கவனியாபுரம் ஜல்லிகட்டு
தின்றது செரிக்க வீட்டு முற்றத்தில் முன்னும் பின்னும் நடக்கும் ஜாதிக்காரனுக்கும்...
இரவல் தீனி செரித்த பின்னே பட்டினியை ருசிக்கும் ஜாதிக்காரனுக்கும்,
வாழ்க்கை சண்டை முடிவுற்ற பாடில்லை...
சந்தை வெளியில் , சந்தித்து சமாதானமாய் போகும் இவர்கள் சண்டை ,
வயிறு கலகம் செய்ய தொடங்கியதும் தொடங்கிவிடும்.
முன்னவன் யாசகம் தர சந்தைக்கு வருகிறான், பின்னவன் யாசகம் கேட்டு சந்தை வெளியே கதியென கிடக்கிறான்...
சமாதானக் கொடி ஏற்றப்படுவதும், இறக்கப்படுவதும் வாடிக்கையான சமாச்சாரம்.
இது சாகாவரம் பெற்ற , யுத்தமில்லை...
சமத்துவம் சகோதரத்தும் வீதியில் கிடந்து ,மெலிந்து நொடிந்து விழவிடாமல் ,ஊட்டம் ஊட்டிக்கொண்டே யிருக்கும் யுத்தம்.🙄
🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
சேற்றில் கால்வைத்தவனை சோற்றில் கைவைக்கும் முன் நினைப்பது மட்டுமல்ல ,
சக மனிதனுக்கு செய்யும் மரியாதை...!!🙏
சுயமரியாதைக்கு செய்யும் சமாதானம்.!!🙏
தூக்கிப் போட்ட சோற்று பருக்கைகளை எண்ணி, வயிற்றை நிரப்புவனின்
ஈடேற்றத்திற்காக ,
சட்டதிட்டங்களை, பழக்கவழக்கங்களை, மாற்றியமைக்கும் பாங்கன்றோ சமூகத்தில் பாதிப்பை உண்டாக்கும்.?🤝
நன்மக்கட்படைபலத்தை பெறுக்கும்?🤝
இந்த பலமன்றோ ஆட்சியாளர்களை திருத்தும்.
தானாக முன்வந்து வழக்குபதிய நீதிமன்றத்தை தூண்டும்.!!
படித்தவனே, பட்டதாரியே...
பொதுவுடைமை என்பதொரு கட்சியின் கொள்கையா?🤛
இல்லை,?
வாக்களிப்பவன் ஒவ்வொருவனும் நீதிக்கு முன் சமம் என்பதே!!!!
அரசுடைமையெல்லாம்,
குடியுரிமையுள்ள அனைவருக்கும் சொந்தமல்லவா?
வேண்டுதலுக்காக பிச்சையெடுப்பவன் எடுக்கட்டும், !!
அது வீதிக்கும் கெளரவம்,
வீட்டுக்கும் கௌரவம்..
ஆத்ம சந்தோஷம் அதில் உண்டு.!!!
வயிற்றுப் பிழைப்புக்காக யாசித்து நிற்க ,
ஒருவனை அனுமதிப்பது மடைமையல்லவா :!!
அதை, அரசு வேடிக்கை பார்ப்பது பெருந்தன்மையாகுமா?
ஜல்லுகட்டுக்கு மல்லுகட்டிய கூட்டம்,
நெல்லுகட்டு கொல்லப்பட்டு
குத்துயிராய்,
நியாயவிலை கடையில் அளக்கபடுவதை கவனிக்காதிருப்பது ஏன்?
பாதி செத்த அரிசி கூட ,
பசி தீர்க்க இல்லாமல் பாதையோரம் கையேந்துவோரை ,
காளை தழுவும் காளையர்கள் கவனியாதிருப்பதேன்?
இந்த விஷயத்தில், அவனி நிறைபுரமெல்லாம்
கவனியாபுரமே.!!🙏
குறிப்பு:
உலகத்திலுள்ள எல்லா ஊர்களிலும் இப்படித்தான் உள்ளது.
இளைஞர்களை குறிவைத்து குறை சொல்வதாக எடுத்து கொள்ள வேண்டாம்.
இது அன்றாட வாழ்வில் வாடிக்கையாக நிகழும் நிஜ கதை, வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.
மறக்காமல் லைக் செய்யவும்:
🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️© s lucas
© s lucas