...

2 views

இரு விழி 👀 மோதியதால்... இது காதலா 💞..?
பாகம்- 1
2011.01.23 எஸ். இன்ஜினியரிங் காலேஜ் - டி.நகர் (S. Engineering College - T.Nagar) கல்லூரி திறந்து சில வாரங்கள், புதிய மாணவர்கள் இணையும் நாட்கள்..
அன்று தான் நம் கதாநாயகனும் கல்லூரியில் இணைந்தான், கல்லூரி முதல் நாள் என்றாலே ஜூனியர் மாணவர்களை ரேகிங் ( Ragging) செய்வது சில கல்லூரிகளில் காலங்காலமாக நடந்து வருகிறது.
கல்லூரி முதல் நாள் என்பதால் நம்ம ஹீரோ சாந்தமா காலேஜ் குள்ள அவனுடைய உயர்ரக மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி நடந்து வகுப்பறையை தேடி சென்று கொண்டிருந்தான்.
பாவம் இந்த அப்பாவி பசங்களுக்கு தெரியாது இவன் சாந்த சுரூபத்தைக் கொண்ட அழகிய சாணக்கியன் என்று..

அந்த பசங்களும் நம் ஹீரோவை வழிமறித்து வம்பிழுக்க
அங்கே.. (இனி பேச்சு வழக்கில் கதை தொடங்கும்)

ரேகிங் கேங் (Ragging Gang)
1ம்வன்:- ஹேய், இங்க வா.
2ம்வன்:- பார்ரா! சாரு வரமாட்டிங்ராரு, வெளியூரு போல அதான் நம்மல பத்தி தெரியல.
3ம்வன்:- அட, வர்ரானானு பாரு அவன் கண்ணுல திமிர் தெரியிது நாம்ம யார்னு காட்ட வேண்டியது தான்.
மூனு பேரும் சேர்ந்து அவன் பக்கத்துல போறாங்க ஆனாலும் அவன் திமிர் பார்வை மாறல.
2ம்வன்:-என்னடா உனக்கு அவ்வளவு திமிரா?
கூப்பிட்ட வரமாட்டிங்லோ..
1ம்வன்:- இவன் கிட்டலாம் வாய் இல்ல பேசனும் கை தான் பேசணும்னு கை வைக்க போக அவன் அ.ஆ..அம்மா!!!!!! னு கத்திட்டு கீழ விழுந்துட்டான்.
அப்போ தான் அங்கு இருந்த மத்தவங்கனாலயும் என்ன நடந்திச்சினு யூகிக்க முடிஞ்சது (அப்றம் என்ன காலேஜே வேடிக்க பாக்க கச்சேரி தான்... அவங்க அங்க கச்சேரி நடத்தட்டும் நாம ஹீரோவப்பத்தி கொஞ்சம் பாத்துட்டு வர்லாம் யாருனு)

ஹீரோ பெயர் ரஹஸ் நக்ஷ் (Rahas Naksh)
வயது 20
காற்றில் பறக்கும் மெல்லிய கேசம் கழுத்து வரை வளர்ந்து இருந்தது விரித்து போட்டிருந்தான்
ஒன்றை கண்களாலேயே ஆராய்ந்து பார்த்து சொல்லும் அவன் கண்கள்
கூர்மையான நீண்ட நாசி
பெண்களை மாத்திரம் அல்ல ஆண்களையும் வர்ணிக்கலாம் என்று சொல்வது போன்று வர்ணிக்க கூடிய அவன் இதழ்கள்
ஆறடி உயரம் தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் அவன் உடல்
கோபங்கொண்டாளே எங்கு வெளியே தெரிந்துவிடுவேன் என்று துடித்துக் கொண்டிருக்கும் சிவப்பு வெள்ளை நிறம் கொண்ட மேனி..
அம்மா சஹீத்தா (sahita)
அன்பானவர் மிகவும் பொறுமையாக இருப்பவர்
வீட்டில் தன் பிள்ளைகளை பார்த்துக் கொண்டு நல்ல அம்மாவாகவும் தன் கணவனுக்கு அனைத்து உதவிகளையும் புரிந்து அன்பான மனைவியாவும் இருக்கிறார்.
அப்பா நிர்வான் (Nirvaan)
மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்பவர்
சஹீத்தா கான்ஸ்ட்ரக்சன் கம்பனி லிமிடெட்
(Sahita Construction Company Limited) என்று தன் மனைவியின் பெயரில் ஒரு கம்பனி நடாத்தி வருகின்றார்.
ஹீரோவின் அண்ணா இலியான் (Ilyan)
தங்கை ரிஹா (Rhea)
தம்பி ஹஸி (Haze)
இவர்கள் அனைவரும் மும்பை (Mumbai) இல் வசிக்கிறார்கள் ( என்னடா டி நகர் காலேஜ் நம்ம ஹீரோ சேர்ந்தனு சொன்னாங்ளே இப்போ ஹீரோ குடும்பம் எல்லாரும் மும்பைனு பார்க்குறிங்கலா நம்ம ஹீரோ மட்டும் இப்போ சென்னை (Chennai) ல காலேஜ் முடிக்க வந்து இருக்காரு நண்பர்களே..
(இப்போ கதைக்குள்ள போலாம்)

அங்க முதல் நாளே அடிதடி சண்ட நடக்க இத எல்லாரும் வேடிக்க பார்த்துட்டு இருக்கும் போது நம்ம சீனியர்ங்களையே யாரு இப்புடி வெளுத்து வாங்குறதுனு ஆர்வமா ஒரு உருவம் வந்து கண் சிமிட்டாம அவன அழகா பார்த்துட்டு இருந்தானு சொல்றத விட ரசிச்சிட்டு இருந்தாங்கனு தான் சொல்லனும்..
இது யார்னு தெரிலயா நம்ம கதையோட ஹீரோயின் தாங்க ( ஹீரோவ மட்டும் வர்ணிச்சி சொன்னா நம்ம ஹீரோயின் கோவிச்சிக்குவாங்கல அதனால இவுங்கலயும் யார்னு பார்த்துட்டு வந்துரலாம்)

ஹீரோயின் பெயர் அரியா (Aria)
வயது 20
மை தீட்டா குறுகுறு பார்வை கொண்ட கருவிழி படைத்தவள்
மழை மேகம் போல் கரு நிற கூந்தல் கொண்ட கார் குழலி
கொஞ்சம் கடித்து பார்க்க தோன்றும் முந்திரி மூக்கழகி
கோபங்கொண்டு சுழித்தாளே எங்கு வலித்து விடுமோ என்று பார்ப்பவர்கள் கவலை படும் இதமான இதழ் கொண்டவள்
ஐந்தரையடி உயரமும் வளைந்தாடும் இடை மொத்தத்தில் ஒரு பிரம்மன் செதுக்கிய சிற்பம் அவள்..
அம்மா மிலெனா (Milena)
மிகவும்  கண்டிப்பான வளர்ப்பு
வீட்டில் தன் பிள்ளைகளை கவனித்து வருபவர்
அப்பா நீவ் (Neev)
நேர்மை மற்றும் பொறுப்புடன் நடந்து கொள்பவர்
அதிகம் கோபப்படும் குணம்
தான் நினைத்ததை மற்றவர்கள் விருப்பமின்றி செய்து முடிப்பவர்
வெளிநாட்டில் ஒரு கம்பனியில் வேலை பார்க்கிறார்
ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தன் குடும்பத்தை பார்க்க வருவார்
தங்கை அனியா (Aniyah)
தம்பி ஆதவ் (Aadav)
தம்பி ஆதேஷ் (Aadesh)
இவர்கள் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்கள்
(இப்போ வாங்க திரும்ப கதைக்குள்ள போலாம்)

அரியா நம்ம ஹீரோவ ரசிட்டு இருக்க அங்க சண்டையே முடிஞ்சுரிச்சி..
அரியா ரஹஸ்ஸ பார்த்துட்டாங்க ஆனால் ரஹஸ் எப்போ அரியாவ பார்ப்பான்..?
எப்போ இந்த இரு விழிகள் மோதிக்கொள்ளும்.....

                                                    
           

   

                                                                   இரு விழி தொடரும்...

(Hai frndz,
Enoda story 1st part oru theliwana introduction a irkanumnu nenachen adan inda partla introduction Mattm kudthu irken thawarugal irdhal mankawm.. keep supporting frndz 🙏🏻😊)


© itsmeyewrdrugarica