...

6 views

கடைசியா ஒரு முறை Ch - 2

செல்லம்மா எதிர்பார்த்தது போல் சுடச்சுடச் சோறும் குழம்பும் அவள் எதிரில் இருந்தது . ஆனால் , அப்பொழுது அவளுக்கு அது தேவைப்படாமல் போய்விட்டது .

 உண்மைதானே நம் வாழ்க்கையில் பலருக்கும் , அவர்கள் ஆசைப்படும் ஒவ்வொன்றும் கிடைக்கப்பெறும் போது அச்சமயத்தில் அது தேவைப்படாமலும் போய்விடும் , அப்படித்தான் இங்கே செல்லம்மா ஆசைப்பட்டது அவளுக்கு கிடைக்கும் போது அதன் தேவை அங்கு இல்லாமல் போய்விட்டது ,

 ஆம் , அருகாமையில் செல்லம்மாவின் மகன் தற்பொழுது அவளுடன் இல்லை அல்லவா .

 அவள் முன்னே கிடந்த அந்த சுடச் சோறும் குழம்பும் மணக்க மணக்க ஆவி பறந்து கொண்டிருந்தது , அங்கே வீசிய காற்று அந்தத் தட்டுச் சோற்றின் வாசத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது அங்கு ஏதோ ஒரு குரல் ,

 
" எதேய் செல்லம்மா தே செல்லம்மா என்ன பண்ணிட்டு இருக்கவ " அக்குரல் அத்தனை சத்தமாக ஒலித்தும் செல்லம்மா அதற்கு அசையாமல் ஏதோ சிந்தனையில் அப்படியே அமர்ந்து கொண்டிருந்தாள் ஒரு மாமரத்தின் அடியில் , அந்த மாமரத்தின் பழுத்த இலையோடு அவள் கண்ணீர் பேசிக் கொண்டிருந்தது , 

மீண்டும் அந்த குரல் அருகாமையில் வந்து அவளை சீண்டிப் பார்த்தது , 

'' எதே செல்லம்மா எதேய் , என்னவ ? ஏதோ ஆழ்ந்த சிந்தனைல இருக்கவ போல " ,

" அப்படியெல்லா ஒன்னுமி ல்லங்க ஐயா " ...... எல்லா எம் புள்ளையப் பத்தின யோசனைதானுங்க ? எப்படி இருக்கானோ னு , தானுங்க " .ஒரு நிமிடம் நெஞ்சம் மேலேறி அமிழ்ந்து அடங்கியது .

" ஐயா எம் மவங் கிட்டருந்து ஏதாவது கடுதாசி வந்துச்சிங்களா?.

" அதெல்லாம் ஒன்னும் வரல வ , சர்ரி தா , நீ யே வ சோறு சாப்டாம உக்காந்து வானத்த பார்த்துட்டு இருக்க ? , சூடு ஆறிப் போகுமி ல்ல சீக்கிர சாப்டு " ,

" அட சோறு கிடக்குதுங்க ய்யா சோறு என்ன இப்ப , அது சூடு ஆறிப் போனா போகட்டுமுங்க பிறகு தின்றேனுங்க " ,

"சரி ..... அப்படி என்னத்தா யோசிச்சிருந்தா வ உம் மவன பத்தி ? " , 

" ஒன்னு பெருசா யோசன இல்லங்க ஐயா ...... நல்லா இருக்கிறானா ? வேளா வேளைக்கு சோறு கிடைக்குதானு தான்னுங்க... ...... அது தாங்க எங் கவலை வேறெ ன்னத்த கவலை எனக்குங்க " , 

" அதெல்லா அவ நல்லா இருப்பா ...... , நீ உ உடம்ப பாரு உம் புள்ள திரும்ப வரும் போது நீயு தெம்பா இருக்கணுமில்ல " ,

அப்படியே அதைத்தொடர்ந்து செல்லம்மாவின் மகனைப் பற்றிய புலம்பல் வரிசைக் கட்டிக் கொண்டு வந்தது .

" எதேய் , ஏல நிறுத்துவ உ வாக்குல பேசிக்கிட்டே போற எனக்கு கால் ல்லா வலிக்குது வ நா சத்த இங்கிட்டு உக்கார்ர அப்புற நீ உங் கதைய தொவங்கு " , 

 

அங்கு எப்போதோ கட்டி வைத்த தண்ணி தொட்டி , இடிந்தும் இடியாமலும் ஒரு சிறிய சுவரு அவ்வளவாக ஆட்டம் காணாமல் இருக்க , அதன் மேலே நாயக்கர் அமர்ந்தார் , 

 

" ம்ம் இப்ப பேசுவ உனக்கு தோன்றத பேசிட்டே இரு , நானு கேட்டுட்டே ருக்கே " , 

 

" ஐயா என்னையா பேச இருக்கு இந்த சிறுக்கிக்கு , இந்த உலகமே எனக்கு எ ஒத்த புள்ள தா , " 

 

" ம் உம் மவன பத்தி தா பேசு உம் மனசுல இருக்க கஷ்டத்த ல்லா உளம்பு , நான் கேட்டுட்டே இருக்கே அப்பவாச்சு சத்த நேர நீ நிம்மதியா இருப்ப ல்ல " , 

 

" அது சரிதாங்க ...... , ஐயா நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமாங்க ? " , 

 

" கடுதாசி வந்துச்சானு கேக்காத நான் உனக்கு முன்ன கூட்டியே சொல்லிட்டே உ மவ கிட்ட இருந்து எந்த கடுதாசியு வரல " , 

 

" இல்லங்கய்யா அது இல்லங்கய்யா " 

உதடுகள் பிரிக்காமல் மெல்லிய சிரிப்புடன் தலையசைத்தார் நாயக்கர் , 

" ஐயா உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமுங்கலா ? " 

அதே சிரித்த முகம் மாறாமல் செல்லம்மா கேள்வி கேட்டவுடன் மேற்கொண்டு ஒரு மென் சத்த சிரிப்பை உதிர்த்து , அமைதியானார் நாயக்கர் . 

" ஐயோ நா எதாவது தப்பா கேட்டு புட்டே னுங்களா ? " ,ய்யா மன்னிச்சிடுங்க ஐயா " 

" தேய் அது இல்ல வ " , 

" நீயு எத்தன வருஷமா என் வீட்டுல வேலைக்காரியா இருக்கு ஆனா உனக்கே எம் பேரு தெரியல இந்த உலகம் நம்மள எப்படி வச்சி ருக்கு பாரு , ஏழ பணக்காரன் , ஊருக்கு ஒரு சாதி , தெருவுக்கு ஒரு சாதி , மண்ணா போ போற இந்த உடம்பையும் வச்சு ஆம்பள பொம்பளன்னு எத்தன வேத்தும " ... " நாடி நரம்பெல்லாம் அடங்கி ரத்த ஓட்டோ சூடு குறையும் போது உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்க எவனாச்சும் வந்து தூக்குவானான்னு தானே இந்த மனசு எதிர்பார்க்குது நாம வச்சிருக்க பணமும் ஊர் பெரிய வீடுங்கிற மரியாதையு நம்மள வந்து தூக்குமா என்ன ?

" நீங்க என்னென்னமோ சொல்றீங்க ஐயா , நான் ஒரு முட்டா சிறுக்கி எனக்கு ஒன்னு விளங்கலங்க " ,  

" ஒன்னு விளங்க வேண்டா ........ ,ரொம்ப யோசிக்க வேணா ..... 

அந்த முக்கா பல்லு முழுசா விழுந்துற போதுவ " , 

வாயை மூடியபடி பல் தெரியாமல் பேசிய செல்லம்மா அப்பொழுது சிறிதாக வாய் திறந்து சிரித்தாள்

" நீங்க போங்கய்யா " ,என்று சிரித்தபடி கையினை எடுத்து வாய் மேல் வைத்து மறைத்துக் கொண்டு ஒரு சின்ன சிரிப்பை சிரித்து ஓய்ந்தாள் " , 

 

" எதேய் பாக்கெல்லா நீ நிறைய போடுறியாவே பல்லு முழுக்க கரையா , சொத்தையா கிடக்கு " ...

 

" ல்லங்கய்யா , ஏதோ நினவெடுத்தா போடுவ " ,

 

" தே செல்லம்மா உனக்கு இப்ப ன்ன வயசு இருக்கு " 

 

" நீ இங்க வரும் போது மொத மொதல்ல உம் பிள்ளையை தூக்கிட்டு வந்துட்டு ..... , இங்கிட்டு அங்கிட்டுனு ஓடி என்ன விறு விறுப்பா வேலைய பாத்த " 

 

மீண்டும் அந்த நாளுக்கு சென்று செல்லம்மா சிரித்தபடியே விழியில் இருந்து நீரை கரைய விட்டாள் , 

 

அப்படியே அவளை அழவிடாமல் நாயக்கர் ஏதோ பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தார் , ..  

 

மரத்தோடு பழுத்த இலைகள் உதிர மனம் இல்லாமல் நுனியோடு ஒட்டி இருக்கும் சிறு பசை கிளையோடு சேர்ந்து இறுகு பிடித்துக் கொண்டு இருப்பது போல ....

இந்த வாழ்வோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அவர்களின் முதிர்ச்சி ... ....

பசுமை நாட்களைக் காற்றோடுத் தேடிக் கொண்டிருந்தது ,

 

சத்தமாய் சிரிக்க முடியாத பெண் ஜென்மம் , 

சங்குகளின் ஒலியினை செவி மடலோடு அணைத்து வைத்து 

கேட்கும் ரசிகனாய் கிழவன் .... கிழவியின் சப்தமற்ற வலியினை மனதோடு கேட்டிட , காற்றோடு சிரிக்கும் மரங்களின் சத்தத்தோடு இவளின் சிரிப்பும் மறைந்தே ஒலித்தது , முதிர்ந்த குழந்தைக்கும் இதே வேலை தான் போல , 

 ஆம் ,
இவர்கள் முதிர்ச்சியும் உதிர வைக்கும் அடர் காற்றிற்காக காத்துக் கொண்டு தான் இருந்தது , 

பேசிப் பேசியே ஓடிப்போன நேரத்தை , உடல் அசதி காட்டிக் கொடுத்தது , 

நாயக்கர் , " ரொம்ப நேரம் ஆச்சு ஆத்தா நீ சாப்டு நா அப்படியே கிளம்புறே " 

வெகு நாட்கள் கழித்து மகிழ்வை கண்ட செல்லம்மாவுக்கு நாயக்கர் விடை பெறுவது வருத்தத்தையே தந்தது

" ஏங்கய்யா இன்னு சத்த நேரந்தா இருங்களே " , 

" நேர மாகுது வ .......

நீ ..... சோத்த திங்கு , வயித்துக்கு வஞ்சன பண்ணாத " ....

 மெல்லமாக எழுந்து விடைபெற்று சென்ற நாயக்கரை " அய்யோவ் என்று அழைத்து , கையை பின் கழுத்து பக்கவாட்டுக்கு எடுத்துச் சென்று லேசாக தலையை 

 சொரிந்து படி , " உங்க பேரு கேட்டேனுங்களே " 

சற்று சத்தமாக குலுங்கி சிரித்து செல்லம்மா முகத்தை பார்த்த நாயக்கர் தன் பெயரை சொன்னார் .

" கண்ணப்பன் நாயக்கர் , அப்ப ஆத்தா ல கண்ணா கண்ணா னு தா கூப்ட்டாங்கோ , எப்ப மீச வச்சனோ அப்போ இந்த நாயக்கருங்குற பட்டமு கூட சேர்ந்து வந்து ஒட்டிக்கிடுச்சு " , 

 

" அதனால என்னங்க ஐயா நல்லா தானுங்கலே இருக்கு " , 

 

" நல்லா ருக்கா சரி சரி இருக்கட்டும் இருக்கட்டும் " , பேரு நல்லா இருக்குறது இருக்கட்டு , நீ முதல்ல சோத்தைய திங்கு நீ திங்கறதுக்குள்ள இந்த சோத்த இந்த மரத்திலிருந்து கொட்டுது பாரு இலையு அதுல இருக்க பூச்சி புழுவுங்களு முழுசா தின்னுட போது " , 

 

" அது திங்கட்டுங்க ஐயா அதுவும் உசுரு தானே " 

" ஐயா எனக்கு சோறு கொடுத்து ட்டீங்களே அம்மாக்கு சோறு வச்சட்டீங்களா ? " 

" அதெல்லாம் வெச்சாச்சு அவளுக்கு சோறு வக்காம வ உனக்கு கொடுத்து விடப் போறே " 


" ஐயா , நீங்க சாப்டீங்களா ஐயா ? " 

" எதேய் நா சாப்பிட்டே வ நீ முதல்ல சாப்டு " , 

 

மீண்டும் தயங்கி தயங்கி கம்மிய குரலில் செல்லம்மா , 

'' ஐயா மவ கடுதாசி...... , 

செல்லம்மா பேசத் துவங்கிய செய்தி என்னவென்று புரிந்து கொண்ட நாயக்கர்

" அட..... சரி சரி வ உம் மவ கடுதாசி வந்தா கட்டாயம் கொண்டாந்து தாறே " , 

இந்த காளியப்ப நேர முன்னையே உனக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தானா..... காளியப்பன் தா வ வந்து எங்கிட்ட சொன்னா .... அங்குட்டு அந்த செல்லம்மா சாப்பாடு தட்ட முன்னாடி வச்சுட்டு எதையோ யோசிச்சிட்டு இருக்கு னு அதாவ ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தே நா கிளம்புறேன் நீ எதுக்கு வெசனப்படாம வயித்துக்கு சாப்புடு.... நிம்மதியா இரு " , சரியா வ " , 

" சரிங்க ய்யா சரிங்க ய்யா " என்ற பணிவான குரலில் கண்ணப்ப நாயக்கரை அனுப்பி வைத்து காத்துக் கொண்டிருந்த அந்த தட்டுச் சோற்றை எடுத்து பிசைந்து தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டு இருந்த மன பாரத்தை உள் அமுக்கி அச்சோற்றினை வயிற்றுக்குள் நிறைத்தாள் செல்லம்மா ...... 


தூரம் கடந்து சென்ற கண்ணப்பன் திரும்பிப் பார்த்து செல்லம்மா சாப்பிடுவதை உறுதி செய்து கொண்டு , தன் வீட்டை நோக்கிச் சென்றார் , 

தூரமாய் ஒருவர் தன் தோட்டத்தில் நடந்து செல்வதை கவனித்த கண்ணப்பன் ....

" ஏஏஏ யாரு வ அங்க " சத்தமாக குரலிட்டார் ,

கண்ணப்பன் குரலுக்கு சட்டென செவி சாய்த்து அந்த நபர். 


" ஐயா நாந்தானுங்க காளியப்ப " ,

" டேய் என்னடா பண்ற இந்த நேரம் தோப்புல " , அங்குட்டு வாழ தோப்புக்கு தண்ணி ல்லா பாச்சிட்டியா " 

" ஆ ஆச்சி துங்க " , 

"ஏ சாப்டியா வ " , " ஐயா நான ல்லா முன்னவே சாப்பிட்டேனுங்க " , 

" ஐயா , இந்த செல்லம்மா சாப்டுடிச்சுங்களாங்க ? " ,

 

" அது எங்கடா சாப்பிட்டுச்சு மவ நெனப்புல அப்படியே மேல பாத்துகிட்டு உக்காந்துட்டு இருந்தது , இப்ப தா கொஞ்ச நேர அது கிட்ட பேசிட்டு சோறு திங்க சொல்லிட்டு வந்தே " , 

 

" இந்த செல்லம்மா பாவமுங்க ய்யா , புருஷனு ஒண்ணுக்கொண்ணா பாசமா இல்ல , ஏதோ வாழ்ந்தோமுன்னு ஒத்த புள்ளைய பெத்துட்டு அந்த குடிகார பய செத்து புட்டா " , இந்த செல்லம்மா பாண்டி புள்ளைய வளர்க்க எவ்வளோ வசனப்பட்டுச்சு , இப்போ இந்த புள்ளையு இத உசுரா இருந்து பார்த்துக்காம , இத இப்படி அனாதையா விட்டுட்டு அவ எங்கிட்டோ போய்ட்டா " , 

" ஆமா காளியப்பா செல்லம்மா தின தின அது மவனே நினைச்சு வருத்த படுறத பாத்தா எனக்கே மனசு கஷ்டமா இருக்கு " ,

" ஐயா நீங்க ஏனுங்கய்யா வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க நீங்களே உங்க புள்ளைய தொலைச்சிபுட்டு , நாயக்கரம்மாவும் தவறிப் போன நாள் மொதக்கொண்டு ரொம்ப நொடிஞ்சு போய் இருக்கீங்க " , 


" அத நினைச்சு வேற நீங்க ஏன்யா பாரத்த மனசுல ஏத்திக்குறீங்க " , 



#lesapesava
© All Rights Reserved
@poonthaiyal
#கடைசியாஒருமுறை
#kadaisiyaorymurai
#லேசாபேச