...

13 views

பாதித்தாள் பதுமினி...
நேற்று எனக்கு கதை பதிவிட ஆதரவு தெரிவித்த எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...
இக்கதையை படித்து விமர்சனங்கள் ஏதும் இருப்பின் தெரிவிக்கவும் ஆதரவுகளையும் தெரிவித்து இப் ப்ரியா விர்கோவை கதை உலகத்திலும் சேர்த்து விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கதை-1

பாதிக்கப்பட்ட பெண் : ஷீலா
உதவிய கரங்கள் : ஆலெக்ஸ், அருட் சகோதரி ஸ்டெல்லா.

கோடிக்கணக்கான மக்களை கொண்ட இலங்கையில் ஒரு பெண் நல்ல அழகுடனும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தாள்.

தாய் தந்தை இறந்த பிறகு ஷீலாவின் சகோதரர்கள்
வற்புறுத்தி இவளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
இவளும் திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். மூன்று மாதங்கள் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக சண்டை சச்சரவுமாக இவளுக்கும் இவளது கணவருக்கும் இடையில் இருந்தது. இவள் திருமணம் செய்த ஆணும் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பவன்.

இவள் திருமண வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் கிடைக்காததால் திருமண வாழ்க்கையை கைகழுவினாள்.

இவள் புகுந்த வீட்டை விட்டு வெளியே வந்து பிறந்த வீட்டிற்கு வந்தாள். இவள் வீட்டில் உள்ள சகோதரர்கள் எல்லோரும் இவளை ஏசி தீட்டி இங்கே வர வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார்கள். இவளுக்கு எங்கேயும் செல்ல இடமில்லை என்பதால் இவள் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு செல்ல இலவசமாக காசும் தந்து வீசா டிக்கெட்டும் வேலையும் எடுத்து தருவதாக ஒரு பத்திரிகையில் வாசித்த ஞாபகம் வந்தது. இவளும் உடனே அந்த நாட்டின் தூதரகத்திற்கு சென்று கேட்டுப் பார்த்தாள்.



அவர்கள் பாஸ்போர்ட் இருக்கிறதா? என்று கேட்டார்கள். ஷீலா இல்லை என்று சொன்னாள். அப்படியென்றால் பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையும் எடுத்து வாருங்கள் என்று கூறினார்கள். தங்குவதற்கும் இடம் இல்லாமல் சிறு தொழில் ஒன்றை செய்து கொண்டு ஒரு வீட்டில் தங்கி இருந்து ஒரு மாதத்தில் தன் நகைகளை விற்று பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் எல்லாம் எடுத்து மீண்டும் தூதரகத்திற்கு வந்தாள். சில விண்ணப்ப படிவங்களை கொடுத்து நிரப்ப சொல்ல இவளும் நிரப்பி கொடுத்தாள்.  மூன்று கிழமைகளில் வீசா டிக்கெட் எல்லாம் வந்துவிட்டது விற்ற நகைகள் எல்லாவற்றையும் இலவசமாக கிடைத்த பணத்தில் கொஞ்சம் எடுத்து மீட்டு எடுத்தாள்.





வீட்டு வேலைகளை தான் ஷீலா செய்யவேண்டும். அவ் வீட்டுகளுக்கு மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும் போது இவள் மற்றவர்களுடன் தயக்கத்துடன் பேசிப் பேசி இருந்து கொஞ்ச நாட்கள் செல்ல செல்ல எல்லோரிடமும் நன்றாக பேச ஆரம்பித்தாள்.

இவள் அங்கே சென்று எண்ணிலடங்காத பல நபர்களை நண்பர்களாக்கி கொண்டாள். பணத்திற்காக பிணமும் வாய் திறக்கும் போல இவளும் செல்லக்கூடாது...