...

5 views

தளைந்தேன் உன்னில் எம்மயிலே
மயில் 2

மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு

- முல்லைக்கலி, கலித்தொகை

மைந்தர்களை மாறு கொண்டு தாக்கித் தம் வலிமையை நிலைநாட்டக்கூடிய காளைகள் சிவபெருமானின் கணிச்சிப் படை போல் கொம்பு சீவப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் தொழுவத்தில் சேர்ந்தாற் போலப் புகுந்தனர்.  

*********************************************


மாதவன், தன் நண்பன் செழியனை  அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில்  மதுரையிலிருந்து அலங்காநல்லூருக்கு விரைந்தான்.

"ஏன் டா மாதவா, கார் இல்லேன்னா என்ன? ரெட் டேக்சி , ஒலான்னு,  இப்ப தான் நெறய டேக்சி இருக்கே போன் பண்ணதும் நிமிசத்துக்கு வந்து  நிக்குமே , இப்படி பைக்கிலே போகணும் என்னடா தலையெழுத்து உனக்கு?  முடியல மச்சான் முதுகுத்தண்டு சில்லுச் சில்லா உடையிற மாதிரி இருக்கு... ஊருக்கு போயி சேரதுகுள்ள  என் உசுரு போய் சேர்ந்திடும் போல. என்னடா ஆசை  உனக்கு பைக்ல ட்ராவல் பண்ண? " முன்னே அமர்ந்து ஓட்டும் மாதவனின் முதுகை அழுத்திப் பிடித்து, கிட்ட தட்ட அவன் மேல்  சாய்ந்து கொண்டே வந்தான் செழியன்.


"மூதேவி, முதுகு செத்தவனே! உன்ன போயி என் கூட கோர்த்து விட்டான் பாரு அவனை சொல்லனும், இந்த வயசில  இப்படி புலம்பிட்டு வர? ஒரு பையனா இருந்துட்டு பைக் ரைடுக்கு இந்த அலுத்து அலுத்துகிற, இலைதழை வாசனையோடு சேர்ந்து மண்வாசனை கலந்து வர காத்த சுவாசிக்கும் போது ஒரு புது தெம்பு கிடைக்கும், எதிரா வீசுர காத்தோடு வண்டியை ஹை ஸ்பீட்லே போனா, அப்படியே பறக்கிற ஃபீல் தான் டா..."  என்று அக்காற்றை நுகர்ந்து, மெய் சிலிர்ப்பை கண்டு கூறிக் கொண்டிருந்தவனை  இடையிட்டு,

"அப்படியே பறந்து, எதிர வர்றவனோட வண்டியில் மோதி சாவ வேண்டியது தான்..." என்றதும் பிரேக் போட்டு நிறுத்தியவன்,

"உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா பன்னி...?" என்று அவன் புறம் திரும்பி கேட்க, " நல்ல வார்த்தை தானே  நல்லாவே வரும்... ஆனால இப்படி பைக்கில் ஹை ஸ்பீட்லே போனா நல்ல வார்த்தை எங்க டா வரும் நாற பயலே! பயமா இருக்குடா மெதுவா போ.  இப்பதான் என் வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வரது, அதுக்குள்ள அல்பாயிசுன்னு சொர்க்கத்துக்கு பைக்க விட்றாத டா... மெதுவா ஓட்டுடா! என் பொண்டாட்டி கூட போக வேண்டிய என்னை இவன் கூட கோர்த்து விட்ட அந்த மகாராசனும்,சிங்கிளா தான் டா பைக்ல சுத்துவான்..." என்று சாபமிட,


"அடப்பாவி! அந்தாளே இன்னமும் கல்யாணமாகலேன்னு கோவில் கோவிலா சுத்துறாரு டா, நீ வேற சாபத்தை விட்டு! கடைசி வரைக்கும் கன்னிச்சாமியாக்கிடாத பாவம் அந்த மனுசன் ...!" தனது குழுவிலுள்ள மேல் அதிகாரிக்காக பரிந்து பேசினான் மாதவன்.

" இனிமே அவருக்கு கல்யாணம் ஆனா, என்ன ஆகலேன்னா என்ன டா? மனுசன் அறுபாதம் கல்யாணம் பண்ற ரேஞ்க்கு வந்துட்ருக்கார், இவருக்கு கல்யாணம் கேக்குதா?இதுல கல்யாணம் வேணும் கோவில் கோவிலா வேற சுத்தறாரா? இது அந்தக் கடவுளுக்கே அடுக்குமா?" என்று புலம்ப இருவரும் சிரித்துக் கொண்டே  அவ்வூரை அடைந்தனர்.

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தை சேர்ந்த சிற்றூர் என்றாலும், உலக புகழ்  பெற்ற  ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் ஒன்று.  வண்ணமற்ற ஆடையில் வலவலத்து கொண்டே ஓடும் ஓடை ஒருபுறம், பச்சைபட்டு உடுத்திய நிலங்களும்  ஒரு புறமென அக்கிரமத்தின் செழிப்பை பறைசாற்றியது.

வளர்ந்த வீடுகளும் அச்சின்ன தெருக்களை அலங்கரித்து இருந்தன . கறவைமாடுகள் இல்லாத வீட்டைப்பார்க்கவே முடியவில்லை. ஊர் நடுவே உள்ள பெரிய மைதானத்தில் கோவில் நிறத்தில் பெயிண்ட் அடித்து இரண்டு பக்கமும் ராமமிட்டு கம்பீரமாக நின்றது வாடிவாசல் ...அதை காணும் ஒவ்வொரு தமிழரின் வீரம் மெய்க்குள் குதித்தெழ, மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும். வீரம் பொறந்த எம்மூர் மதுரையென்றும் மதுரைக்காரனென்றும் மார்த் தட்டி பெருமை பட்டுக்கச் செய்யும் எம்மூர் பெருமையும் ச(ஜ)ல்லிக்கட்டும்.

இருவரும், ஊர் தலைவரின் வீட்டை தேடி விழிக்க, அங்கே வந்து கொண்டிருந்த பெரியவரிடம் விசாரித்தனர்.

"ஐய்யா! இந்த ஊர் தலைவர் வீடு எங்கய்யா இருக்கு? "
அவரோ தன் கைகளை நீட்டி, "இப்படியே போயி, மேற்கால திரும்பி, அப்றம் கிழக்கு பக்கமா திரும்பி மறுப்படியும மேற்கால போனீங்கன்னா வடக்கு பக்கமா...