ரத்தத்தில் விழுந்த முடிச்சி!!
ரகுவும் ரமணியும் துணி எடுத்த கையோடு டீ குடிக்க எண்ணி ,
பிரபலமான அந்த ஏரியா கடை ஒன்றின் வாசலில் நின்று,
பேசிக்கொண்டிருந்தனர்.
ரமணி கேட்டாள்,
கடையில் கூட்டம் அதிகமாக உள்ளதே,
வேறு கடைக்கு போவலாமா?
பதில் சொல்ல ரகு வாய்திறப்பதற்குள்
வேற கடைக்கு போவலான்டா
என ரகுவை பார்த்து
உறுதியாக சொன்னாள் ரமணி !
ரகு
தலை அசைத்தபடியே
அவளை கூட்டிக் கொண்டு
பக்கத்தில் கூட்டம் குறைவாக இருந்த கடைக்குள் நுழைந்தான் !
மாஸ்டர் அண்ணே ஸ்டாங்கா ரெண்டு டீ என்றாள் ரமணி !
ரமணியும் ரகுவும்
துணி வாங்க கடைக்குள் நுழையும்போது மழை
அதிகமாக இருந்தது !
அந்த மழை,
இந்த நிமிஷம் ,
ஓரளவுக்கு ஒய்ந்திருந்தது !
சூடாக டீ பருகியபடி
டேய் ரகு ,
குடையை பிடிச்சிகிட்டு இப்படியே போனால் பஸ் ஸ்டாண்டு போய்டலாம் புரியுதா?
அதோ தெரியுதே என,
கையை தூக்கி அந்த திசையை காட்டினாள் ரமணி!
ரமணி காட்டிய வழியை உற்று பார்த்த ரகு ,
ஏனோ திடிரென்று,
வித்தியாசமாக நடந்துகொண்டான்
ரமணிக்கும் அது ஏனென்று
புரியவில்லை !
அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரகு,
கையில் வாங்கிய டீயை கூட முழுசா குடிக்காமல்
சட்டை பையில் இருந்த
காசை எடுத்து கொடுத்து விட்டு ,
அக்கா ,
நான் நேரா அப்பாவோட ஒட்டல் கடைக்குத்தான் போறேன் !
எனக்கு,
போலிஸ் வேலை கிடைக்கிற வரைக்கும் அங்கதான் வேலை செய்வேன் !
அத நெனச்சி யார் கவலை பட்டாலும் எனக்கு கவலையில்லை
சொல்லிடு !
அப்புறம்,
நீ பத்திரமா வீட்டுக்கு போயிட்டு ,போன் பண்ணு !
நான் கிளம்பறேன் , என்றான்
சொன்னபடியே அவன்,
அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல்
அங்கிருந்து கிளம்பினான்!
ரகு போனதை எண்ணி குழம்பிய
ரமணி,
ரகு ஏன்
இப்படி சொல்லிட்டு போறான்?
இத,
யார்கிட்ட சொல்லணும்?
அப்படி அந்த திசையில யாரதான் பார்த்தான்?
என,
ஒருதரம் அந்த திசையை பார்த்தாள்
அங்கு
பேருந்துக்காக அவளுடைய மகள் ரம்யா நின்று கொண்டிருந்தாள் !
ஓஹோ,
இவகிட்ட தான் சொல்லனுமா?
இவதான் பிரச்சனைக்கு காரணமா- என
போனை எடுத்து ,
தாமதிக்காமல்
ரம்யாவை அழைத்து !
என்னடி!
உனக்கும் -ரகுவுக்கும் நடந்த நிச்சயதார்த்தம்
கல்யாணத்துல முடியணுமா ? வேணமா?
எனப் பொய்யாய் மிரட்டினாள்!
அதோடு மனசுக்குள்,
இதுக ரெண்டும் இப்பவே சண்டபோட்டுகிட்டு, பேசாமல் இருக்குதுங்களே-
என கவலைப்பட்டாலும்
ரகுவின் குணத்தை மதித்து
மகிழவும் ரமணி தவறவில்லை!
© s lucas