My first love at college 2
அடுத்தநாள் வழக்கம் போல மதியம் வெயிட் பண்ணோம்.
எல்லா பொறுக்கி பசங்களும்...
(#பொறுக்கிபசங்க என்பது எங்க கேங் பெயர். வெற்றிக் கொடி கட்டு படத்தில் வடிவேலு அவர்கள் முஸ்லிம் பெண்கள் அணியும் உடை அணிந்து வருவார். அப்போது எதிராக பார்த்திபன் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வர வடிவேலு சொல்வார் "பொறுக்கி பசங்க. பொண்ணுங்க வர்றது தெரிஞ்சா நேர வருவாங்க" அப்டின்னு ஒரு டயலாக் சொல்வார். அத நாங்க யூஸ் பண்ணிக்கிட்டோம்)😁
அந்த பொண்ணும் வந்தாங்க. மேல உள்ள இடம் எங்க காலேஜ் அட்மின் பிளாக். அங்க அவுங்க ஃப்ரண்டுக்கு ஏதோ ஃபீஸ் கட்ட வந்தாங்க...💰
திட்டம் கடுமையா போட்டாச்சு. உடனே போய் பேசிடனும்னு. என்னோட ஃப்ரண்டு கவி துணை. 👬
நான் முதன் முதலாக இப்டி ஒரு முடிவு எடுத்து பேசி பதில் சொன்ன பொண்ணு அவுங்க மட்டும்தான்.
அங்க நுழைற இடத்துல ரெண்டு பக்கமும் பென்ச் போட்ருப்பாங்க.
அதுல ஒரு பக்கம் அந்த பொண்ணு உட்கார்ந்தாங்க...
இன்னொரு பக்கம் நாங்க...
நான் அவுங்களயே பாத்துட்டு இருந்தேன்...😍
என்னோட நண்பன் "நீ பாத்துட்டு இரு... நான் மேல டீன் ரூமுக்கு போய்ட்டு வர்றேன்"னு சொல்லிட்டு போய்ட்டான்.
அது மாதிரி நம்ம சூழ்நிலைய புரிஞ்சுகிட்டு உதவி பண்ற ஃப்ரண்ட்ஸ் கெடைக்கிறது ரொம்பவே கஷ்டம்.
அப்போ அந்த பொண்ணும் என்ன கொஞ்சம் பார்த்தாங்க...😉
ரெண்டு தடவ இருக்கும்...
அப்றம் எழுந்து போய் நுழைற இடத்துல இருந்த சுவத்துல சாஞ்சு நின்னுட்டு இருந்தாங்க...
நான் ஒரு பைத்தியம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியால...
அப்போ என்னோட ஃப்ரண்டு வந்தான். கடுப்பாகி போய் "எதாச்சும் பேசுடா"ன்னு சொன்னான்.
அவுங்க ஒரு பக்கம் சாஞ்சு நிக்க நான் அவுங்க எதிர் பக்கம்...
என்ன மாதிரி ஆளுக்கெல்லாம் இது மாதிரி ஒரு வாய்ப்பு கடவுள் கொடுத்ததாக தான் இருக்கனும்.
அவுங்கள பாத்து சிரிச்சேன்.
அவுங்களும் லைட்டா...
என்ன நெனச்சு சிரிச்சாங்களோ...
பேச சொன்னான்ல...
"ம்...என்னடா பேசுறது"ன்னு கேட்டேன்...
சத்தியமா எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல...
"எந்த டிபார்ட்மெண்ட் னு கேளு"ன்னு சொன்னான்.
நானும் அதே போல கேட்டேன்...
அவுங்க "காமர்ஸ்னு சொன்னாங்க...
அப்றம் ஃப்ரண்டு கிட்ட கேட்டேன்...
பேரு என்னன்னு கேளுன்னு சொன்னான்...
நானே ஐடி கார்டுல பாத்துருக்கலாம். அது பண்ணல.....
கேட்டத்துக்கு "வேண்டாம்"னு சொல்லிட்டாங்க
அப்றம் அவுங்க ஃப்ரண்டு ஃபீஸ் கட்டிட்டு வந்துட்டாங்க...
அப்றம் வெளிய வந்து அவுங்க ஃப்ரண்ட்ஸ் கேங்ல அவன் என்ட பேரு கேட்டான் னு சொல்லிருப்பாங்க போல...
எல்லாரும் என்னையே பாத்தாங்க...
எனக்கு ஒரே வெட்கமா ஆய்டுச்சு...
அப்றம் எல்லாம் பொதுவான விசயம் தான்... அவுங்களுக்குள்ளே இந்த பயபுள்ள என்ன காரணத்துக்காக பேரு கேட்டுச்சுன்னு முடிவு பண்ணிருப்பாங்க...
நம்ம வேல முக்கால் வாசி முடிஞ்சுருச்சு...
அப்றம் அவுங்க பேரு கேட்டத்துக்கு சொல்லாம இருந்தது ஏதோ ஒரு மாதிரி புடிச்சுருந்துது...
அப்றம் ரொம்ப நாளுக்கு அப்றம் மனநிறைவோட ஹால்டலுக்கு போனேன்.
அன்று மாலை அடுத்த சீன்....
அடுத்த பதிவில்...
© murugs
#love #avvmspc #pudukkottai #thanjavur #friendship #crush #memories #god #tamilnadu
#########