...

6 views

இடைவேளைக்கு பிறகு

குறுங்கதை : 3

நேரம் சரியாக 11:10 மு. ப

அது ஒரு அரசு உதவி பெற்று இயங்கும் தனியார் நடுநிலை பள்ளி..

காலை பத்து நிமிட இடைவேளை நேரம் அது..

பள்ளி வாளாகமே பார்ப்பதற்கு சீருடை அணிந்த பட்டாம்பூச்சிகளின் மாநாடு போல் தென்பட்டது..

சக மாணவிகளோடு விளையாடிக்கொண்டிருந்த ஒரு மாணவிக்கு மட்டும் அந்த சப்தம் கேட்டது.. சப்தம் வந்த திசை நோக்கி நகர்ந்தாள் அந்த மாணவி..

ஆமாம் அது கழிவறை கதவின் உப்புறம் இருக்கும் மற்றொரு மாணவி திறக்க சொல்லி அழைக்கும் சப்தம்தான் அது..

வேகமாக ஓடிய அந்த மாணவி அவசர அவசரமாக திறக்க முயற்சித்து ஒருவழியாக திறந்து விட்டாள்..

உள்ளே இருந்த மாணவி அழுதுகொண்டே வெளியே வந்து திறந்து விட்ட மாணவியை பார்த்து நீதானே என்னை உள்ள வச்சு பூட்டினது.. இரு மிஸ் கிட்ட சொல்றேன் என ஓடினாள்..


எதுவும் புரியாமல் நின்றிருந்தவள்..
இல்லைடி.. அது நான் இல்ல...


என்று சொல்லிக்கொண்டே ஓட...

இடைவேளை நேரம் முடிந்து வகுப்பு ஆரம்பம் ஆனது..

உள்ளே சென்று இருவரும் அமர..
வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியையின் செவிக்கு இந்த சம்பவம் கொண்டு சேர்க்கபட்டது..

சரி இருவரும் எழுந்து நில்லுங்கள்..

உள்ளே மாட்டிக்கிட்டு நின்ன உனக்கு.. இவ கிட்ட எதும் பிரச்சனையா என கேட்க..

இல்ல எனக்கு அவ கூட எதுவும் பிரச்சினை இல்ல மிஸ்..

பிறகு எதுக்கு அவ உன்ன உள்ள வச்சு பூட்டனும்..

ஒருத்தவங்கங்களுக்கு
ஆபத்து நேரத்துல
ஒடிப்போய் உதவ தெரிஞ்ச அவ..

உன்னை எப்படி அந்த துன்பத்தை
அனுபவிக்க வச்சிருப்பானு நீ நினைக்கிற..

இதை வேற யாரோ கூட
பண்ணிருக்கலாமில்லையா..

நீ கூப்பிட்ட சப்தம் கேட்டுத்தான் உனக்கு அவ உதவ வந்திருக்கா...


So .. Say thanks ..
என மிஸ் சொல்ல..

அவளும் அதற்கு அமோதித்தவளாக..

thanks டி.. என்று சொல்ல..

நீ இன்னும் sorry கூட அவளுக்கு சொல்லனும் இருந்தாலும் பரவாயில்லை..

இதை இதோடு முடிக்கலாம்..
என்ற ஆசிரியை..

சரி எல்லோரும் இடைவேளைக்கு பிறகான பாடத்தை தொடருங்க என்றார்.... ✍️

........... ××××××......

நிஜமாகவே அந்த மாணவி தான் உள்ளே வைத்து பூட்டி இருக்கிறாள் என்றால்...
இனி அந்த தவறை அந்த மாணவி யாருக்கும் செய்ய மாட்டாள்..

காரணம் கண்டிப்பை விட ஒரு மன்னிப்பும்..
தண்டனையை விட ஒரு பாராட்டும்
நிச்சயம் ஒருவரின் தவறை
பிழை திருத்தும்.

அதே நேரம் அந்த மாணவி
தவறொன்றும் செய்யாமல்
தண்டிக்க பட்டிருந்தால்
நிச்சயம் அதுவும் அவளுக்கு அநீதியாய் அமைந்திருக்கும்..

அந்த மாணவியின்
புரிதல் ஒருவேளை சரியானதாகவோ இல்லை
தவறானதாகவோ இருந்திருக்கலாம்..

ஆனால் ஒரு ஆசிரியரின் கணிப்பு என்றும் தவறாவது இல்லை.... ✍️

நன்றி..

மற்றுமொரு குறுங்கதையோடு
உங்களை மீண்டும்
சந்திக்கிறேன்... ✍️

© sha💕jan