...

6 views

உனக்காக ஓர் உலகப்போர்
உனக்காக ஓர் உலகப்போர்
ஆம், உனக்காகவே...
உடுக்கை அடித்து உரக்கவே
உரைக்கிறேன்...
இந்த உருமாறிய உலகிற்கு...

முக்கால் பாகம்
உலகின் நீரே...
நீ யில்லயேல் மனிதன்
மூக்கால் அழுகிறான்...

வயல் செழிக்க வாய்க்காலாகவும்
தினம் குளிக்கக் குளம் குட்டையாகவும்
வளம் நிறைந்த வற்றா நதியாகவும்
அலையோடு கரை தேடும் கடலாகவும்

பகவானின் படைப்பில் பாரில்
பன்முகம் கொண்டாய் நீயோ...!

ஆயினும் மனிதன் உன்னை
பழித்ததாலே
இன்று தண்ணீர் தண்ணீரென்று
தவிக்கிறான்...

வளியில்லை காரணம் புனல்
பொழியும் முகிலில்லை
வாய்ப்பில்லை காரணம் மழைக்
கான மரமில்லை
வரமில்லை காரணம் மரம்
வளரும் மண்ணில்லை

கடவுளே என நினைத்துக் கதறி
அழவும் கண்களிலும் நீரில்லை...

மழையாகவோ நீயோ...
மேகமாய் உருவெடுத்து
வேகமாய் மண்ணிலே
குடிபுகுவாய்
தாகமாய் நாங்கள் இங்கே
சோகமாய் உன்னைச் சேமிக்க
தவறியதாலே ...

தெருவெல்லாம் பெரு வெள்ளம்
ஆனபோதும் அதை அருந்திடவோ
ஆளில்லை அன்று
கருவூலம் கரைந்திடவே காசுகொடுக்க
கண்ணீரைத் தவிரத் தரையில்
தண்ணீரில்லை இன்று...

சந்தோசத்தில் குதித்தால்
அலையென வரும் நீயே
கோபத்தால் கொதித்தால்
சுனாமியென வந்த நீரே...

நதியாகவோ நீயோ
மறைவிடமாய் மலையில்
ஊற்றாகப் பிறந்து
செடி கொடி மரங்களின்
மடியினில் தவழ்ந்து
நளினம் கொண்டு வளைந்து
நெளிந்து ஓடி
கடைசியில் கடலில் கருவ
மில்லாமல் கலக்கிறாய்...

இதனிடையில் இயற்கை
அழகாய் இயங்கி
இதயம் கொண்ட மனிதர்களே
அணைக்கட்டுமா...!?
என ஆவளோடு நீ வருகையில்...

இதயமில்லாமல் போன
மனிதர்களோ...
உன்நடையில் அணைகளைக்கட்டி
ஆசாபாசங்களை
அடியோடு அழித்தோமே...
அதன்வழியே,
பொன்னான நீரே உன்னை
நாங்கள் பழித்தோமே...

நீரே...பிரதிபலன்
கண்டோமே...
உனக்காகக் கால்கடுக்க
நின்றோமே...

நீர் குழாயெல்லாம் ஆகிடுச்சு
துரு துருவா...
இன்றோ நாங்கள் அலைகிறோம்
தெருத் தெருவா...

ஆதியும் அந்தமும் நீரே...!
உலகில் வாழும் மனிதனிலும்
மனிதன் வாழும் உலகினிலும் நீயே...

சாதகங்கள் மாறிவிடும் வேலையில்
சாக்கடைகளும் குடி நீராகும்...

அவ்வேலைக் காசுள்ளவன்
கைப்பற்றுவான் உன்னையே...
கஷ்டம் கொண்டவன்
நொந்துகெடுவான் தன்னையே...

இனிவரும் தலைமுறையின்
தலையெழுத்து...
தாகத்தாலயோ...!?
தண்ணீராலயோ...!?

தண்ணீர்...! தண்ணீர்...!
என்றலையும் காலம் வெகு
தொலைவிலில்லை...
ஆதலாலேயே மிக விரைவில்
உனக்காகவே ஓர் உலகப்போர்...

© ஆறாம் விரல் ​✍🏾


#tamil #tamilquotes #aaram_viral #writersofinstagram #writer #savewater