...

3 views

என் ஆருயிரே
அலங்காரம் முதன்மை பெற்று அதில் உள்ளவர்கள் சிறு சிறுபூச்சிகள் போலவே தெரிய அவளின் முதன் முதலில் சாரீ யை கட்டிக்கொண்டு இல்லை இல்லை சுத்திக்கொண்டு இதோ இதோ என அவிழ்ந்திடும் நிலையில் பூஜா கையில் பொக்கே வோடு உள்ளே சென்றாள்
அங்கு அனைவரின் வேற்றுகிரக பார்வையில் இவளோ பே னு முழித்த படி யாரு ணு தெரிலை நம்மை பார்த்துட்டு கைய அசைக்கிறாங்க இருந்தாலும் கை ஆட்டிக்கொண்டே பூஜாவும் போக வேகமாக எட்டு வைத்து நடக்க எதிரே வருபவர் யாரென தெரியாது மோதி கிழே விழுந்தாள் அப்போது அவளை நோக்கி நீண்ட மாநிறத்திற்கு கூடுதல் கலரில் உள்ளங்கையின் அழுத்தம் கூறியது மெல்ல எழுந்தவள் எல்லோரும் பார்த்துவிட்டார்கள் என்று அவனை நிமிர்ந்து பார்க்காமலே நன்றி சார் என்று ஓட அவளின் அரிதான செய்கை கண்டவனின் மனமோ டாலி இன்னும் அப்படித்தான் இருக்க என்று பின்னோடு சென்றான் அங்கு அவள் பொக்கே கொடுப்பதற்காக வரிசையில் நின்றவள் எதர்ச்சையாக திரும்பிடும் தருணம் அகன்ற, பயந்த கண்கள் அவளை நோக்கி நடந்தவனின் சாதாரண நடையை எடுத்துக்கொண்டன. அவள் நெற்றியில் குளிர்ந்த வியர்வை மணிகள் வழிந்தன....