...

3 views

முயற்சி....
அது ஒரு காடு. ஒரு தந்தையும் அவரது மகனும் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மகனுக்கு 12 வயதிருக்கலாம். பள்ளி விடுமுறைக் காலம். அதோடு அவன் ஒரு சாகச விரும்பி என்பதால், காட்டுக்குள் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்று அப்பா அவனை அழைத்து வந்திருந்தார். மரங்கள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள்... எனப் பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் அவன் கேள்வி கேட்டான். அப்பா, பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார். சில கேள்விகளுக்குப் பதில் தெரியாதபோது, தெரியாது’ என்று உண்மையை ஒப்புக்கொண்டார். காடு அந்தச் சிறுவனுக்கு அதிசயமாக இருந்தது. சதா வீட்டிலும் பள்ளியிலும் மைதானத்திலும் நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கை, இந்தக் காட்டுக்கு முன்னால்...