...

8 views

இருமனதின் முடிச்சுகள்

மனதின் வண்ண கனவுகள், தனிமையின் தூண்டுதலுடன் வாழ்வின் அழியா சுவடுகளை புரட்டிப் பாா்க்கும் ராஜீ. ஆயிரம் ஆசைகளை சுமந்து கொண்டு மாலை பெண் பார்க்க வருவதற்கு தயாராகும் அவள்.  தனக்குள் பல கேள்விகள்,  நெருடல்கள்  வரன் முடியுமா? என்றெல்லாம் எழுந்தன.
அவளை பார்க்க வரும்  ஜீவாவிற்கும் இதே கேள்விகள் ஆனால் இருவருக்கும் ஒரே எண்ணம், இது இல்லை என்றால் மற்றொன்று. தேர்வு எழுதும் குழந்தை போல் தயாராகி கொண்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் என்னும் அவளது அக்காவின் குரல். மனதில் மகிழ்ச்சி, பயம் அனைத்தும் நிறைந்த அத்தருணம்  ஒரு பெண்ணிற்கு அச்சம், மடம், நாணம் அனைத்தும் உண்டு என்பதை அவ்வப்போது கண்டறிந்தால்.
அவளை அழைத்து சென்று அனைவர் முன்னிலையில் அமர வைத்தார்கள்.
தன் குடும்பத்தினர், மாப்பிள்ளை வீட்டார் அனைவரின் பார்வையும் அவளை நோக்கியது. அனைவரின் முன்னிலையில் ஜீவாவை பார்ப்பதற்கு தயக்கம் ஆயினும் அவளது கண்களின் தேடுதல்  வென்று விட்டது.
ஜீவாவை பாா்த்தது விட்டாள். கண் இமைகளின் பந்தாட்டத்தில் அவளது மனதில் வீழப்போகும் முதல் விக்கெட் அவன் தான் என்று அவ்வப்போது அவள் அறியவில்லை.
இருவருக்கும் ஒரே எண்ணம் நம்மை பிடிக்குமா என்று அவர்களுக்குள் கேள்வி எழுப்பி கொண்டனர். ராஜீ  அறையினுள் சென்றால். மனதின் அலைகள்  இருவருக்கும் ஓயவில்லை. சற்று நேரத்தில் ராஜீ  என்று ஒரு குரல் பல நாள் நெருக்கமோ?  என்று தோன்றிய படி. வேறு யாரும் இல்லை ஜீவாவின் தாயார். அந்த குரல் அவளுக்கு பாசத்தையும், உரிமையையும் காண்பித்தது. 50% அவளின் குழப்பம் தீர்ந்தது.
அனைவரும் மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா ? என்று கேள்வி எழுப்பினார்கள். அவளும் சக பெண்களை போல் தாய் தந்தையை சாற்றினாள். ஆயினும் அவளது விருப்பத்தை எதிர் நோக்கினார்கள்.
ஜீவாவை அழைத்து கேட்டார்கள்  அதற்கு அவனோ எனக்கு ஒன்றும் இல்லை  பெண்ணிற்கு  என்னை பிடித்திருக்கிறதா என்று கேளுங்கள் என்றான்.  ஜீவாவின் முன்னுரிமை தரும் குணம் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. 50%  இப்போது 100% ஆகின. அனைவருக்கும் மகிழ்ச்சி நிச்சயத் தாம்பூலம் மாற்றும் நாள் குறித்து விட்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி னார்கள். ஜீவா தனது கண்களின் மூலம் அவளிடம் விடை பெற்று கொண்டான். அன்றே அவளது கண்களின் தேடுதல் தொடங்கியது...


© Ramyakathiravan