...

5 views

*விமர்ச்சிக்கும் முன் விளங்க முயற்சிப்போம்*
👆👆👆👆👆👆👆

NatGeo சேனல் இந்த புகைப்படத்தை 2013-ன் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக பெயரிட்டுள்ளது, மேலும் இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர் இந்த புகைப்படத்தை எடுக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார், மற்றும் இந்த மானின் ஆளுமையின் சக்தியை பாராட்டினார்.

*If you are inevitably going to die, why fear?*
*DIE AS A HERO*

*நீங்கள் ஒரு தவிர்க்க முடியாத நிலையில் சாகப் போகிறீர்கள் எனில் ஏன் மரணத்திற்கு பயப்படுகிறீர்கள்? ஒரு வீரனாக மரணம் அடையுங்கள்*

கதை இப்படி செல்கிறது:

இந்த தாய் மான் தங்கள் சிறு குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த சிறுத்தைகள் அந்த மானைத் தாக்கின.

அந்த தாய் மானுக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்தது. அது சிறுத்தைகளிடமிருந்து இருந்த தூரம் மற்றும் அதன் ஓடும் வேகம் அது தன் உயிரைக் காப்பாற்றுவதற்க்கு சாதகமாக இருந்தது. ஆனால், அது சிறுத்தைகளிடம் சரணடைய முடிவு செய்தது. காரணம்??

*காரணம், தன் பிள்ளைகளுக்குத் தப்பிக்க வாய்ப்பளிக்க... ஏனென்றால் அந்த தாய் மான் முதலில் ஓடிவிட்டால், அதனுடைய குட்டிகள் சிறுத்தைகளிடம் எளிதில் மாட்டிக் கொள்ளும், அந்த மான் குட்டிகளுக்கு தப்பிக்க போதிய அதிக நேரம் இருக்காது.*

தான் வேட்டையாடப் படுவதற்கு முன், தன் குட்டிகள் தப்பித்துவிட்டதை நிம்மதியுடன், உறுதியுடன் பார்க்கும் தாய் மானின் பார்வையைப் பாருங்கள்... சிறுத்தையின் வாயில், மரணத்தின் விழிம்பு நிலையில், தாய் மானின் கடைசி தருணப் படம்.

*உலகில் உனக்காக தன் உயிரைக் கொடுக்கும் ஒரே நபர் தாய் மட்டுமே.*

--------------------
*இப்போது நாம்?*

சில சமயங்களில் நாம் மற்ற நபர்களைப் பார்த்து:

*இவர் ஏன் தேவையில்லாமல் மாட்டிக் கொண்டார்?*

*இவர் ஏன் தேவையில்லாமல் விட்டுக் கொடுத்தார்?*

*இவர் ஏன் தேவையில்லாமல் உதவி செய்யப் போனார்?*

*இவர் ஏன் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் மெனக்கிடுகிறார்?*

என்று பிறரைப் பற்றி பலவாறு நினைப்போம், எளிதில் விமர்சிப்போம். ஆனால் அந்த நிலையை அவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள், அவரது தியாக சூழ்நிலைகள் நமது கண்களுக்கு தெரியாமலேயே போய் விடுகின்றது!


© ஆறாம் விரல் ​✍🏾

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamil