...

14 views

பொக்கிஷமான நட்பு -4
"சரி அம்மா அப்பா கிட்ட காட்டுனீயா?" என்று கேட்டாள் பிரியா "ம்ம்ம் காட்டுனே பிரியா, அவுங்க தா இந்த ஐடியாவ கொடுத்ததே" என்றாள் திவ்யா. உடனே பிரியா "வாவ் சூப்பர் டீ" என்று சொல்லி "சேரி வா அம்மா கிட்ட காட்டுவோம்" என்று சொல்லி பிரியா திவ்யாவை வெளியே அழைத்துக் கொண்டு போனாள். "அம்மா அம்மா சீக்கிரோ இங்க வாங்களே" என்றாள் "இதுக்கு வேற வேல இல்ல சும்ம சும்ம என்ன கூப்டு அப்புரம் எங்கியாவது போறது" என்று முனுமுனுத்து கொண்டு பாத்திரத்தை கழுவி கொண்டு இருந்தார் திருமதி செல்வி. "அம்மா... அம்மா" என்று குரல் கொடுத்து கொண்டே இருவரும் சமையலறைக்கு சென்றார்கள். "அட என்னானு சொல்...லு" தன் மகளை திட்ட தொடங்கிய திருமதி செல்வி திவ்யாவை பார்த்ததும் வார்த்தையை முழங்கினார். "என்ன மா ஏதோ சொல்ல வந்தீங்க போல" என்றாள் திவ்யா "அட...