...

1 views

வர்மா
அத்தியாயம் 2
ரம்யா கைபேசியில் நாம் காதலிப்பது காலேஜ் முழுதும் தெரிந்து விட்டது இதற்க்கு மேல் என்னால் சும்மா இருக்க முடியாது எனக்கும் யாரும் இல்ல என்னைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ வர்மா எனக் கேட்க அவன் ஒரு நிமிடம் ஆடிப் போனான்,

கதை எங்கோ ஆராமித்து எங்கோ முடியும் போல் தோன்றியது வர்மா விற்கு அவளைச் சமாதானம் படுத்த முயன்றான் என்ன தான் இருவருக்கும் 20 வயது ஆகி இருந்தாலும் வர்மன் பற்றிய சில உண்மைகள் யாருக்கும் தெரியாது பள்ளி பருவம் முதலில் உடன் இருக்கும் சதீஷ் அவனிருக்கும் தெரியாது, மனதில் எல்லா குழப்பம் இருக்க அவனால் ரம்யா வை விட்டுச் செல்ல முடியாது என்பதை உணர்ந்தான் இன்னும் இரண்டு மாதம் தான் கல்லூரி இருப்பதால் அவளைக் கல்லூரி முடிந்த பின் திருமணம் செய்து கொள்ளலாமென முடிவு எடுத்து அவளிடம் கூறினான் அதற்க்கு ரம்யா வும் sari எனக் கூறி விட்டு நாளைக் காலைக் கல்லூரியில் சந்திப்போம். எனக் கூறி விட்டுக் கைபேசியை அணைத்து வைத்தால்.

வர்மா அவனின் வீட்டிலிருந்து யோசித்து கொண்டு இருந்தான் இன்னும் 4 வருடம் இருக்கிறது எனது வாழ்க்கையின் சிறைவாசம் முடிய மீதம் இருக்கும் காலம் யாவும் இவளை எப்படி வைத்துக் காப்பாற்ற போகிறோம் என யோசித்து கொண்டு இருந்தான்.

தனது 24 ஆவது வயதில் தான் தன் குடும்ப சொத்து மற்றும் அதைப் பயன்படுத்தும் உரிமை அவனைற்கு கிடைக்கும் எனவும் அதுவரை தான் யாரெனக் கூற கூடாது என அவனது குடும்பம் பெரிய கட்டளை விதித்து உள்ளது.

ஆம் அவன் ஆதித்யா குடும்பம் சேர்ந்தவன் அவனது தாத்தா விக்ரம் ஆதித்யா தான் வர்மா விற்கு இத்தனை பெரிய போட்டி வைத்து உள்ளார் இத்தனை நாட்கள் அவன் 5 ஆம் வகுப்பிலிருந்து தான் யார் என்பதை மறைத்துத் திருநெல்வேலி யில் வாழ்ந்து வருகிறான் ஆதித்யா குடும்பம் இந்தியாவில் பெரிய பணக்கார குடும்பத்தில் முதல் இடத்திலும் உலக அளவில் 3 ஆவது இடத்திலும் இருக்கிறது மேலும் சிறு தவறு செய்தால் கூட ஆதித்யா குடும்பத்திலிருந்து நீக்கப் படுவார்கள்

விக்ரம் ஆதித்யா வின் மூன்றாம் மகன் ராஜா ஆதித்யன் மகன் தான் வர்மா

ஆதித்ய வர்மா.

இத்தனை காலம் இவை அனைத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தான் வர்மா.

இந்த ஏழை நாடகம் எல்லாம் பணத்தின் மீது உள்ள மோகம் குறைந்து அதான் மீது மதிப்பு வந்து எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என உணர்த்துவத்துக்கு தான்.

இந்தக் குடும்பத்தில் இருக்கும் பெரிய தலை விக்ரமாதித்யா வின் முடிவு தான் இறுதியாக இருக்கும்.

வர்மா இவை அனைத்தையும் யோசித்து கொண்டு இருந்தான்.

தான் விவரம் அறிந்த வகையில் இப்படி இருப்பதால் தன் குடும்பம்பற்றிப் பெரிதும் யாரும் அறியாத வகையில் இருப்பதால் ஒரு நாள் எப்படியும் ரம்யா விடம் கூற தான் வேண்டும் என யோசித்து கொண்டு இருந்தான்

Sari இன்னும் நான்கு வருடம் இருக்கிறது அதனால் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாமென யோசித்து மாலை செல்ல வேண்டிய இடத்திற்கு தனது டெலிவரி பாய் உடை அணிந்து சென்றான்.

ஒரு ஆர்டர் வர அதைக் கொடுக்க வண்ணாரப் பேட்டையில் இருக்கும் ஒரு தெருவிற்கு சென்று அங்கே இருக்கும் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான் அந்த வீட்டிலிருந்து ஒரு வாலிபன் வந்து வர்மா முகத்தைப் பார்த்துச் சிரித்து கொண்டு அவன் கொண்டு வந்த பார்ஸல் யை அவன் மூஞ்சில தூக்கி வீசி விட்டுக் கதவை மூடினான்

அவன் வேற யாரும் இல்லை ரம்யா வை ஒருதலை காதல் செய்து கொண்டு இருந்த விக்கித் தான்.

மீண்டும் வீட்டிற்கு வெளியில் வந்து அவனைப் பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்.

கீழே கொட்டி இருக்கும் உணவுப் பொருட்களை மொபைலில் போட்டோ எடுத்து அதை வர்மா வுடன் சேர்ந்து photo எடுத்துக் கொண்டான்

வர்மா எதற்கு எனக் கேட்கும்பொழுது அவன் பேச விருப்பம் இல்லையெனக் கூறி உள்ளே செல்ல நினைக்கும் பொழுதில் வர்மா கூப்பிட்டான்




டேய் விக்கி இங்க வா உன் கிட்ட அவ்ளோ காசு இருந்தா இப்படி தான் உணவை வீணாக்கிவியா உனக்கு அறிவு இல்லையா எனக் கூற அவன் மேலும் கோவம் அடைந்து வர்மா வை அடித்து விட்டான்.

டேய் உனக்கு என்ன திமிரு இருந்த என்ட பேசுவ உனக்கு என்ன தகுதி இருக்கு எனக் கேட்க வர்மா அமைதியாக நின்றான் விக்கி அவன் கையில் வைத்து இருக்கும் மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டு இருப்பது தெரிய வர விக்கியின் மூஞ்சில ஒரு குத்து விட்டு விட்டு அந்த மொபைளை பிடுங்கி கீழே வீசி நொறுக்கி விட்டு வெளியே செல்ல முயன்றான்

அதுவரை வீட்டில் அமைதியாக இருந்த விக்கியின் நண்பர்கள் இருவர் வெளியில் வந்து பார்க்க அங்கே வர்மா சென்று கொண்டு இருந்தான் கீழே விக்கி விழுந்து இருக்க ஓடிச் சென்று வர்மா வைப்பிடிக்க அந்த இருவருக்கும் அடி விழுந்தது.

அங்கிருந்து வெளியில் வரும்பொழுது பக்கத்து தெருவில் டெலிவரி முடித்து விட்டுச் சதீஸ் வந்தான்.

இருவரும் ஒன்றாக அவர் அவர் வண்டியை ஓட்டிச் செல்லும்பொழுது அங்கே நடந்த வற்றை பற்றிச் சதீஸ் யிடம் கூறினான்.

சதீஸ் அதைக் கேட்டு விட்டுத் திகில் அடைந்தான்.

என்ன மச்சான் சொல்ற அந்த விக்கி

SC physics படிக்கிறான் அவனையா அடிச்ச.வர்மா ஆமா டா மச்சான் அவனைத் தான் அடிச்சேன் எனக் கூற

சதீஸ் பயந்து கொண்டு இருந்தான் வர்மா கூறியதை கேட்டு.

சதீஸ் : டேய் ஏன் டா அவனை அடிச்ச அவன் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா அவனுக்கு னு காலேஜ் லப்பெரிய கூட்டம் இருக்கு அவனுகளுக்கு தெரிஞ்சா நாளைக்கு நம்ம தாண்டமாட்டோம் னு சொல்லிப் பயப்பட. அதற்க்கு வர்மா விடு பாத்துக்கலாமெனக் கூறினான்.

விக்கி அடி வாங்கிய பிறகு அவன் நண்பர்களுடன் சேர்ந்து அவனை எதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தான் விக்கி அடி வாங்கியது அவனின் அப்பா கிஷோர் அறிய அவர் மிகவும் கோவம் அடைந்து என்ன செய்ய என யோசித்து கொண்டு இருந்தார் அப்பொழுது விக்கி அவருக்குக் கால் செய்து நீங்க எதும் செய்ய வேணாம் நான் எல்லாமே பார்த்துக் கொள்கிறேன் நீங்கக் காளி யை மட்டும் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறி விட்டுக் கால் கட் செய்தான்.




அருகில் இருந்த காளியை பார்த்து விக்கி என்ன சொல்றான் அதைச் செய் எனக் கூறிவிட்டு சென்றார் கிஷோர்.




காலை 9.00 மணி கல்லூரி திறந்து எல்லோரும் வகுப்பறை நோக்கிச் செல்ல வர்மா வருவதை கண்ட சிலர் இவன் எப்படி இன்னும் இருக்கான் விக்கி இவனைச் சும்மா விட்டுட்டு போய்ட்டான் போல என நினைத்துக் கொண்டு இருந்தனர் அப்பொழுது தூரத்திலிருந்து வந்த விக்கியின் நண்பர்கள் வர்மாவை சுற்றி நின்று கொண்டு இருந்தனர் அவனிடன் ஒருவன் கேட்டான் நேத்து பெரிய இவன்போல விக்கி மேல கை வைசுருக்க எனக் கூற அமைதியாக இருந்த வர்மா மீது ஒருவன் கை வைக்க அசராமல் இருந்தான் வர்மா மேலும் எந்தப் பிரச்சனை வேண்டாமென நினைதகு அமைதியாக இருந்தான் அந்த அமைதியை கண்டு சுற்றி இருந்த எல்லோரும் இவன் பயந்து விர்த்தானென நினைத்துச் சிரித்து கொண்டு இருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த வறுவல் வர்மா வின் அருகில் வந்து அவளை அடிக்க முயற்சி செய்யும் பொழுதில் அவன் வர்மா பார்த்த பார்வையில் பயந்து ஒதுங்கிச் சென்றால் இருந்தாலும் பயம் வெளிய காட்டாமல் அருகில் இருக்கும் அவளின் நண்பனிடம் கூறினால் இவனை ஏதாவது செய்யணும் அப்போதான் நாம எல்லோரும் விக்கிக் கக்கு நம்பிக்கையான நண்பர்கள் ஆக முடியும் எனக் கூற அவர்கள் எல்லோரும் தூரத்தில் ஒரு வாகனம் வருவதை நோக்கினர் அதில் விக்கியுடன் காளி வருவதாய் கண்ட எல்லோரும் பயந்தி இதுங்கி நிற்க

விக்கிக் காளி வந்த வாகனம் வர்மா முன் வந்து நிற்கக் காளி கீழே இறங்கினான். விக்கிக் காளியிடம் அவனை வண்டியில ஏத்து எனக் கூறி விட்டு அமர்ந்து இருந்தான். இங்கே நடப்பதை எல்லாம் கீதா ரம்யா விடம் கூற சென்றால் அதை அறிந்த ரம்யா அங்கே ஓடி வந்தால் அவளைக் கண்ட விக்கிக் காளியிடம் அந்த ரம்யா வையும் இங்க இழுதுட்டு வா எனக் கூற வர்மா நடுவில் வந்து தடுத்து நின்றான் அவனை இருவர் வந்து பிடித்துக் கொள்ள காளி அவளை நோக்கிச் சென்றான். வர்மா இங்கே தான் யார் என்பதை காண்பிக்க கூடாது என அமைதி காத்து கொண்டு இருந்தான். காளி ரம்யா வை இங்கே இழுத்து கொண்டுவ வர வர்மா விக்கியிடம் உனக்கும் எனக்குத் தான் பிரச்சனை அதில் ரம்யா வை இழுக்காத எனக் கோவமாகக் கூற விக்கி அலட்சியம் செய்து ரம்யா அருகில் செல்ல மீண்டும் எச்சரிக்கை செய்தானென மேல தானே கோவம் நம்ம பேசிக்கலாமென மறுபடியும் கூற கோவம் வந்த விக்கி ரம்யாவை அடித்தான். வர்மா கோவத்தில் அந்த இருவரை தள்ளி விட்டு ரம்யா அருகில் வர யாரோ வர்மா பின்னந்தலையில் அடித்தனர் அங்கயே மயங்கி விழுந்தான் அவனை அந்த வண்டியில் தூக்கி போட்டுக் கொண்டு ரம்யா வை மீண்டும் ஒரு முறை அடித்து விட்டு இது என்னோட காதலை வேணாம் சொல்லிட்டு அவனை லவ் பண்றேன் ன்னு சொன்னதுக்கு எனக் கூறி விட்டுச் சென்றான்.

இங்கே நடப்பதை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க அருகில் வந்த கீதா அவளிடம் பேசத் தொடங்கினால் இங்க பாரு ரம்யா உனக்கு நல்லா தெரியும் வர்மா கக்கு யாரும் கிடையாது சரியா அவனைப் பற்றி உனக்கு எதும் தெரியாது இதுக்கு மேல அவன் உயிரோட வருவான் னு எனக்குத் தெரியல இந்த ஊருல விக்கி யோட அப்பா வ மீறி எதும் செய்ய முடியாது எனக் கூற திகைத்துப் பார்த்தால். அடுத்து என்ன செய்ய என யோசிக்க அவளிர்க்கு சதீஷ் நியாபாகம் வரச் சுரேஷ் யிடம் கேட்டு நம்பர் வாங்கி கால் செய்தால்...
© அருள்மொழி வேந்தன்