ஏதோ....
அந்தச் சிறுவன் ஒரு கிராமத்தில் வசிப்பவன். வீட்டில் அப்பா சரியில்லை... குடிகாரர். உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். சொல்ல வேண்டுமா... சிரமமான வாழ்க்கை. அம்மா, கூலி வேலைக்குப் போவார். வயல் வேலை, வீட்டு வேலை, ரோடு போடுவது, கட்டட வேலை... கிடைத்த வேலைக்கெல்லாம் போவார். சில நாள்கள் வேலையிருக்கும்; பல நாள்களுக்கு வேலையிருக்காது. என்னதான் சம உரிமை பேசினாலும், உடலுழைப்பில் இன்னமும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் பார்க்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம். பசி, பட்டினி, வறுமையோடு நகர்ந்துகொண்டிருந்தது வாழ்க்கை.
சாப்பிட சப்பாத்தி, தொட்டுக்கொள்ள பச்சை வெங்காயம், தண்ணீர்... இது மூன்று வேளைக்குக் கிடைத்தாலே அந்த வீட்டுக்கு அது பொன்னாள். இரவில் சாக்கை விரித்துத்தான் படுப்பார்கள். இந்தக் கஷ்டமான சூழலிலும், ஏதோ ஒரு மன உறுதியில் அந்தச் சிறுவனைப் பள்ளிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் அவன் அம்மா.
ஒருநாள் அவன் பள்ளியிலிருந்தபோது மழை பிடித்துக்கொண்டது. வெளுத்து, வாங்கிய மழை பூமியையே புரட்டிப் போடுவதுபோலப் பெய்துகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குப் போகும் வழியிலிருந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதைத்...