...

11 views

கொழுக்குமலை ரகசியம் [எ] நீலிமாவின் வேட்டை - விண்மீன் ரசிகன்
21+ Adult content novel.
எளிய மனம் படைத்தவர்கள் இக்கதையை வாசிக்க வேண்டாம்...
Tamizh Erotic Adventure novel...

கொழுக்குமலை ரகசியம் : நீலியின் வேட்டை

அத்தியாயம் 1 :  நீலிமாவின் வேட்டை ஆரம்பம் !
2023 டிசம்பர் 30,

அதிகாலை 7 மணி....
போடிநாயக்கனூர்....

போடிநாயக்கனூரில் இருந்து
போடி மெட்டு   செல்லும் சாலையில் 
வெள்ளைநிறத்து  Luxury
கார் ஒன்று சூரியநெல்லி கிராம பஞ்சாயித்து பகுதிநோக்கி சீறிபாய்ந்து சென்று கொண்டிருந்தது.....


மேற்கு தொடர்ச்சி
மலைப் பிரதேசத்தின் வனப்பு அதீதமாய் குளிர்ந்து,
பனிப்பொழிவினாலும்
மழைச்சாரலினாலும் சில்லிட்டு இருந்தது...


வளைவு நெளிவாய் சென்ற சாலையெங்கும் நீர்தடாகங்களின் சுவடுகள், சிறுச்சிறு பள்ளங்களில் தேங்கிய வண்ணம் அணிவகுத்து தொடர்ந்து இருந்ததை   வாகனங்களில்  வந்தவர்கள் ரசித்த வண்ணம் கடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

காலை நேரக்குளிருக்கு இதமாக தேநீர் அருந்த வேண்டும் என்ற மனநிலையில் அனைவரும் இருந்தனர்..


காருக்குள் மொத்தம் அறுவர் இருந்தனர்..

காரினில் இருந்து மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட குழுவினர் இறங்கினார்கள்..
அவர்களது கார் போடிமெட்டின் எல்லைப் பகுதியினில்  இருந்த டீக்கடையின் முன்பு  வந்து நின்றிருந்தது.



ஆறு பேரும் கேசுவல்ஸ் ட்ரெஸ் கோட் உடன் ஸ்வெட்டர் சகிதம் ஆக   கருப்பு நிறத்தினில் கூலிங் கிளாஸ் அணிந்து காண்போரை கவரும் வண்ணத்தில் இருந்தனர்..



காரை  ஸ்டைலாக   ஓட்டி வந்து கடை முன்பு பார்க் செய்தவனின்  பெயர் தமிழ்வாணன்.
வயது 31 , இன்னமும் திருமணம்  ஆகவில்லை..
பார்ப்பதற்கு காவல் துறை அதிகாரிக்கான உடல்வாகுடன் ஆளுமையுடன் இருப்பவன்...
மெக்கானிக்கல் இன்ஞ்சினியர்..
டிகிரிக்கு பின்னே கிரிமினாலஜி...