...

9 views

மௌனத்தின் பாஷைகள்... (சிறுகதை)
அது ஒரு மழைக்காலம்,

காற்றைக் கிழித்து கொண்டு அந்த கார் பறந்து கொண்டிருந்தது!
உள்ளே இளையராஜா- வின் பாடல்கள் கசிந்து கொண்டிருந்தன,
சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தான் மாதவன்.

நகரின் முக்கிய மனிதர்களில் ஒருவன்,
கடும் உழைப்பாளி,
அதோடு பணத்தின் திமிரும் கூடவே இருந்தது,
காதல் மனைவியுடனும் ஆசை மகளுடனும் நன்றாகவே வாழ்த்து வந்தான்.

இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் வீட்டை அடைந்து விடலாம்,
பின்பு வாங்கி வைத்துள்ள கரடி பொம்மையை மகளுக்கு கொடுத்து அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் பல கொண்டிருந்தான்.

அவன் காருக்கு சற்று தொலைவில் ஒரே கூட்டமாக இருந்தது,
அதை பார்த்ததும் வேகத்தை குறைத்தான்,
அந்த கூட்டத்தின் அருகில் வந்தவனிடம் ஒருவர் ஓடி வந்து,
சார்,
கார் ஆக்சிடெண்ட் ஆய்டுச்சு பக்கத்துல எந்த ஆஸ்பிட்டலும் இல்ல கொஞ்சம் பெரிய மனசு பன்னி உதவுங்க சார் உள்ள இரண்டு பேர் உயிருக்கு போராடுறாங்க,
ப்ளீஸ் சார் கொஞ்சம் உதவுங்க சார், என்றான் அந்த காரை வழிமறித்தவன்,

ஏ, ஆக்சிடெண்ட் ஆய்டுச்சுனா ஆம்புலென்சுக்கு போன் பன்னுங்கப்பா,
அத விட்டுட்டு வர்ர வண்டிய மறைக்காதீங்க எனக்கு ஆயிரம் வேலை இருக்கு நகருப்பா நீ,
என்று கூறியவாறே அவன் மேலும் பேசியதை காதில் வாங்காமல் தன் வீட்டுக்கு விரைந்தான்,

வீட்டுக்கு சென்றதும் சற்று நேரத்தில் ஒரு அழைப்பு வரவும் அலறிஅடித்து
மருத்துவமனை சென்றவன் அதன் முகப்பிலே தன் காரை வழிமறித்தவனை பார்த்தான்.

பின் ICU வார்டில் கண்ணாடி வழியே தன் ஆசை மகள் தலை எல்லாம் ரத்த காயங்களோடு சிகிச்சையில் இருப்பதை கண்டான்,
அவ்விடமே அதிரும் படி ஓ வென்று கதறிக்கொண்டிருந்தான்.

அப்போது தனது மகளை கொண்டு வந்து சேர்த்தவன் அவ்விடம் வந்து பரிதாபத்தோடு மௌனமாய் ஒரு பார்வை பார்தான்.

அந்த மௌனத்தின் பாஷைகளை மாதவனே அறிவான்!

© சிவ ப்ரகாஷ்

@sivapragash #சிவப்ரகாஷ்