...

7 views

காதல் பயணம்-7
காதல் பயணம்_7

ராகுல் அஸ்வினை பார்த்து இனி நீ சந்தியாவை பார்க்கவோ?
பேசவோ? கூடாது என்கிறான். அஸ்வின் நான் பேசுவதால் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்டான். உடனே ராகுல் அவள் என் மாமா மகள் . எனவே,இனி அவளிடம் பேச முயற்சிக்காதே என்றான். அஸ்வின் கேட்டதும் அதிர்ந்தான்.


அஸ்வின் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தான்.
தன் நண்பர்களிடத்தில் கேட்கும் போது அவள் ராகுலின் மாமா மகள் என்றாள் நீ காதலிக்க கூடாது என்று இருக்கிறதா நீ உன் காதலை சொல்ல முயற்சி செய் என்ன நடந்தாலும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர்.

அஸ்வின் சந்தியாவின் கோபத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் சென்றான். சந்தியாவிற்கு தெரியவில்லை அஸ்வின் தான் அந்த கடிதத்தை எழுதியது என்று தெரியாமல் அந்த கடிதம் எழுதியவனுக்காக காத்திருந்தாள். இப்படியே,சந்தியா அந்த கடிதம் எழுதியவனுக்காக காத்திருப்பது, அஸ்வின் சந்தியாவிடம் பேசி சந்தியாவின் கோபத்திற்கு ஆளாவது என்று மூன்று மாதங்கள் சென்றது.

மூன்று மாதங்களுக்கு பிறகு சந்தியாவின் பிறந்த நாள் வந்தது. சந்தியா இன்றாவது அந்த கடிதம் எழுதியவன் வருவானா? என்று எதிர் பார்த்திருந்தாள். அஸ்வின் தன் நண்பர்களிடத்தில் இன்று கடிதத்தை எழுதியவன் நான் தான் என்று கூற போகிறேன் என்றான். உடனே, அவனின் நண்பர்கள் வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்தனர்.

அன்று,சந்தியாவின் பேருந்து நிறுத்தத்திற்கு செல்கிறான்.ஒரு அழகிய பிறந்த நாள் பரிசும்,சாக்லேட்டும் கொண்டு சென்றான். சென்று சந்தியாவிற்கு வாழ்த்து சொல்லி கொடுத்தான். இன்று என் பிறந்தநாள் இன்றும் என்னை கோபப்படுத்தாதேஎன்று சந்தியா கூறினாள்.

உடனே,அஸ்வின் அந்த கடிதத்தில் இருந்த கவிதையை சந்தியாவிடம் கூறினாள்.......

அதற்கு சந்தியா என்ன செய்தாள் அடுத்த பகுதியில் காண்போம்!......



© மனதின் காதலி