...

10 views

My first love at college 3
அன்று மாலை... 😝

அவுங்களுக்கு காலேஜ் முடியுற நேரம்.

பசங்க தினமும் போவாங்க பொண்ணுங்கள பாக்க...

நமக்கு என்ன ஆள இருக்குன்னு நெனச்சு கிட்டு போறதில்ல...

ஆனா இப்போ தான் ஒரு ஆளு கெடச்சுடுச்சே...
கெளம்பிட்டேன்... முதல் ஆளாக...

காலேஜ் முடிஞ்சதும் 4500+ பொண்ணுங்க வர்றாங்க...

(எங்க காலேஜ்ல பசங்க morning shift (8:30 am-1:05 pm). பொண்ணுங்களுக்கு மதியம் (11:45 am -4:00 pm)
இந்த கூட்டத்துல எங்க கண்டுபுடிக்க...

ஆனா அந்த மூஞ்சி கண்ணுல பட்ருச்சு...

அவுங்க கேங்.உம் நம்மல பாத்தாச்சு...

எங்க காலேஜ்ல பசங்க பொண்ணுங்க பேசிக்கக்கூடாது.

அதுனால பசங்கள மதிய நேரம் காலேஜ் கேம்பஸ்.ல பாத்தாலே கேள்வி கேட்டே சாகடிச்சுருவாங்க...

ஆனா எனக்கு அப்டி ஏதும் நடக்கல...

*அந்த பொண்ணு என்னய பாத்து ஒரு தடவ கூட மொரச்சு பாத்தது இல்ல...

என்ன பாத்தாலே ஒரு மாதிரி சிரிக்கும். ஆனா அதோட அர்த்தம் என்னவோ...

சைக்கலஜி கொஞ்சம் தெரியும். ஆனா பொண்ணுங்க கிட்ட அந்த சைக்கலஜியெல்லாம் கொஞ்சம் கூட வேலக்கே ஆகாது.

அந்த பொண்ணோட ஃப்ரண்ட்ஸ் என்ன பத்தி ஏதோ அவுங்க கிட்ட சொன்னாங்க...

செம்ம சிரிப்பு...

அப்போ நான் கொஞ்சம் லுக்கு விட்டேன்.

அவுங்க ஃப்ரண்ட்ஸ் ல ஒரு பொண்ணு "அவன் உன்னை பாத்து வெக்கப்பட்றான்" அப்டின்னு சொன்னாங்க...

மறக்க முடியாத நினைவுகள்.

அப்றம் அந்த பொண்ணு எந்த பஸ்ல போகுதுன்னு பாக்க
#பொருக்கிபசங்க ளும் எல்லாம் நின்னோம்.

காலேஜ் பஸ் எந்த ரூட்னு தெரிஞ்சா போதும்.

அதுல போற தெரிஞ்ச பொண்ணுங்கள வச்சு ஏதாச்சும் முயற்சி பண்ணலாம்...

அப்போ ஃப்ரண்டு கேட்டான் எங்கடா அந்த பொண்ணுனு...

அப்போ நான் கையகூட காட்டல... முகத்துல வச்சுருந்த கைல இருந்து ஒரு விரல மட்டும் நீட்டி காமிச்சேன்...

அங்க இருந்த ஒரு உளவாளி பாத்துட்டான்.

பாத்துட்டு வந்து மிரட்டுனான்...

அடிக்காத குறையா அங்க இருந்து அனுப்பிட்டான்.

ஆனா அந்த ஆள் சொன்னது எதுவும் கேக்கல...

ரொம்ப ஏமாற்றம்...

என்னப் பண்றது...

அப்றம் கடைக்கு போய் milk குடிச்சிட்டு வந்தோம்...

அப்போ அந்த milk ஏதோ கசப்பா இருந்த மாதிரி தோனுச்சு...

#பொய்...

அப்றம் அன்னக்கி அவுங்க பத்தி ஏதாச்சும் கவிதை மாதிரி ஒன்னு எழுதனும்னு மண்டைக்குள்ள pressure...

ஏற்கனவே அத பதிவிட்ருக்கேன்...

தலைப்பு நிலா னு இருக்கும்...

பாருங்க...

அடுத்த நாள் dairymilk வாங்கிட்டு போய்டேன் propose பண்ணலாம்னு...

அடுத்த நாள்...

அடுத்த பதிவில்...😝

#live #episode #crush #memories #pudukkottai #tamilnadu #tamil #தமிழ் ###

© murugs