதி , மளிகை வாங்க சென்றான் .


தலைவரின் வீட்டில் :

" அப்பா . நான் வெளிய போய்ட்டு வந்தர்ரேன் . " வஜய ராகவன் .

" ம்ம்ம் "  மகேந்திரன் .

சில வருடங்களாக மகனின் போக்கு அவருக்கு பிடிப்பதில்லை . அதனால் , அவனிடம் பேசுவதும் இலைலை .


இவன் தனது ரதத்தில் [ சாருக்கு ரதம் இல்லாம வெளிய வர பிடிக்காது . பெரிய ராஜானு நெனப்பு.... ]  சென்று கொண்டிருந்தான் . அப்போது , எதிரே வந்த ஆதி , இவனுக்கு வணக்கம் சொல்லாமல் நேரே சென்று கொண்டிருந்தான் . இதை பார்த்தவுடன் அவனுக்கு வந்ததே கோபம் , " டேய் , எவ்ளோ பெரிய ஆள் வந்துட்டு இருக்கேன் . வணக்கம் சொல்ல மாட்டியா டா . " கத்தினான் விஜய ராகவன் .


ஆதி நின்று , அவனை ஏறிட்டு பார்த்தான் . " என்ன டா . அப்டி பாக்குற . " விஜய ராகவன் .


" மரியாத தரதுக்கு வயசு வேணும் . " ஆதி .

" டேய் . " வஜய ராகவன் .

" என்ன டா . " ஆதி சட்டென கேட்டு விட்டான் . அதை கேட்ட இவன் " டேய் , இவன தூக்குங்க டா . " விஜய ராகவன் .

அவர்களும் அவனை பிடிக்க வர , அவனோ அவர்களிடம் சன்டையிட துவங்கினான் . ஒருவன் வெற்றியை தூக்கி , அவன் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு " ஆதியை வரச் சொல்ல , அவனும் வந்தான் . வேறு வழி இல்லாமல் , அவர்களுடன் சென்றான் ஆதி .

★★★★★★★★★


இன்னிக்கே ஃப்லாஷ் பாக் முடிச்சுரலாம்னு நெனச்சேன் . பட் முடியலப்பா . இன்னும் ஒரு எபி , இல்லன்னா ரெண்டு எபில முடிஞ்சுரும் . பாக்கலாம் . ஆதிக்கு என்னாகும்னு....




( 17 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள்👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻


ஆதியை இழுத்து சென்றனர் விஜய ராகவனின் ஆட்கள் . அதை அங்கு சென்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் பார்த்து விட்டு சென்றனர் . ஆனால் , ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை . இச்செய்தி , அந்த மக்களின் வழியாகவே கண்மணியின் காதுக்கக்கு சென்றது .


விஜய ராகவனின் வீட்டில் :

" என்ன டா . வணக்கம் சொல்ல சொன்னா , மரியாத தர முடியாதுன்னு திமிரா சொல்றியா . " விஜய ராகவன் .


" ஆமா டா . என்ன பண்ணுவ . " ஆதி .

" நீ என்னோட பொறுமைய ரொம்ப சோதிக்குற . டேய் , இவனோட பையன தூக்கிட்டு வாங்க டா . " விஜய ராகவன் .


வெற்றி செல்வன் வந்தான் . அவனின் நெற்றில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது .


" டேய் . என்னோட பையன ஏன் டா இப்டி பண்ணுன . " ஆதி .


" டேய்  , இவனோட பையன தூக்கிட்டு போங்க டா . இவன் எதாவது தப்பிக்க முயற்சி பண்ணுனா இவன கொண்ணுருங்க . " என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவ்வீட்டினுள் நுழைந்தாள் கண்மணி .


கண்மணியை பார்த்ததும் ஆதி அதிர , விஜய ராகவனின் கண்கள் அவள் மீது மொய்த்துக் கொண்டிருந்தது .


கண்மணி ஆதியின் அருகில் வந்தாள் . " எதுக்கு டி இங்க வந்த . " ஆதி .


" உங்கள விட்டுட்டு , நான் மட்டும் எப்டி இருக்க முடியும் . " என்றவள் விஜய ராகவனின் பக்கம் திரும்பி " தயவுசெஞ்சு என்னோட புருஷன விட்ருங்களேன் . " கண்மணி .


" விடனுமா . " விஜய ராகவன் .


" ம்ம்ம்ம் . ஆமா . " கண்மணி .


" ம்ம்ம் . விடுரேன் . ஆனா , நான் விட்டா எனக்கு என்ன கிடைக்கும் . " விஜய ராகவன் .


" என்ன வேணும் , தரேன் . என்னோட உயிர கூட தரேன் . ஆனா என்னோட புருஷனையும் மகனையும் விட்டுடுங்க . " கண்மணி .


" எனக்கு எதுக்கு , உன்னோட உயிர் . எனக்கு நீ தான் வேணும் . " என்றான் சிரித்தவாறு . இதை கேட்ட மற்றவர்கள் அதிருந்து நின்றனர் .



ஆதி பொங்கி எழுந்து விட்டான் . " டேய் . என்ன டா நெனச்சுட்டு இருக்க . அவ என்னோட பொண்டாட்டி டா . " ஆதி .


" இருத்துட்டு போகட்டும் . ஐ டோன்ட் கேர் . " என்றவன் கண்மணியிடம் திரும்பி " நீ சொல்லு.... ஆமா , உனனோட பேர் என்ன . " விஜய ராகவன் .


" க்க்க்கண்மணி . "

" ஓஓஓஓ . உனக்கு , கரெக்டா தான் பேர் வெச்சுருக்காங்க . ஆனா , கண்ணழகி னு பேர் வெச்சுருந்தா , இன்னும் நல்லாருக்கும் . " என்றவன் அவளின் கன்னத்தில் தன் கையை வைத்து தடவினான் . அதில் கூசியவள் , அவன் கைகளை தட்டிவிட்டாள் .

" பாரு டா . கண்ணழகிக்கு கோவம் வருது . " என்றவன் தனது அடியாட்களை பார்த்து " டேய் , இவள தூக்கிட்டு போங்க டா . " என்றான் .


அப்போது வெளியே வந்தார் விஜய ராகவனின் தந்தை மகேந்திரன் .
" டேய் விஜயா . இது தப்பு டா . உனக்கு நல்ல பொண்ணா பாத்துருக்கேன்ப்பா . விட்ருப்பா அந்த பொண்ண . " என்றார் அவர் [ அது வேற யாரும் இல்லங்க . ஈஷ்வரி தான் . ]


" யோவ் , போய்யா . அப்பாவாச்சேனு பாக்குறேன் . இல்லன்னா நீ என்னிக்கோ போம் சேந்துருப்ப . " விஜய ராகவன் .


அதை கேட்ட அவர் அமைதியாகி விட்டார் . விட்டால் இவரையே கொன்றுவிடுவானல்லவா....


கண்மணியை விஜய ராகவனின் ஆட்கள் தூக்கிக் கொண்டு சென்றனர் . அதை பார்த்த ஆதி கோபமாக அவனை முறைக்க , அவனோ " என்ன டா மொறைக்கற . " விஜய ராகவன் .


அவன் கண்கள் ரத்தமென சிவந்து இருந்தது . தனது , மகனா அல்லது தனது மனைவியா . யோசித்தான் . கடைசியில் மனைவியே பெரிதென நினைத்தான் .  எழுந்து நின்று அவனை பார்த்து முறைத்தான் . " என்ன டா . உன்னோட , பையன் வேணாமா . " விஜய ராகவன் .


கண்ணை மூடி யோசித்தான் . " எனக்கு என்னோட பொண்டாட்டி தான் டா முக்கியம் . " என்று கத்தியவன் , அவனை  எட்டி உதைத்தான் . இவன் உதைத்ததில் அவன் இரண்டடி தூரம் சென்று விழுந்தான் . இவனின் சப்தம் கேட்டு , விஜயா ராகவன் அடியாட்கள் ஓடி வந்தனர் . அவர்களிடமும் சண்டையிட்டான் .



கண்மணி , அவர்களிடம் இருந்து உப்பித்து வெளியே ஓடி வரும் சமையம் , ஆதியின் வயிற்றில் ஒருவன் கத்தியை வைத்து குத்தினான் . குருதி வழிய , கீழே சரிந்தான் ஆதி . அதை தன் கண்களால் பார்த்தான் வெற்றி . தன் தந்தையை பார்த்து பயந்த அவன் அதிர்ந்து அழ தொடங்கினான் அவன் . " அப்ப்பா " என்று கூறி அவன் முன்னால வர அரில் இருந்த ஒரு கத்தி அவனின் கழுத்தை கீறியது . அதை பார்த்த கண்மணிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல் , கண்கள் மூடாமல் பார்த்திருந்தாள் .


அன்று மதுரையை எரித்த கண்ணகியை போல் , அவளும் தனது கணவனின் இறப்புக்கு நீதி கேட்டாள் . இன்று கண்மணியும் தனது கணவனின் இறப்புக்கு நீதி கேட்க போகிறாள் . இதில் ஒரு வித்தியாசம் என்னவெனில் , ஆதி கோவலனை போல் இல்லை .


" என்னோட குடும்பத்தையே அழிச்சுட்டல்ல . உன்னோட குடும்பத்த அழிக்காம விட மாட்டேன் . உன்னோட வம்சம் என்னோட கையால தான் அழியும் . " என்றவள் அருகில் இருந்த கத்தியை எடுத்து , தனன்னை மாய்த்துக் கொண்டாள் .


★★★★★


இதை கூறி முடித்தது , அந்த உருவம் .
" நான் என்ன மாத்துனேன்னு , எனக்கு புரிஞ்சுருச்சு . " நிலா .


" என்ன டி மாத்துன . " வினு .


" ஈஷ்வரிய அங்க வர வச்சது நான் தான் . இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் நான் தான் . " நிலா .

" என்ன மாத்துன . புரியல . " ஜெனி .


நிலா மாற்றிய காட்ச்சி :

நிலா ஆதியையும் கண்மணியையும் தேடிக்கொண்டு வந்தாள் . அப்போது , அந்த வழியே வந்த ஈஷ்வரியை பார்த்து " எக்ஸ்க்யூஸ்மீ . " என்று அவளை அழைத்தாள் .


" என்ன . " என்று திரும்பி பார்த்தாள் ஈஷ்வரி .  [ நோட தட் காய்ஸ் . முன்னாடி , ஒரிஜினலா என்ன நடந்துருக்கும்னும் சொல்றேன் . ]


ஒரு குறிப்பிட்ட இடம் பெயரை கேட்டு , அது எங்கு உள்ளது என்று கேட்டாள் நிலா .

" வாங்க காமிக்குறேன் . " என்று அழைத்து சென்றாள் ஈஷ்வரி .

அங்கு தான் ஆதியும் கண்மணியும் அமர்ந்து இருப்பார்கள் . அதை நிலா ஒளிந்து இருந்து பார்ப்பாள் . ஈஷ்வரி ஆதியை பார்த்து விடுவாள் .


உண்மையாக நடந்தது :

ஈஷ்வரி அப்போது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள் . அதற்கு பிறகு சிறிது நேரம் கழித்தே , கண்மணியின் தாய் வருவார் . ஈஷ்வரி வந்த பிறகு , ஆதி உடனே வீட்டிற்கு சென்று விடுவான் . ஆனால் , இப்போது ஈஷ்வரி வரவில்லை என்பதால் , நிதானமாக அமர்ந்து பேசினார்கள் . இதை தான் கண்மணியின் தாய் பார்த்து விடுவார் .


★★★★★★

" எனக்கு ஒரு டௌட் . " நிலா .

" என்னது டி . " வினு .

" அதான் , ஆதியோட பையன் செத்துட்டான்ல . அப்புறம் எப்டி , சூர்யா இன்னும் உயிரோட இருக்கான் . " நிலா.....


★★★★★★★




( 18 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .

" எனக்கு ஒரு டௌட் . " நிலா .

" என்னது டி . " வினு .

" அதான் , ஆதியோட பையன் செத்துட்டான்ல . அப்புறம் எப்டி , சூர்யா இன்னும் உயிரோட இருக்கான் . " நிலா.....


" சூர்யா எங்க வாரிசு இல்ல . " அந்த உருவம் .

" அப்புரம் . " நிலா .

" சூர்யா , ஈஷ்வரிக்கும் விதுரனுக்கும் [ அதான் ஆதி சொன்னான்ல , ஈஷ்வரி ஒரு பையன காதலிக்குறான்னு . அவன்தான்.... ] பொறந்த கொழந்தையோட வாரிசு . " அந்த உருவம் .

" ஓஓஓஓஓ . " என்று ஓஓஓஓ போட்டாள் நிலா .

" நம்ம ஒரு டீல் பேசலாமா . " நிலா .

" என்ன டீல் . " அந்த உருவம் .

" நான் உன்னையும் ஆதியையும் சேத்து வைக்குறேன் . " நிலா .

" என்ன டி . அது என்ன உன்னோட ஃப்ரெண்டா . ஃப்ரெண்ட் மாதிரி பேசுற . " வினு .

" நீ போடி . " நிலா .

" ஓகே . எப்டி சேத்து வப்ப . " விஷ்வா .

" டைம் ட்ராவல் பண்ணி சேத்து வக்குலாம் . " நிலா .

" ஓகே . யார் யார்லாம் போறிங்க . " ஜான் .

" நானும் நிலாவும் போறோம் . " சூர்யா .

" ஓகே . " ஜான் .

" பத்ரமா போய்ட்டு வாங்க . " என்று வினு கூறினாள் .

" ம்ம்ம் . " என்றவள் , ஒரு டைம் மிஷினை கையில் எடுத்தாள் .


அதில் ஒரு பட்டனை தட்ட , அது பெரிதாக வரிந்தது . அதில் கிட்ட தட்ட பத்து பேர் பயணம் செய்யலாம் .

அதல் இருவரும் அமர்ந்தனர் . நிலா , ஏதேதோ செய்ய , அது மறைந்தது .


அதை பார்த்து அதிர்ந்தானர் ஜானும் , விஷ்வாவும் . இது வரை அதை அவர்கள் பார்த்தது இல்ல . அதனால் அதிர்ந்தனர் .


பாஸ்ட் :

நிலாவும் சூர்யாவும் , ஆதியும் கண்மணியும் முதலில் சந்தித்துக் கொண்ட இடத்திற்கு வந்தனர் .

" என்ன இடம் நிலா இது . " சூர்யா .

" இங்க தான் , ஆதியும் , கண்மணியும் முதல் முதல்ல பாத்துக்குட்டாங்க . " நிலா .


" இப்போ என்ன பண்ண போறோம் . " சூர்யா .

" எனக்கு தெரிஞ்சு அவங்கள இங்கையே விட்டம்னா காப்பாத்துறது கஷ்டம் . " நிலா .


" என்ன பண்ணனும் . " சூர்யா .


" ரெண்டு ப்ளான் இருக்கு  . ஒன்னு , ஆதியையும் கண்மணியையும் பிரிக்கறது . ஐ மீன் , பாக்க விடாம தடுக்குறது . இன்னொன்னு , அப்றமா சொல்றேன் . " நிலா .

" ம்ம் ஓகே . இப்போ என்ன பண்ணனும் . " சூர்யா .


" நீ ஆதிக்கு பதிலா , கண்மணிய பாக்கனும் . அதாவது , ஆதிய பாக்குறதூக்கு பதுலா , அவ உன்ன பாக்கனும் . " நிலா .

" அது எப்டி . " சூர்யா .

" என்ன எப்டி . அவ ஆதிய பாக்க கூடாது . " நிலா .

" ஓகே . " சூர்யா .

" இந்தா இந்த ப்ரேஸ்லெட் போட்டுக்கோ . இந்த பட்டன் அழுத்துனா , நீ யார் கண்ணுக்கும் தெரிய மாட்ட . " நிலா .

" இது எப்டி உன் கிட்ட வந்துச்சு . " சூர்யா .

" சுட்டுட்டேன் . " நிலா .

" யார் கிட்ட இருந்து . " சூர்யா .

" கவர்ன்மென்ட் கிட்ட இருந்து . இப்போ இது எல்லாம் முக்கியமா . போய் ஆதிய கண்மணி பாக்குறத நிறுத்து . " நிலா .

" ஓகே . " என்று கூறி , அவன் செல்வதற்குள் , கண்மணியை ஆதி பார்த்து இருந்தான் .

" பாத்துட்டாங்க . அடுத்த ப்ளான் . " சூர்யா .

" வா , "  என்று கூறி அவனை டைம் மிஷினில் ஏறச் செய்தாள் . அதில் ஏறி , டைமும் டேட்டும் வைத்தவள் , ஓகே பட்டனை அழுத்த அவர்இள் மறைந்தனர் .

★★★★★★★★

நிலாவும் சூர்யாவும் , ஆதியும் கண்மணியும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர் . [ அதான் , ஆதியையும் கண்மணியையும் ஈஷ்வரி பாத்தாள்ள , அதுக்கு கொஞ்சம் முன்னாடி . ]


கண்மணியும் ஆதியும் அங்கு அமர்ந்து இருந்தனர் .

" ஆதி . " என்று அழைத்தாள் நிலா .

அதை கேட்டு அதிர்ந்த இருவரும் திரும்பினார்கள் . அங்கு நின்று இருந்த நிலாவையும் சூர்யாவையும் வித்தியாசமாக பார்த்தனர் .

" யார் நீங்க . உங்க ரெண்டு பேரையும் இதுக்கு முன்னாடி நான் பாத்தது இல்லையே . " ஆதி .


" ஆதி , என்னோட பேர் நிலா , அன்ட் இது சூர்யா . நாங்க ரெண்டு பேரும் ஃப்யூட்சர்ல [ future ] இருந்து வந்துருக்கோம் . " நிலா .


" வாட் . ஆர் யூ மேட் . " ஆதி .

" நோ ஆதி . இப்போ நீங்க எங்க கூட வாங்க . " நிலா .

" எதுக்கு . " ஆதி .


" நீங்க எங்க கூட வரலன்னா , நீங்க செத்துருவிங்க . "  நிலா .


" நான் எப்டி இத நம்புரது . " ஆதி .

" இதோ , இது தான் டைம் மிஷின் . இதுல தான் நாங்க டைம் ட்ராவல் பண்ணி வந்தோம் . " நிலா .

" அப்போ டைம் மிஷின் எல்லாம் உண்மையா . " ஆதி .

" எஸ் . உண்மை தான் . " நிலா .


" அப்டி என்ன தான் நடந்துச்சு . " ஆதி .

நிலாவும் நடந்த அனைத்தையும் கூறினாள் . அதை கேட்டு அதிர்ந்தான் ஆதி . தன் அருகில் இருந்த கண்மணியை தன் தோளோடு சேர்த்து அனைத்துக் இஒண்டான் . அவளும் தான் .


" இப்போ கண்மணி நெகெட்டிவ் எனர்ஜியா வந்து , என்ன கொல்லனும்னு நினைக்குறா . " நிலா .


" நெகெட்டிவ் எனர்ஜினா . " ஆதி .

" பேய் . " நிலா .

" என்ன நானா . அதுவும் உங்களையா..... " என்று கண்மணி கேட்டாள் .


" ஆமா . நீங்க தான் எங்க கிட்ட எல்லாத்தையும் சொன்னிங்க . அன்ட் சூர்யா தான் ஈஷ்வரியோட வாரிசு . " நிலா .


ஆதி அவனை உற்று பார்த்தான் . பார்க்க கொஞ்சம் ஆதியை போலவும் , கொஞ்சம்  அவன் தந்தையை போலவும் இருந்தான் .


" ஹாய் ஆதி . " சூர்யா .


" ஹாய் . " ஆதி .


டைமை பார்த்த நிலா , " வாங்க போலாம் . " என்று கூறி , அவர்களை டைம் மிஷினில் ஃப்யூட்சர்கு [ future ] கு கூட்டி சென்றாள் .


2010  :

நால்வரும் 2010 கு வந்தனர் . " இந்தாங்க . இந்த ப்ரேஸ்லெட் போட்டுக்கோங்க . " என்று கூறி அந்த ப்ரேஸ்லெட்டை ஆன் செய்ய , அவர்கள் நால்வரும் மறைந்தனர் . யவர் கண்களுக்கும் தெரியாமல் .

" இங்க பாருங்க . நீங்க வந்துருக்கறது 2010 . உங்குளுக்கு என்ன வேணுமோ , அத நாங்க செஞ்சு குடுத்துருவோம் . அதுக்கு அப்ரம் , நாங்க திரும்பி 2265 கே போய்ருவோம் . " நிலா .

" தேங்க் யூ . " ஆதி .

" ஆதி . எங்குளுக்கு தேங்க் யூ லாம் வேணாம் . எங்குளுக்கு , தேவையான நேரத்துல , உங்க உதவி வேணும் . என்ன ஏதுன்னு கேக்காம பண்ணனும் . பண்ணுவிங்களா . " நிலா .


" கண்டிப்பா நிலா . எங்க உயிர காப்பாத்தி குடுத்து இருக்க . கண்டிப்பா பண்ணுவோம் . " கண்மணி .

" தேங்க் யூ கண்மணி . " என்றவள் , தனது உடை குள் மறைத்து வைத்து இருந்த ஆதியின் சர்டிஃபிகேட்சை [ certificate ] எடுத்து , ஆதிக்கு கொடுத்தாள் .


" இது எப்டி உன் கிட்ட வந்துச்சு . " ஆதி .

" டைம் ட்ராவல் பண்ணி , எதுக்கு இருக்கட்டுமேன்னு எடுத்து வச்சுட்டேன் . " நிலா .

" எப்போ டி . " சூர்யா .

" அது , நான் மாத்திட்டு வந்தேன்ல . அப்போவே எடுத்துட்டேன் . " என்றாள் நிலா .


" தேங்க் யூ . அப்புறம் , இந்தாங்க . செலவுக்கு வச்சுக்கோங்க . " என்று கூறி , பணத்தை எடுத்து கொடுத்தாள் .

" இது எப்டி டி உன் கிட்ட . " சூர்யா .

" டைம் ட்ராவல் தான் . " என்று கூறி சிரித்தாள் .

அவனும் அதை சிரித்துக் கொண்டே வாங்கி கொண்டான் .

இருவரும் டைம் மிஷின் மூலமாக , மீண்டும் 2265கே வந்து சேர்ந்தனர் .


2265 :

" ஆமா , எங்க போயிருந்திங்க , ரெண்டு பேரும் . " வினு . [ அவங்களுக்கு அது எதுவும் ஞாபகம் இருக்காது . ]

" இங்க தான் இருந்தோம் . " என்றாள் நிலா .

எதுவும் புரியவில்லை  என்றாலும் , அரை குரை மனதுடன் ஒப்புக் கொண்டனர் .

" அடுத்து என்ன ப்ளான் நிலா . " சூர்யா .

" 2019 கு போலாம்னு ப்ளான் . " நிலா .

" வாஆஆஆஆஆட் . " அனைவரும் அதிர்ந்தனர் .

★★★★★★★★

முடிந்தது .


hii makkale.. Story epdi irukkunnu marakkama sollirunga.. ini adutha story varum. adhuvum love story dhan. ongoing ndradhala weakly once dhan varum😊..


© Ashwini