...

8 views

☝️ஒன் லாஸ்டு டைம்☝️
கல்லூரியின் கடைசி நாள். ஒருவரை கூட விட்டு விட கூடாது. இன்னும் ஒருமுறையாவது எனக்கு தெரிந்த நபரை எல்லாம் பார்த்து விட வேண்டும். அவசரத்தில் ஒரு பேனா கூட எடுத்து வர வில்லை. கொடுப்பதற்கு எதுவும் பரிசு தான் வாங்கவில்லை, கையெழுத்தும் வாங்க முடியாமல் போய் விடுமோ ? வரிசையாக அழைப்பு மணி வந்து கொண்டிருந்தது. எங்க இருக்க, சீக்கிரம் வா....வந்துட்டே இருக்கேன். கேண்டீனுக்குள் வழக்கத்தை விட அதிக நெரிசல். இருப்பினும் கடைகள் யாவும் வெறிச்சோடியே இருந்தன. அதுசேரி, யாரும் இங்கு சாப்பிட வரவில்லையே. என்னுடன் பழகியவர்கள், விலகியவர்கள் எல்லோரையும் அழைத்திருந்தேன். வந்தவர்கள் எல்லோரும் நிழற்படங்களும், தற்படயி எடுப்பதிலுமே குறியாக இருந்தனர். யாரும் வாய்விட்டு பேச கூட இல்லை. என்னை பார்த்தும் பார்க்காதது போல் சிலர். இருவர் இருவராக சேர்ந்தபடி புகைப்படம் எடுத்து கொண்டே வந்தனர். நானும் என் போஃனை வெளியில் எடுத்தேன். எனக்கு தராத மரியாதையை என் போஃன்-க்கு தந்தனர். சிரிச்சிட்டே ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டேன். சிலர் அன்று தான் என்னிடம் முதல்முறை பேசுகிறார்கள். போஃட்டோ எடுத்தவுடன் மிஸ் யூ வாம். இன்னும் சிலர் அழுதே விட்டனர். அதிலும் ஒருவன் ஏன் டா உனக்கு மட்டும் கவலையே கிடையாதா ? எப்படி டா சிரிச்சிட்டே இருக்க நீ மட்டும் ??

உங்களுக்கு எல்லாம் இப்போது மட்டும் தான் கண்ணீர் வருகிறதா ??

கடைசி நாளிள் பிரியும் போது தான் எல்லோரும் ஒன்று சேர விரும்புவீர்களா ?? எதுவும் பேசாமல் ஓடி விட்டான்.

நான்கு நிமிடம் நல்லவர்கள் போல் நடித்து போட்டோ எடுத்தவுடன் கிளம்பும் போலி நன்பர்கள் இனி எனக்கு தேவையில்லை

நான்கு ஆண்டுகளாய் பொழுது சாய்ந்தும் வீட்டிற்கு செல்லாமல் அன்பை உபசரித்த அந்த கேண்டீன் ஊழியர்கள் போதும் எனக்கு. அன்னேனே! ஒரு போட்டோ....செல்போஃனை ஆன் செய்து...கேமராக்குள் நுழைந்தேன். செல்பி கேம் ஆன் செய்தேன். படத்தில் அவரை கானவில்லை...எங்கு சென்றிருப்பார்... நன்பர்கள் எல்லாம் கேளி செய்தனர். அவர் சென்று, தன்னுடன் பணி செய்யும் சக ஊழியர்களையும் அழைந்து வந்து...தம்பி, இப்போ எடுப்பா....நன்பர்கள் எல்லாம் வாயை பிழந்தபடி நிற்க, கெத்தா மொபைல மேல தூக்கினேன். சிவப்பு சட்ட போட்ட அன்னே கொஞ்சம் உள்ள வாங்க....பனியன் போட்ட அண்ணா பின்னால போய் நின்னுங்களே.....குல்லா வச்சிருக்கிரவரே, சத்த சிரிக்கிரேளா....எவ்வளவு தான் நெருங்கி ஒன்றாய் நின்றாலும் அதிக பேரு கொண்டதால, வொயிடு ரேன்ஜ் பெசிலிட்டி கூட வேல செய்யல. அப்போ அங்க இருந்து ஒருவன் என் மொபையிலை பிடுங்கி பேக் கேம் ஆன் செய்து "ஸ்மைல் ப்ளீஸ்" போட்டோ எடுத்து கொடுத்தான். நன்பர்கள் எல்லாம் கைத்தட்டிய படி கிட்டே வந்தனர்.

அளவில்லா ஆணந்ததோடு மீண்டும் கெத்தா மொபைல தூக்கினேன் செல்பி எடுப்பதற்கு. முன்னெச்சரிக்கை ஆக, இந்தமுறை எல்லா அட்ஜஸ்டும் செய்து விட்டேன். ப்ரேமில் எல்லோருமே தெரிந்தனர். நானும் "ஸ்மைல் ப்ளீஸ்". இப்போது 'டிங் டாங்' நோட்டிபிக்கேசன் வந்து விட்டது. "இன்சபிஸியன்டு ஸ்டோரேஜ், யூ மே ஹேவ் டெலிட் சம் பைல்ஸ்" இந்த முறையும் அவனே என் முன் வந்து நின்று, என் மொபையிலை பிடுங்கி பேக் வந்தான். அதில் நான் இன்று ஒவ்வொருவருடனும் தனி தனியாக எடுத்த போட்டோக்களை எல்லாம் மார்க் செய்து 'டெலீட்' செய்து விட்டான். இப்போது எல்லோரும் சேர்ந்தபடி ஸ்மைலிங் செல்பி எடுத்து கொண்டோம். இருமுறையும் போட்டோ எடுக்க எனக்கு வந்து உதவி செய்தவன் வேறு எவனுமில்லை, என் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடுனானே அவன் தான்.

இதுவரை பறிக்க பட்ட நாட்களும், இன்றைய நாளும் போகட்டும் என்றாலும் கூட, இனிமேல் ஒற்றுமையாய் இருக்க கல்லூரி நாட்களும் கை விட்டு போகியது. மீண்டும் இன்சபிஸியண்டு ஸ்டோரெஜ் வரும்வரையில் மாற்றி மாற்றி ஒன்றாய் எடுத்து கொண்டே இருந்தோம். ஹா!ஹா!ஹா!.....ஒன் லாஸ்ட் டைம் அல்லவா🥳!!!
© Muthu