...

8 views

கிச்சிணமூர்த்தி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து கடைநிலை ஊழியருக்கான பணி ஆனணை கடிதம் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி வீடு தேடி வந்தது. ஒன்பதாம் வகுப்பு பெயிலான கிச்சா சரியான மூளை வளர்ச்சி இல்லை என்றாலும் கிளிப் பிள்ளை போல் சொன்ன வேலை செய்வான். அதனால் இரக்கப்பட்டு அந்த வேலையை கொடுத்தார் உயர் அதிகாரி நாராயணசாமி பனிக்கர். கிச்சாவுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. கர்ணா கிச்சாவா பைல் செக்ஷனுக்கு கூட்டி போய் எது எது எங்க இருக்குன்னு சொல்லி கொடு. அதுக்கு முன்னாடி லெட்ஜரில் தமிழில் கையெழுத்து போடச் சொல்லு என்றார். 20609 என்ற சீரியல் நம்பருக்கு நேராக கிச்சா கிருஷ்ணமூர்த்தி என கையெழுத்து போட்டான். கையெழுத்து வாங்கிட்டயா
சரி அப்படியே நம்ம செக்ஷன் மக்களை அறிமுகபடுத்து என்றார் அதிகாரி. கிருஷ்ணா வணக்கம் சொல்லு. இவங்க தான் டைபிஸ்ட் மேடம். பையன் புது அப்பாயிண்ட்மென்ட் மேடம். கிருஷ்ணன் பேரு. கொஞ்சம் வெகுளி. சப் ஸ்டாஃப் என்றான். அப்படியா என ஏற இறங்க பார்த்தாள் பவதாரிணி. கிச்சா அவளுக்கு வணக்கம் வைத்துவிட்டு அடுத்த மேசைக்கு வந்தான். சார் தம்பி புதுசு. பேரு கிச்சா. ஓ அப்படியா கிச்சா என்ன படிச்சு இருக்க ? ஒம்போது சார் என்ற போது நாராயணசாமி பனிக்கர் உட்பட அனைவரும் சிரித்தனர். கிச்சாவும் சிரித்து கொண்டே கணக்கர் காளீஸ்வரி மேடம் இருக்கைக்கு கூட்டி வந்தான் கர்ணன். காளீஸ்வரியை கையெடுத்து கும்பிட்டு விட்டு, அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து விட்டு தன் இருக்கைக்கு கூட்டி வந்தான் கர்ணன். கிச்சா உனக்கு இந்த ஸ்டூல் தான் தான் சீட்டு. சரியா, வேற எங்கேயும் உட்கார கூடாது. கிருஷ்ணா அந்தா அங்க பிளாஸ்க் இருக்கு பாரு அதை எடுத்துட்டு வா என்றான் கர்ணன். மின்னல் வேகத்தில் எடுத்துக் கொடுத்தான். கிச்சாவின் வேகத்தை பார்த்த கர்ணன் ஆஹா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் என சந்தோஷபட்டான்‌. நாலு கிளாசில் காபியை ஊற்றி அனைவருக்கும் கொடுத்து விட்டு மிச்சத்தை இருவரும் குடித்தனர்.சிறுபிள்ளைதனமாக சுற்றி திரிந்த கிச்சா இன்று அரசு ஊழியன் அவனை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்த நாறாயணசாமி பனிக்கருக்கும் டைப்பிஸ்ட் பவதாரிணிக்கும் கொத்தடிமை.அன்று மாலை அனைவரும் வேலை முடித்து புறப்பட்டனர். கர்ணன் எல்லா டேபிள் பைலையும் கிருஷ்ணனிடம் கொடுத்து அடுக்கச்சொல்லி விட்டு இரண்டு அறையையும் பூட்டினான். கிருஷ்ணா வா கிளம்பலாம் என அழைத்து மெயின் டோரை பூட்டிவிட்டு, கிருஷ்ணா இன்னைக்கு பார்த்தது தான் உன் வேலை சரியா. சரி வீட்டுக்கு எப்படி போவ என்றான். தூரத்தில் மரத்தருகே நின்ற சைக்கிளை கை காட்டினான் கிருஷ்ணன். காயத்ரி வீட்டு வாசலில் கிச்சாவுக்காக காத்திருந்தாள். தூரத்தில் கிச்சா தெரிந்தான். அவன் அருகே வர வர அவள் கண்கள் குளமாகின. கண்ணீர் மல்க அவனை கட்டி அணைத்து கடவுளுக்கு நன்றி சொன்னாள். ஆனால் கிச்சா மட்டும் மாறவே இல்லை. இன்னும் அலுவலகத்தில் காபி கொடுக்கும்போது சளிப்பிடிச்சிருக்கலாம்.. ஆவி பிடிக்க ஆசைப் படலாம்....பட் ஒன் திங்...
ஹார்ட் காப்பி குடிக்கிறச்சே ஹார்டல உள்ள ஜல்பு போய் விடும் என்பான். இதை மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டு அலுவலகம் சிரிப்பால் அதிர்ந்தது.