...

10 views

காதல் பயணம்-4
காதல் பயணம்-4

அஸ்வின் சந்தியாவிடம் காலை கண்டிப்பாக பேசி விட வேண்டும் என்று எண்ணி காலையில் பேருந்து நிறுத்தம் செல்கிறான். வழக்கம் போல் அவன் நண்பர்கள் இருவருடன் பேருந்து ஏறுகிறான். நேற்றைய தினம் போலவே சந்தியா அதே இடத்தில் நின்று கைபேசியை பார்த்து கொண்டிருக்கிறாள். அஸ்வின் பேருந்தின் நடு இருக்கையில் அமர்ந்து இருந்தான். திடீரென அஸ்வின் அண்ணன் குமார் பேருந்தில் ஏறி விட்டார். அஸ்வின் ஏன் இன்று பேருந்தில் வந்தீர்கள்? என்று கேட்டான்.என் இருசக்கர வாகனம் பழுதாகி விட்டது என்று குமார் கூறினார்.அதனால் தான் பேருந்தில் உன்னுடன் செல்லலாம் என்று வந்தேன் என்றார்.

அஸ்வின் மிகவும் சோகமாகி இன்று தான் உங்கள் வாகனம் பழுதாக வேண்டுமா?என்று நினைத்து கொண்டு இன்றும் பேச முடியவில்லையே என்று எண்ணிவருத்தமடைந்தான் .பின்,
பேருந்து நிறுத்தம் வந்தது. அஸ்வினை அவன் கல்லூரியில் விட்டு தன் வேலைக்கு புறப்பட்டார் குமார்.

சந்தியா தன் கல்லூரியில் நுழைந்து வகுப்பறைக்கு சென்றாள்.அங்கு சந்தியாவின் நெருங்கிய தோழியான ரம்யா வரவில்லை. அவள் கல்லூரியில் நடனத்தில் சேர வேண்டும் என்று எண்ணி கொண்டிருக்கும் போது,ரம்யா வந்தாள். சந்தியா ரம்யாவிடம் தனக்கு பிடித்ததை பற்றியும்,தன் கடந்த கால வாழ்வு பற்றியும் பேசி கொண்டிருந்தாள்.கல்லூரி மணி ஒலித்தது. ஆசிரியர் முதல் வகுப்பை தொடங்கினார்.முதலில் தமிழ் வகுப்பு நடைப்பெற்று கொண்டிருக்கும் போது ஒரு இடையூறு.

சந்தியா எண்ணியது போலவே விளையாட்டிற்கும், நடனத்திற்கும் விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுக்க வேண்டும் என்று ஒரு சில மாணவிகள் வந்தனர். தமிழ் ஆசிரியர் சலித்த படி எடுத்து கொள் என்று கூறி அமர்ந்தார். சந்தியாவும் ரம்யாவும் நடனத்தில் பெயர் கொடுத்தனர்.

அங்கு சோகத்தில் இருந்த அஸ்வின் தன் நண்பர்களிடத்தில் நடந்த அனைத்தையும் கூறினான்.ராமும், தினேஷும் கேட்டு விட்டு மாலை கண்டிப்பாக பேசி விடு நாங்கள் இருக்கிறோம் என்று கூறினர்.

மாலை நேரம் வந்தது. பேருந்து நிலையத்திற்கு சென்றான்.பேருந்து வந்தது. ஆனால் சந்தியா வரவில்லை. அவள் நடனத்தில் பெயர் கொடுத்த அனைவரிடத்திலும் நடன ஆசிரியை ஆலோசிக்க வேண்டும் என்று கூறியதால் அங்கு சென்று விட்டாள். அஸ்வின் மிகவும் சோகத்துடன் வீடு திரும்பினான். அன்று இரவு அஸ்வின் ஒரு முடிவு மேற்கொண்டான்.........

அது என்ன முடிவு? அடுத்த பகுதியில் காண்போம்........


© மனதின்_காதலி

#lovefeelings #tamilstories #tamillove #kavi #tamikavithaigal #tamilan #tamilpost