...

0 views

நகைச்சுவை இலக்கியம்
குதர்க்கம் குமரேசன்
--------------------------------------
குமரேசன் நூலகத்திலிருந்து எழுத்தாளர் தி.க.ச.அவர்களின் நாவல் புத்தகத்தை வாங்கிக்கொண்டு தெருவோரமாக நடந்து வந்துகொண்டிருந்தான்.வழியில் தேநீர்க் கடையில் குழப்பம் குமாரசாமியை சந்திக்க நேர்ந்தது.
குதர்க்கம்:
என்ன குமாரா ஏது இந்தப் பக்கம்.கண்ணுல படமாட்டேங்கிற
குழப்பம்:
அதான் பட்டுட்டியே, விவரத்தை சொல்லு சீக்கிரம்.ரொம்பநாள் சந்திக்காம இருந்த பால்ய நண்பன் வரேன்னுருக்கான்.
குதர்க்கம்:
அது ஒன்னுமில்ல இந்த தி.க.ச.வை பத்தி நான் என்னவோ நினைச்சேன்.லாஜிக்கே இல்லாத மனுஷன்.(கதா)பாத்திரத்தைக்கூட சரியா விளக்கத்தெரியல.
இவங்கள்லாம் என்னத்த கிழிக்கப்போறாங்க.
இடை வேளையில்:
இந்த பேச்சை கேட்டுக்கொண்டே சண்முகம் குமரேசனின் பின்பக்கம் வந்து நின்றார் முறைத்தபடியே.இதை கவனிக்காமல் சில குறைகளை சொல்ல நினைத்தபோது..
குமாரசாமி:
குமரேசா பக்கம் பாத்து பேசுடா என்றான்.
குமரேசன்:
அப்படியா.இதோ பாத்தாப்போச்சு என புத்தகத்தை புரட்டியவன்,இங்க பாரு புருடா விடறதுல இவரு மன்னன் என்க.இந்த தி.க.ச.என்ன நினைக்கிறாரு.
நாமள்ளாம் எதச்சொன்னாலும் ஏத்துக்குவோம்னா.இந்த ஆளு சாவகாசத்தையே இனி விட்டுறணும்.
அதற்குள்...
தி.க.சண்முகம்:
இத பாரு குமாரசாமி.இனி நான் உன்கூட பேசி என்ன ஆகப்போகுது.ஏதோ ரொம்ப நாளாச்சேன்னு பாத்து பேச வந்தா.எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்றதும்.
குமரேசன்:
சார் யார்? என்ன வேணுங்கறார்.சொல்லவே இல்லை.
குமாரசாமி:
எங்க பேசவிட்ட,தி.க.ச பேர சொல்லி சொல்லி திட்டிட்ட.இதுல பக்கம் பாருன்னா எங்கேயோ பாத்துட்டு மேலும் திட்ட ஆரம்பிச்சிட்ட என்றான்.
குமரேசன்:
அட.இதான் முறப்புக்கும் விறப்புக்கும் காரணமா.நான் ஏதோன்னு நினைச்சிட்டேன்.நான் தி.க.சந்திரமோகன் எழுத்தாளர பத்தியில்ல சொல்லிக்கிட்டிருந்தேன்.
பேரு சுருக்கத்துல பதட்டமாயிடுத்து போல என்றதும்
மூவரின் முகத்திலும் பெரும் சுருக்கம்.தேநீர்க் கடையில் இருந்த சைனாகார குபேர சிலை அசட்டுச் சிரிப்பை உதிர்த்துக்கொண்டிருந்தது.
* (கதையில் குறிப்பிட்ட பெயர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல.கற்பனையே)😂
© MASILAMANI(Mass)(yamee)