...

11 views

தாய்மை
காலையில் எழுந்ததிலிருந்து நூறாவது முறையாக தன் மகள் ஆத்மீகாவிடம் கூறிக் கொண்டிருந்தார் சோபனா.

பாப்பா, பாத்து பத்திரமா போய்ட்டு வரனும் சரியா? யாராவது தெரியாதவங்க எதாச்சும் கொடுத்தா வாங்க கூடாது. கூட படிக்குற புள்ளைங்க கூடவே போய்ட்டு, கூடவே வந்துடனும்.தெரியாத இடத்துக்குல்லாம் தனியா போய் மாட்டிக்க கூடாது. என்று அக்கறையும் பாசமும் நிறைந்த தாயாய் தன் மகளுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தார் தாய் சோபனா.

அம்மா, என்னை இன்னும் சின்ன பொண்ணு மாதிரி ட்ரீட் பண்ணுறத ஸ்டாப் பண்ணுங்க. உங்க பொண்ணுக்கு இப்போ 18 வயசு ஆகிடுச்சி.  காலேஜ்க்கு போகப் போறா. ஆனா இன்னும் எல்.கே.ஜி பிள்ளை போல அட்வைஸ் பண்ணுறீங்க. என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்த்த தன் மகளின் தலையை தடவி கொடுத்தார் தாய் சோபனா.

அப்படி இல்ல பாப்பா, இதுவரை அம்மா தான உன்ன ஸ்கூல்க்கு கூட்டுட்டு போவேன். நீ எங்க போனாலும் அம்மா துணைக்கு வருவேன். முதல் தடவை நீ தனியா போற, அதுவும் பஸ்ல. அதான் கொஞ்சம் பயமா இருக்கு. என்று கெஞ்சலும் கொஞ்சலுமாக கூறிய தாயை கட்டியணைத்த ஆத்மீகா,

என் செல்ல அம்மால்ல, நான் சொன்னா கேப்பீங்க தானா! முதலாவதாக உங்க பாப்பா இப்போ வளர்ந்துட்டா. இரண்டாவது  உங்க பாப்பா தனியா போகல. பிகாஸ், பஸ்ல நிறைய பேர் வருவாங்க. மூணாவது நீங்க உங்க பாப்பாவ கோழையா வளர்க்கல. எல்லாத்துக்கும் மேல  தன்னை தான் பாதுகாத்துக் கொள்வதே பெண்ணுக்கு அழகு அப்படின்னு நான் சொல்லல,  ஔவை பாட்டி சொல்லுறாங்க. சோ என் செல்ல அம்மா பயப்படமாம இருப்பீங்களாம், உங்க பாப்பா முதல் நாள் கல்லூரிக்குப் போய் மாஸ் காட்டிட்டு வருவாளாம். என்ன ஒகேயா?

என்று தாயின் கண்ணத்தில் முத்தமிட்டு பேருந்து நிலைத்தை நோக்கிச் சென்றாள் ஆத்மீகா. மான் குட்டி போல் துள்ளி செல்லும் தன் மகளை பார்த்த சோபனாவின் கண்களில் அவளை மழலையாய் கையில் ஏந்திய தினம் வந்து போனது. அந்த நாளை எப்படி மறக்க முடியும்? அது தானே சோபனாவின் வாழ்வையே புரட்டிப் போட்ட நாள். சோபனாவின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்காக பிறந்தவள் தான் இந்த ஆத்மீகா. அந்த நாளை பற்றி நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வெளியே நின்றிருந்தவளை அக்கம் பக்கத்தினர் ஒரு மாதிரியாக பார்த்து வைக்க, மேலும் அங்கே நிற்க விருப்பம் இல்லாமல் வீட்டிற்குள் சென்றார் சோபனா.

பேருந்து நிலையத்தில்....

பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையில் அமர்ந்தவாறு, பேருந்து வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆத்மீகா. இது வரை தாயுடன் ஸ்கூட்டியில் மட்டுமே பயணம் செய்து வந்ததால், முதல் முறை பேருந்தில் பயணிப்பதை நினைத்து சந்தோஷமாக இருந்தது ஆத்மீகாவுக்கு. அதே நேரம் இந்த பேருந்து பயணம் எப்படி இருக்குமென்ற ஆர்வமும் இருந்தது. பேருந்து வரவே தாய் அறிவுறுத்தியதின் படி முன்னால் பெயர் பலகையை சோதித்து, தன் கல்லூரிக்கு செல்லுமா என உறுதிசெய்து விட்டு பேருந்தில் ஏறினாள். பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. எனவே ஒரு வசதியான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவள், மறக்காமல் பயண சீட்டையும் பெற்றுக் கொண்டாள். அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் வேகமாக இறங்கியவளுக்கு அந்த பயணம் ஆனந்தமாக முடிவடைந்தது. இன்று தான் முதல் நாள் கல்லூரிக்கு செல்லுவதை நினைத்தவளுக்கு மிகவும் பரவசமாக இருந்தது. பள்ளி குழந்தைகள் கல்லூரி நாட்களை எதிர்பார்த்திருப்பதும், கல்லூரி மாணவர்கள் பள்ளி நாட்களை நினைத்து ஏங்குவதும் வாடிக்கை தானே. ஆத்மீகாவும் அதற்கு விதி விலக்கல்ல. முதல் நாள் என்பதால் ஒரு பாடவேளையும் நடைபெறவில்லை. தனக்கென ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கி கொண்டாள் ஆத்மீகா. அவளது துடிப்பான பேச்சும், பாரபட்சமின்றி அன்பை பொழியும் குணமும் எவரையும் அவளுடன் நட்பு கொள்ள செய்யும். கல்லூரி நேரம் முடிவடைய,  காலையில் ஒற்றையாய் கல்லூரிக்குள் நுழைந்தவள் மாலையில் தனக்கென...