...

0 views

மறித்து போன பயம் மறுமுகம் காட்டிய ரம்யா சுரேஷ்
அத்தியாயம் 11 




கதைகள் எங்கே தொடங்கும் எங்கே முடியும் எனத் தெரியாமல் இருக்கும் நிலையில் இங்கே நடக்கும் பல கதைகள்,

சில நேரம் நாம் அதில் வில்லன்போல் தான் தெரிய போகிறோம் என

நினைக்கும் பொழுதில் நாம் அதில் ஹீரோ வாகத் தெரிய நிறைய வாய்ப்புகள் இருக்கும் அதைத் தாண்டிச் சில நேரம் நாம் காமெடியன் போல் மாறக் கூடப் பல வாய்ப்பு இருக்கிறது,

இங்கேயும் ஜோக்கர் என நினைத்துக் கொண்டு இருந்த சிலர் ஹீரோ வாக மாறப் போகிறார்கள் எனத் தெரியாமல் அந்தக் கல்லூரி முழுதும் அமைதியாக நடந்து கொண்டு இருந்தது

அங்கே உள்ளே வந்த கல்லூரி உதவி மேலாளர் கையில் ஒரு அறிக்கை இருக்க அதில் வர்மா என்னும் மாணவர் அவருக்கு நடந்த சில தவிர்க்க முடியாத சம்பங்களால் அவர் கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் இருக்கிறது அவர் பரீட்சை மட்டும் எழுத வருவாரென அறிக்கை வர

எல்லோரும் இவன் எல்லாம் ஒரு ஆளு அவன் எங்கயோ போய் விக்கிக் கிட்ட அடி வாங்கிட்டு கைக்கால் உடைந்து இருக்கான் போல இன்னும் ரெண்டு மாசம் தானேயென எல்லோரும் நக்கலாகப் பேசிக் கொண்டு இருக்கும் பொது உள்ளே சுரேஷ் மற்றும் ரம்யா நடந்து வந்தனர்

அவர்கள் முகத்தில் வர்மா கூறியது போலச் சோகம் இருக்க அவர்கள் இருவரையும் பார்த்து அங்கே சந்தோஷத்தில் இருந்த கீதா அருகில் வந்து நக்கலாகப் பேசினால் வர்மா கதிர் சிவா கூறியது சட்டென நியாபகம்வர ரம்யா எதையும் முகத்தில் காட்டாமல் என்ன செய்யலாமென யோசித்து கொண்டு இருந்தால்

என்ன நடக்க போகிறதோ எனச் சுரேஷ் நினைக்கக் கீதா உடனே சுரேஷ் அருகே வந்து என்ன டா ரம்யா கூட வார அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்க நானும் ரம்யா வும் போலீஸ் ஸ்டேஷன் வரப் போய் இருந்தோம் வர்மா கடத்த பட்ட சம்பவம் எங்களுக்குப் பல கேள்விகள் எழுப்பி இருக்கு யாரோ எங்க கூட இருந்தே அவனுக்குப் பிரச்சனை கொடுக்க நினைக்கிறாங்க எனக் கீதாவை பார்த்துக் கூறினான் கீதா சற்று திடுக்கிட்டு என்ன என மீண்டும் கேட்க

அது ஒண்ணும் இல்லை கீதா வர்மா காணாம போய் இணனையோட மூணாவது நாள் அதான் நாங்க ரெண்டு நாளா தேடி பாத்துதட்டோம் அவனோட வீட்டுக்கும் எங்களாள தொடர்பு கொள்ள முடியவில்லை,

விக்கிக் கிட்ட கேட்கத் தான் இங்க வந்தோம் எனக் கூற அப்போது தான் கீதாக்கு நியாபகம் வந்தது அன்னைக்கு விக்கிக் கிட்ட கேட்கும்போது இன்னைக்கு தான் வர்மா கடைசி நாளெனக் கூறியது நியாபகம் வர மனதில் சிரித்து விட்டு வெளியில் பாவமாக வைத்துக் கொண்டு பேசினால்

, ரம்யா சுரேஷ் மனதில் பல குழப்பம் வர அவர்கள் முகம் மாறும் நொடியைக் கீதா கண்டால் அவளுக்கும் ஏதோ சரி இல்லையென நினைத்துக் கொண்டு இருந்தால் அப்போது கல்லூரி வகுப்பறை வர ஓடி வந்த விக்கியின் கொடுக்கு ஒருத்தன் உள்ளே வந்தவுடன் சுரேஷ் நோக்கி வந்து வர்மா எங்க டா எனக் கேட்கக் கோவம் வடினாகச் சுரேஷ் அவனைப் பார்த்து டேய் விஷ்வா நாயே செருப்பாள அடிப்பேன் டா உங்க விக்கித் தானே அவனை அன்னைக்கு ஆட்கள் கூட வந்து கூட்டிட்டு போனான்,

அது எல்லாம் சரி தான் டா ஆனா அங்க விக்கி அப்பா விக்கி அவங்க கூட இருந்த எல்லோரும் ஹாஸ்பிடல் ல இருக்காங்க ஆனா அங்க வர்மா மட்டும் இல்லையெனக் கூறினான்,

மனதில் சிரித்து கொண்டு ரம்யா சுரேஷ் இருவரும் முகத்தில் ஒரு சங்கடம் இருப்பது போலத் தெரிய படுத்தி கொண்டு இருக்க அந்த விஷ்வா என்னடா நடிக்கிறீங்க எனக் கேட்கச் சுரேஷ் சற்றும் யோசிக்காமல் அவனை அடித்து விட்டான்

ரம்யாவும் கண்களில் கண்ணீர் வருவதை துடைப்பது போலச் செய்ய அவன் குழப்பம் கொண்டு பார்க்க நீயும் தானே டா அந்த விக்கிக் கூடச் சேர்ந்து எங்க நண்பனைக் கூட்டிட்டு போன எனக் கூறி மீண்டும் அடித்தான் அவன் மனதில் இருந்த பல நாள் கனவு அவனுக்கு நிறைவேறியது .

பல தினங்கள் விக்கி அவன் கூட்டம் இவர்களை மனரீதியாகப் பல துன்பங்கள் நடந்து இருந்தது, சில நேரம் அவர்கள் சுரேஷ் நடந்து செல்லும்போது அவனை அடிப்பது எனப் பல நடந்து இருந்தது ரம்யா அருகில் வந்து என்னோட காதல் ரெண்டு நாள் கூடத் தாங்காத மாதிரி பன்னிடீங்கலா உங்களைச் சும்மா விடமாட்டேன் எனக் கண்கள் முழுதும் கோவம் கொண்டு அவனை ஒரு அடி அடித்தாள்,

அதைச் சற்றும் எதிர் பார்த்திராத விஷ்வா தலையில் குருவி சுற்றுவது போலத் தெரிய கீழே விழுந்தான் இத்தாய் முறை சுரேஷ் அடித்தும் தெம்பாக இருந்த விஷ்வா ரம்யா அடித்த ஒரு அடியில் கீழே விழுந்தான் அந்த நிலையில் ரம்யாவை கண்ட கீதா அதிர்ந்து நின்றால். ஒரு நிமிடம் என்ன நடந்தது எனத் தெரிய வரச் சற்று கையை உதறி கொண்டு ரம்யா வலிப்பது போல நடித்தால்,

கீதா அருகே திரும்பி என்னைக் கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விடுங்க எனக் கூறினாள். விஷ்வா உடனே இருங்க டாப்பசங்களை கூட்டிட்டு வாரேன் எனக் கூற சுரேஷ் இங்க வா எனக் கூறி அவன் பயந்து நின்று கொண்டு இருந்தான்

அப்போது அவன் தோளில் கைப்போட்டு இங்க பாரு டா நாயே இனிமேல் நீ இங்க ரௌடிசம் செஞ்ச உங்க துடுப்பு அதான் அந்த விக்கி என்ன நிலமை யில் இருக்கானெனக் கேட்க ஆதற்கு அவன் கையும் காலும் ஓடஞ்சு இருக்கு எனக் கூற அதற்க்கு என்ன எனக் கேட்க விஷ்வா முகத்தைப் பார்த்து உனக்கும் அந்த நிலமை வரணும் ஆசை பட்டா நீ செய் எனத் திமிராகக் கூறினான்

அவன் பயந்து நின்று கொண்டு இருந்தான் இங்கே ஏதோ சரி இல்லையென உணர்ந்த கீதா தான் பையில் இருக்கும் அந்தப் பவுடரை எடுத்துச் சதீஷ் மூக்கில் வைக்க முயன்றால் அங்கே யாரும் தன்னை பார்க்க வில்லையென நினைத்துக் கொண்டு இருக்க தூரத்திலிருந்து ஜாக் கொடுத்த சிறிய பெண் காமிரா வச்சு எல்லாத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தால் சுரேஷ் பேக் யில் மாட்டி இருக்கும் ஆடியோ ரிசிவர் ஆண் செய்தாள்

தான் கையில் இருக்கும் செயலிமூலம் ஒரு நிமிடம் vibrate ஆவதை உணர்ந்த சுரேஷ் புரிந்து கொண்டான் உடனே சுரேஷ் அமைதியாக இருக்க விஷ்வா அவன் மனதில் ஒரு குழப்பம்,

என்ன செய்யப் போகிறான் அவன் அமைதி அங்கே ஒரு நிலையில்லா சூழல் கொண்டு வர உடனே இன்னொரு முறை vibrate ஆகும் பொழுதில் ஏதோ பிரச்சனையெனத் தான் கையில் இருக்கும் வாட்ச் யில் இருக்கும் குறிப்பைக் கண்டான் , சுரேஷ் கண்களில் ஒரு contact lens இருந்தது அதன் மூலம் அந்த smart watch யில் பார்க்கும் பொழுதில் அதில் இருக்கும் மெசேஜ் தெரியும்.

கதிர் எல்லோருக்கும் பாதுகாப்பு அவசியம் என அறிந்து பல smart gadget கொடுத்து இருந்தான் அதிலும் சுரேஷ் கையில் பல gadget கொடுத்து இருந்தான் அதே போல் ரம்யாவிடம் மேக்கப் கிட் போல் சில gadget கொடுத்து இருந்தான் அதன் மூலம் தான் இங்கே நடப்பதை record செய்து இருந்தார்கள் .

ஜாக் அந்த gadget செயல் பட ஆரமித்த நொடியிலிருந்து அனைத்தையும் இங்கே பதிவிறக்கம் செய்ய ஆரமித்தான் . கொஞ்ச நேரம் அங்கே என்ன நடக்கிறது எனப் பார்த்துக் கொண்டு இருந்த பொழுதில் கீதா கையில் இருக்கும் அந்தப் பவுடர் பார்த்த வுடன் ஜாக் உடனே சுரேஷ் காதில் இருக்கும் புளுடூத் க்கு கால் செய்தான் எதுவும் பேசதீங்க பாஸ் நான் சொல்றதை மட்டும் கேளுங்க சரியா எனக் கூறினான்

அந்தக் கீதா கையில ஏதோ ஒரு பவுடர் வச்சு இருக்கா அது உங்களுக்கு எந்த வகையிலும் ஆபத்து வரமா பாத்து இருங்க என ஜாக் கூறினான் அதைத் தெரிந்த வுடன் அந்த விஷ்வா வை அருகில் அழைத்து அவன் கழுத்தில் கைப்போட்டு உனக்கு ஒரு டாஸ்க் அதை நீ செய் உனக்கு நான் சப்போர்ட் பண்றேன் நீ இதைச் செய் நீ தான் இந்தக் காலேஜ் ஹீரோ என அவன் காதில் கிசுகிசுத்தான் ,

அதைக் கேட்ட விஷ்வா என்ன இவன் நமக்குத் திடீர் எனச் சப்போர்ட் பண்றான் எதும் ஆபத்தா இருக்குமோ என நினைத்தான் நீ என்ன நினைக்கிற என எனக்குத் தெரியும் நீ இப்போ என்ன பண்ற அந்தக் கீதா கிட்ட இருக்கிற பேக் கீழ விழுற மாதிரி செய்யணும் சரியா எனக் கூறினான் அவன் அசைவைப் பார்த்த ரம்யா அவன் செய்கை என்ன என யோசித்தால் உடனே அங்கே எதையோ தேடி வருவது போல வர அவளைக் கண்ட கீதா என்ன ரம்யா இங்க வந்து இருக்க எனக் கேட்டாள் ,

அதற்க்கு ரம்யா இல்ல கீதா எனக்குக் கை எல்லாம் பயங்கரமா வலிக்குது டி உன்னோட பையில் மருந்து இருந்தா கொஞ்ச கொடு எனக் கேட்க அதைக் கேட்ட சுரேஷ் நம்ம பேசினது ரம்யா hearing aid லக்கேட்டு இருக்கும் போல என நினைத்துக் கொண்டு சிரித்தான் அதைக் கண்ட சுரேஷ் விஷ்வா வைப்பார்த்துச்செய் எனத் தலை அசைத்தான் ,

'

விஷ்வா என்ன செய்வது எனத் தெரியாமல் ரம்யா தன்னை அடித்ததை மனதில் நினைத்து அவள் அருகில் சென்று என்ன எப்படி நீ அடிக்கலாமெனக் கூறி கீதா கையில் இருக்கும் பையைப் பிடிங்கி ரம்யா வை அடிக்க முன் வந்தான் .

அதைக் கண்ட சுரேஷ் பை விஷ்வா கையில் வந்ததை கண்டவுடன் ரம்யாவை அருகில் அழைத்து அவன்பின் மறைத்துக் கொண்டான் . அதைக் கண்ட விஷ்வா இப்பொழுது சுரேஷ் யை அடிக்க முன் வந்தான் அதற்க்கு காரணம் அந்தப் பையில் அத்தனை கணம் இருந்தது அதை வைத்து அடித்தால் கண்டிப்பாக அடி பலமாகக் கிடைக்கும் விஷ்வா தெரிந்து செய்தானா இல்லையா எனத் தெரிய வில்லை ஆனால் சுரேஷ் ரம்யா நினைத்த ஒன்று நடக்க போகிறது எனப் புரிந்ததுது ..

அங்கே என்ன நடக்கும் ....
© அருள்மொழி வேந்தன்