...

17 views

ஜூரம்
மதுரையில் திங்கட்க்கிழமை முதல் மீண்டும் ஒரு வாரம் லாக்டவுன் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா நோய் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மதுரை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா என்று செய்தி வாசித்தார்கள். சற்று கலக்கமாக தான் இருந்தது‌ இந்த நேரத்தில் மதுரை முழுவதும் புளு காய்ச்சல் வேறு ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டிருந்தது. எங்கள் வீட்டில் நான் என் மனைவி மூத்த மகன் காய்ச்சலில் படுத்து இப்போது தான் மீண்டு வந்தோம். சின்ன மகனுக்கு இன்று லேசாக காய்ச்சல் அடிக்க அவனை அருகில் வைத்து பார்த்துக் கொண்டோம். ஆண்டவா இவனுக்கும் காய்ச்சல் சீக்கிரம் சரியாக வேண்டும் என்று வேண்டும் போது மணி இரவு சரியாக ஒன்று. இன்று தான் அமெரிக்க நண்பன் கார்த்தி பால்ய நண்பன் கண்ணன் தஞ்சையிலிருந்து பிஎஃ சங்கருடன் ஜூம் மீட்டிங்கில் கலந்துரையாடலில் கலந்து கொண்டேன். இனிமையாக நேரம் போனது. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம் என்று விடை பெற்று சூடாக நான்கு இட்லி சாப்பிட்டு படுக்கச் சென்றேன்.