...

3 views

09) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 09 ) 👻👻👻👻👻👻👻👻

உலகமே அழிந்து விட்டது . ஆனாலும் இங்கு நம் நாயகிகள் நிம்மதியாக படுத்து உறங்கி கொண்டிருக்கின்றனர் . நாயகர்கள் எப்போதும் போல் நெகெட்டிவ் எனர்ஜியை என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தனர் . சூர்யாவிற்கு எப்போதும் போல் அந்த காட்சிகள் வந்து கொண்டிருந்தன .


நாயகிகளின் அறையில் :

நாயகிகள் மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் . அப்போது ஒரு சத்தம் . நிலா சட்டென கண் விழித்தாள் . அங்கு இருட்டாக இருந்தது . யாருமே இல்லை . சுற்றிலும் ஆராய்ந்தாள் . அங்கு ஒரு மரப்பலகை கீழே விழுந்திருந்தது . அதை பார்த்து சிரித்து விட்டு அதை எடுத்து மேலே வைக்க அருகில் சென்றாள் . மெதுவாக ஒவ்வொரு அடியாக அவள் எடுத்து வைக்க , அவளருகில் இன்னொருவர் நடக்கும் சப்தம் கேட்டது . அப்படியே நின்று விட்டாள் நிலா . இடது கை மேலே தூக்கி இருக்க , வலது கை பன்னால் நின்றிருந்தது . அப்படியே மார்ச் ஃபாஸ்ட் போவது போன்ற போஸில் நின்று இருந்தாள் நிலா .
அப்படியே தலையை மட்டும் திருப்பி அவள் அருகில் பார்க்க , அவள் முகம் அருகில் ஒரு கோரமான உருவம் . தலை முடியை விரித்து போட்டிருந்தது . கண்கள் பெரிதாக இருந்தது . அதை பார்த்து பயந்தவளாய் " அம்மாஆஆஆஆஆஆஆ " என்று கத்தியவாறு மயங்கினாள் .

நிலா கண் விழித்து பார்க்கும் போது அந்து வீட்டின் பின் இருக்கும் காட்டிற்குள் இருந்தாள் . இருள் சூழ்ந்து இருந்தது . பாதை அவள் கண்களுக்கு அகப்படவில்லை . அப்படியே எழுந்து நின்றாள் . உடல் நடுங்கியது . கை கால் உதறியது . அந்த குளிரிலும் வேர்த்து கொட்டியது . மரமெல்லாம் வேகமாக அசைய , நிலாவிற்கு அந்த சத்தத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை . அப்போது தூரத்தில் ஒரு ஒளி வர , அதை தொடர்ந்து சென்றாள் நிலா . வாயில் கந்த சஷ்டி கவசத்தை முனுமுனுத்தவாறு , பயந்து கொண்டே சென்றாள் நிலா . ( அப்போலாம் கந்த சஷ்டி கவசம் தான் திருக்குறள் மாதிரி . யாரோ எழுதி வச்சுருப்பாங்கன்னு மட்டும் தான் தெரியும் . அத பத்தி வேற எதுவும் தெரியாது . ) 


" நிலா . என்ன டி இது . இப்டி வந்து மாட்டிக்குட்டியே டி . இப்போ எப்டி டி வீட்டுக்கு போவ . ஐயோ , கந்த சஷ்டி கவசம்ல சொல்லிட்டு இருந்தேன் . இப்போ போய் இதெல்லாம் தேவையா . ஆன்டவா , காப்பாத்தப்பா . டைம் மிஷின் செய்ரேன்னு எதையும் கவனிக்காம இருந்துட்டியே டி . லூசு நிலா , கொஞ்சம் கூட அறிவுன்றதே இல்ல டி உனக்கு . எதையும் ஒழுங்கா யோசிச்சு செய்ரியா . முட்டாள் . " என்று தனக்கு தானே திட்டினாள் நிலா . அப்படியே நடந்து கொண்டிருந்தாள் நிலா . அவள் வழியில்  ஒரு  மரம் . அதில் ஜெனியின் உடல் , உயரற்ற உடலாக தொங்கி கொண்டிருந்தது .


" ஜெனிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ " என்று கத்தியவாறு எழுந்து அமர்ந்தாள் நிலா .

மற்றவர்கள் அனைவரும் நிலாவின் அருகில் வந்தனர் . " என்ன டி ஆச்சு . எதுக்கு இப்போ என்னோட பேர ஏலம் விட்ட . " ஜெனி .

" நீ......நீ....... " என்று நிலா தினரினாள் .

" நான் . " ஜெனி .

" நீ......நீ அ.......அங்க த்த்த்த்த்தொங்ங்ங்...கி...ட்டு இருந்த . ந்ந்ந்நீ உ....யி......ரோட இருக்......கியா . ப்ப்ப்ப்ப......ய.........மா..... இ.....ரு...... இருக்கு . " என்று தினரினாள் நிலா .

மற்ற இருவரும் குழம்பி நிற்க , நாயகர்களுக்கு புரிந்து விட்டது . என்ன நடந்திருக்கும் என்று . " எதுவும் இல்ல நிலா . கவல படாத . " என்று சமாதானம் கூறினான் ஜான் .

" பயமா இருக்கு " என்று கூறி தேம்பி தேம்பி அழுதாள் நிலா .

" லூசே . முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லு டி எரும . " வினு .

" அது ......... " என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறி முடித்தாள் நிலா .


அதை கேட்டதும் வினுவும் ஜெனியும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர் . " ஓஓஓஓ . அப்போ நீ லூசு , முட்டாள்னு ஒத்துக்குற . நிலாம்மா , நீ பயத்துல இருக்கும் போது தான் உண்மைய பேசுர . " என்றாள் வினு .

" போடி , எரும மாடு . அவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா .  " என்று கூறி அவளின் தோளில் சாய்ந்து கொண்டாள் நிலா .

" எதுவும் இல்ல பேபி . டோன்ட் வர்ரி . இட்ஸ் ஜஸ்ட் அ ட்ரீம் . இதுக்கெல்லாம் பயப்படுவாங்களா . பாரு , குட்டிம்மாக்கு எவ்ளோ வேர்த்து இருக்கு . " என்று கூறிய வினு அவளின் வேர்வையை தன் கைகளால் துடைத்து விட்டாள்  .

" சரி நிலா . நீ கொஞ்ச நேரம் தூங்கு . நாங்க கெளம்புரோம் . நீங்க ரெண்டு பேரும் கூட இருங்க . " என்ற சூர்யா மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான் .


" டேய் . இப்போ என்ன டா பண்றது . அந்த நெகெட்டிவ் எனர்ஜி , அதோட வேலைய ஆரம்பிச்சுருச்சு . " என்று கேட்டான்  .

" பாக்கலாம் வேய்ட் பண்ணு . பட் எதுவும் ஆகாது , அப்டின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு . " சூர்யா .


" ம்ம்ம் . ஆனா நிலா ரொம்பவே பயந்துட்டான்னு நெனைக்குறேன் .  " ஜான் .


" அப்புறம் பயப்படாம இருப்பாங்களா . " விஷ்வா .

" ம்ம்ம்ம் . " சூர்யா .


" இவுனுக்கு என்ன டா ஆச்சு . பைத்தியம் பிடிச்சுருச்சோ . " ஜான் .

" நீ உன்னோட திருவாய மூடு . " விஷ்வா .

" என் கிட்ட மட்டும் எகிறிக்குட்டு வா . அவன்ட்ட பம்மிட்டு போ . லூசு . " என்று திட்டினான் ஜான் .

" உனக்கு இப்போ என்ன டா ப்ரெச்சன . ஏன் இப்டி இருக்க . எதாவது ப்ரெச்சனன்னா சொல்லலாம்ல . " விஷ்வா .

" அது........ " என்று இழுத்தான் சூர்யா .

" சொல்லு . என்ன ஆச்சு . " ஜான் .

" எனக்கு ஏதோ நிழல் படம் மாதிரி வருது . தலை வலிக்குது . அப்டியே போய் செத்தர்லாமான்னு கூட தோனுது . " என்று அவன் கூறவும் பக்கத்து டேபுலில் இருந்த பூ ஜாடி கீழே விழுந்து நொருங்கவும் சரியாக இருந்தது . அதை மூவரும் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்க . அப்போது அங்கு ஒரு உருவம் வந்தது . அதை பார்த்த சூர்யாவே சற்று மிரன்டு போக , மற்றவர்களோ மிகவும் பயந்து போனார்கள் .

" நீ சாக போறியா . அதுக்கு நா உன்ன விட்ருவன்னா . உன்னோட வேலை எதுவோ அத முடிச்சுட்டு போய் செத்து போ . என்ன வேணாலும் பண்ணு . " என்று கத்திய அந்த உருவம் காற்றில் மறைந்து போணது .


அதை கேட்டு சூர்யா சற்றே குழப்பம் அடைந்தான் . " என்ன டா இது . நமக்கு என்ன வேலை இருக்கு . " என்று யோசித்து கொண்டிருந்தவனுக்கு சிறிது சிறிதாக அனைத்தும் விளங்கியது .
" என்ன டா சொல்லிட்ஞு போது அது . " ஜான் .

" எனக்கு புருஞ்சுது . " சூர்யா .

" என்ன டா புருஞ்சுது . " விஷ்வா .


" என்னால மட்டும் தான் நிலாவ காப்பாத்த முடியும் . " சூர்யா .


" அது எப்டி டா . " விஷ்வா .

அவனும் அவனை பற்றி அனைத்தையும் கூறி முடித்தான் .

" டேய் . எனக்கு பயாமா இருக்கு . " ஜான் .

" எனக்கும் தான் . ஆனா , வேற வழி இல்ல . நிலாவ காப்பாத்த என்ன பண்ணனும்னு கூட எனக்கு தெரில . ஆனா , என்ன வச்சு ஏதோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது . பாக்கலாம் . என்ன ஆனாலும் நிலாவ காப்பாத்துறோம் . " என்றான் சூர்யா .


" என்ன பண்றது . எல்லாம் விதி . நடக்கட்டும் நடக்கட்டும் . " என்றான் ஜான் .


" நடக்கும் . விதி இல்ல , நான் நெனச்சது தான் நடக்கும் . " சூர்யா .


★★★★★★★★★★

" நீ நெனச்சது நடக்குமா . அதுக்கு நா விட்ருவேன்னா . என்ன ஆனாலும் , யாரோட உயிர் போணாலும் , அவ எத்தன ஜென்மம் எடுத்தாலும் அவளோட சாவு என் கைல தான்னு உனக்கு தெரியாது சூர்யா . அவ சாவா . அத நீ உன் கண்ணால பாப்ப . பக்கத்துலையே இருப்ப , ஆனா அவள காப்பாத்த முடியாது . உனக்குன்னு ஒரு வேலை இருக்கு . அத நீ கடைபிடிக்கல . இனி உன்ன நம்பி ப்ரொயோஜனம் இல்ல . நானே நேரடியா கலத்துல இறங்க வேண்டியது தான் . " என்ற அந்த உருவம் காற்றில் கறைந்தது .

●●●●●●●



© Ashwini