...

3 views

அர்த்தமுள்ள சந்திப்பு
இரு ஞாநிகள் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தனர்.சிறிய ஞாநி முதிய ஞாநியை பார்க்க விரும்பி அவர் இல்லத்திற்கு போவதை அறிந்த ஊர் மக்கள் பின் தொடர்ந்தனர்.திறந்து இருந்த முதிய ஞாநியின் வீட்டினுள் நுழைந்தான்.காற்று கதவை தாழிட்டது.ஊரார்களின் பார்வை ஜன்னல் வழியே நோட்டமிட்டது.எரிந்துகொண்டிருந்த விளக்கும் நைந்த புத்தகமும் சிறிய ஞாநியின் கண்களில் தென்பட வந்தவன் கைகளற்ற நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் மேல் நோக்கிய புருவம் பார்வை உகுத்தது.இதைக் கண்ட முதிய ஞாநி தொய்ந்த கட்டிலில் திருமாலின் கிடந்த கோலத்தில் இருக்க கால்கள் சிறிய ஞாநி இருக்கும் திசைநோக்கி பார்வையை நிலைகுலையச் செய்தது.இதை எதிர்பாராத சிறியோன் எழுந்து நின்று நோட்டமிட்டான்.எரிவிக்கப்பட்ட மண் அடுப்பும் கவிழ்க்கப்பட்ட கலயமும் மட்டுமே தென்பட்டது.சிறியோன் வாய் அவனறியாமல் ஒரு பக்கமாக ஒதுங்கியது.சட்டென முதிய ஞாநி தரையில் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டார்.இதை எதிர்பாராத சிறியோன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே வாயிற் கதவருகே வந்தான்.விருட்டென எழுந்த முதிய ஞாநி கதவை திறந்துவிட சிறியோன் சென்றதும் ஒளியை நோக்கி திரும்பினார்.காற்று இல்லாமலேயே கதவு தானாக மூடிக்கொண்டது.ஜன்னல்கள் ஓரம் மொய்த்த கண்கள் "யார் பைத்தியம்" என்ற கேள்விக்கான பதிலுக்கு மாற்றி மாற்றி வாய் வழியாக விவாதம் நடத்திக்கொண்டே கால்
போன போக்கில் சென்றுகொண்டிருந்தது.
பிறகுதான் தெரிந்தது சிறிய ஞாநி ஊரைவிட்டே சென்றுவிட்டதாக ஊர்மக்கள் பேசிக்கொண்டிருந்தது.
© MASILAMANI(Mass)(yamee)