...

4 views

பெருந்தன்மை...
பிரதமர் பாதுகாப்பு பிரிவின் தோல்வி என்பது இதுதான். அதிலும் நடந்தது இலங்கையில்!
அணிவகுப்பின் போது, ராஜீவ்காந்தி ஈழத் தமிழர்களுக்கே சாதகமாக செயல்படுவதாக சொல்லி ஒரு இலங்கை ராணுவ வீரன் தனது துப்பாக்கி அடிப்பாகத்தால் தாக்கினான். சரியான இடத்தில் அடி விழுந்திருந்தால் அங்கேயே மரணம் நிச்சயம்.
ஆனால், #பிரதமர்_ராஜீவ்காந்தி அந்த அடிக்குப் பிறகு கலங்கவில்லை. மருத்துவப் பரிசோதனை, சிறிது ஓய்வுக்குப் பிறகு தனது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தார். இலங்கை மக்களிடம் தொலைக்காட்சியில் பேசிய போது அந்தச் சம்பவம் குறித்து அவர்கள் வெட்கப்படவோ, வருத்தப்படவோ தேவையில்லை என ஆறுதல் சொன்னார். திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கம்பீரமாக இந்தியா திரும்பினார். உலக நாடுகள் அவரது பொறுமையை வியந்தன.
அப்போது ராஜிவ் காந்தி நினைத்திருந்தால் ஒரே நாளில் இலங்கையை மண்டியிட வைத்திருக்க முடியும். பெருந்தன்மை என்பது படிப்பாலும் வளர்ப்பாலும் வருவது.
அப்போது 400+ எம்பி களை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி அந்த சம்பவத்துக்காக நாடு முழுக்க போராட்டம் நடத்தவில்லை. யாகம் வளர்க்கவில்லை. மண்சோறு சாப்பிடவில்லை. அண்டை நாட்டின் firing range க்கு போய் எங்கள் தலைவர் உயிரைப் பணயம் வைத்தார் என வீராவேசம் பேசவில்லை. ஒவ்வொரு மாநில முதல்வராக அழைத்து நீ கண்டனம் சொன்னீயா? என கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
ஒரு கண்டன தீர்மானம் போட்டு விட்டு நாட்டின் கவுரவத்தை, வெளியுறவுத் துறையின் தவறுகளை, பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் தோல்வியை பெரிதாக்கி உலக அரங்கில் அவமானப்படாமல் அமைதியாகக் கடந்து சென்றது.
காலம் எனும் கண்ணாடிக்கு ஈவிரக்கம் கிடையாது. அது எவர் முகத்தையும் உள்ளது உள்ளபடியே காட்டும். அந்த காலம்தான் இன்று இன்னொருவரின் முகத்தையும் தரத்தையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamil