...

0 views

எத்தனை துயரம் இங்கே
அத்தியாயம் 8
கீதா பற்றிய உண்மைகள் வெளியே தெரிய தெரிய எல்லோரும் திகைத்துப் போய் இருக்க அங்கே என்ன நடந்தால் எனக்கென்ன என ஜாக் கையில் காப்பி வட மெல்ல நடந்து வர அதைப் பார்த்த ஜூலி டேய் மண்டையா எனக் கூப்பிட ஜாக் தான் முக திரையில் ஒரு கேலி முக பாவனை செய்து விட்டு வர்மா அருகில் வந்து பாஸ் நீங்க ரொம்ப நேரம் அந்தப் பூசனிக்கா பத்தி பேசிட்டு இருக்கீங்க உங்களுக்கும் மத்தவங்களுக்கும் ரொம்ப  சோர்வா இருக்கும் இந்தாங்க காபியெனக் கூற சதீஷ் ஜாக் யைப்பார்த்து என்ன மாதிரியே பண்ற எனக் கேட்க ஆமாம் சதீஷ் ஜி உங்களை மாதிரி தான் என்னோட பாஸ் என்னை உருவாக்கி இருக்காரு நீங்கப் பேசுற எல்லாமே நானும் பேசுவேன் என நடுவே வந்து காமெடி பண்ணி கொண்டு இருக்க எல்லோரும் காபி எடுத்த அப்புறம் ஜூலி ஜாக் அருகில் வந்து மண்டையில் தட்டி விட்டு ரொம்ப பேசாத டா வெண்ணா எனக் கேட்க எல்லோரும சிரித்து விட்டனர், ரம்யா ஜூலி பேசியதை பார்த்து ஜூலி பேசும் பொது சத்யா மாதிரி இருக்கு என வர்மாவிடம் கூற வர்மா சிரித்து கொண்டு அது சத்யா மாதிரி லா இல்லை அது சத்யா மாதிரி தான் வேணும் என நான் செஞ்சேன் எனக் கூற வர்மா கூறுவதை பார்த்த ரம்யா என்ன சொல்ற வர்மா உனக்கு எப்படி சத்யா வைத்தெரியும் எனக் கேட்கச் சத்யா என்னோட ஃப்ரெண்ட் நான் உன்னோட அப்பா கிட்ட பேசி இருக்கேன் உன்னோட மாமா எனக்குத் தற்காப்பு கலை சொல்லிக் கொடுக்கும் பொது சத்யா அங்க வந்து என்னோட வம்பு இழுதுட்டு இருப்பா என்ன விட 2 வயசு பெரிய பொண்ணு அதுனால அக்கா சொல்லு அக்கா சொல்லு நு மிரட்டி என் கூடச் சண்டை போட்டுட்டே இருப்பா கொஞ்ச நாள் தான் பழகி இருந்தாலும் என்னோட அவளோ குளோஸ் ஆகிட்டா அதுனால தான் எனக்கு அவ நல்ல தோழியெனக் கூற சத்யா நினைவில் அவன் கரைந்து போக , அந்த நாட்கள் அவள் கண் முன் வந்து செல்ல அவள் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது , 
என்ன நடந்தது எனச் சதீஷ் கேட்க ரம்யா கூற ஆரமித்தால் ரம்யா தான் சிறு வயதிலிருந்து தன் அம்மா அப்பா தாத்தா மாமா அக்கா எனப் பெரிய குடும்பத்தில் தான் வசித்து வந்தால் ரம்யாவின் அப்பா கார்திக்கேயன்   அம்மா வைஷ்ணவி தாத்தா குமரி வேந்தன் மாமா கார் முகில் வேந்தன் அக்கா சத்யா என எல்லோரும் சந்தோஷமாகத் தான் வாழ்ந்து வந்தார்கள் அவர்கள் குடும்பதில் நடக்க தெரிஞ்ச கொஞ்ச நாட்களில்  அனைத்து தற்காப்பு கலைகளும் கற்று கொள்ள வேண்டும் எனவும் அதிலும் அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் அனைத்து பெண்களும் தற்காப்பு கலைகள் கற்று இருக்க வேண்டும் என்ன தான் ஆண்கள் ஆதிக்க செய்யும் காலத்தில் இருந்தாலும் குமரி வேந்தன் அதை உடைத்தெறிந்து அந்த வீட்டின் பெண்கள் தான் தலைமை செய்ய வேண்டும் எனக் கூறுவார் அதிலும் குமரி வேந்தன் மனைவியிடம் காதல் வசம் அடைந்ததும் அவரின் வீரத்தை கண்டு தான் , அவர்கள் எல்லோரும் என்ன தான் தற்காப்பு கலையில் பெரிய வல்லுனர்கள் என்றாலும் ஏனோ அவர்கள் மனம் அத்தனை அன்பாய் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்கள் செல்லும்போது வயிறும் மனமும் நிறைந்து தான் செல்ல வேண்டும் என்பது அவர்கள் வீட்டின் வழக்கம் , ரம்யாவின் தாத்தா குமரி வேந்தன் தான் அந்த ஊரில் பெரிய தலை அவர்கள் சொன்னால் எல்லாமே சரியாகத் தான் இருக்கும் அதனால் அந்த ஊர் மக்கள் எல்லோரும் அவர்கள் குடும்பம்மீது அத்தனை மதிப்பு வைத்து இருந்தனர் இவை சொல்லிக் கொண்டு இருக்கும் பொது ரம்யா கண்களில் கண்ணீர் வர அதை வர்மா துடைத்து விட்டு அவளை ஆசுவாச படுத்தினான் , அவன் அடுத்து கூற ஆரமித்தான் அவன் தனது 10 வயதில் அவர்கள் வீட்டிலிருந்து தான் தற்காப்பு கலை கற்று கொண்டு இருந்தான் அங்கே இருந்த வரை ரம்யா வை எப்பொழுதாவது தான் பார்ப்பான் ஆனால் சத்யா அப்படி இல்லை அவள் படிப்பில் சரி சண்டையிலும் சரி அவளைப் போல் யாரும் இந்த ஊரில் இல்லை போல் இருக்கும் எனக்கு அவள் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவளுடன் தான் தற்காப்பு கலையும் கற்று கொண்டு இருப்பேன் எனக்கு வாலகையில் கிடைத்த முதல் தோழி அவள் தான் என்னோடு கதிர் எப்படி இருப்பான் அதுபோலத் தான் சத்யா வும் நாங்க மூணு பேர் எங்களுக்குப் பயம் என்றால் என்ன எனத் தெரியாது நான்  கதிர் ஒரு வருடம் தான் அங்கே இருந்தோம் அப்போ எங்க அப்பா எங்களுக்கு இங்கே வச்சு எல்லாம் கத்துக்க முடிவு செஞ்சாறு அப்போ சத்யா வைக்கடைசியா பாத்தேன் அந்த ஒரு வருடம் எங்க வாழ்க்கை அவ்ளோ அழகா இருந்துச்சி எல்லாம் கொஞ்ச நாள் தான் கொஞ்ச நாள் அப்றம் என்னோட அப்பா கிட்ட இருந்து ஒரு கால் வந்துச்சு வேந்தன் குடும்பம் பெரிய ஆபத்தை எதிர்த்து இருக்கு உன்னோட தானே கார்முகில் இருக்கான் அவனை அங்கே சீக்கிரம் போகச் சொல்லு எனச் சொல்ல அவங்க கூடவே நானும் போனேன் நீ அன்னைக்கு உன்னோட ஸ்கூல் ல ஏதோ நிகழ்ச்சி இருக்கு என நீ அங்க இருக்க உன்னோட குடும்பம் குள்ள மக்கள்போல வந்த சிலர் அங்க இருந்த உன் அம்மா  அப்பா சத்யா என எல்லோரையும் கொலை செஞ்சிட்டு போய் இருக்காங்க என அங்க போன அப்பறம் தான் தெரிஞ்சுது ஆனா சத்யா வும் வைஷ்ணவி அம்மா வும் சும்மா இல்லை அங்க வந்த 10 பேர் ல ரெண்டு பேர சத்யா வும் அம்மா வும் அவங்க சண்டை போட்டு அவங்களையும் அடிச்சு அங்க சுயநினைவு இல்லாம இருக்கிற மாதிரி வச்சுட்டு போய் இருந்தாங்க அந்தக் கூட்டம் அவங்க ரெண்டு பேர் இறந்துட்டாங்க என நினைச்சுட்டு அந்தக் கும்பல்  அந்த இடம் விட்டு ஓடிட்டங்க, அங்கே இருந்த நிலமையை பார்த்து நானும் கார்முகில் அய்யா வும் திகைத்துப் போய்ட்டோம் எங்களுக்கு என்ன செய்ய எனத் தெரிய வில்லை அப்போ தான் போலீஸ் எல்லாமே வந்தாங்க அதுல என்னோட அப்பா நண்பர் வந்து தான் கார்முகில் அய்யா கிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க எங்களுக்கு அப்போ தான் குமரி வேந்தன் அய்யா நியாபகம் வர அவரைத் தேடி நாங்க உள்ளே போனோம் அங்கே அவரு இல்லை எங்களுக்கு என்ன பண்ண எனத் தெரிய வில்லை அப்போ மணி 5 இருக்கும் உள்ள ஒரு கார் வந்துச்சு அதுல நீயும் உன்னோட தாத்தா வும் வந்தீங்க அப்போ தான் எங்களுக்கு மனசு கொஞ்ச அமைதி ஆச்சு அங்க நடந்த எல்லாத்தையும் பார்த்து அந்த மனுஷன் கதறி அழுதுட்டார் , அவரைச் சமாதானம் படுத்த முடியவே இல்லை நீ அங்க இருந்த நிலமையில மயங்கி விழுந்துட்ட எனக் கூறினான் , அது எல்லாமே ரம்யா தெரிந்த விஷயம் தான் அதன் பின் அவன் கூறுவதை கேட்ட ரம்யா சற்று திடுக்கிட்டுப் போனால் அதில் வர்மா கூறியது அன்னைக்கு ஏதோ ஊரு காரங்க தான் வேந்தன் குடும்பம் அழிய காரணம் என நாங்க எல்லோரும் நினைச்சுட்டு இருந்தோம் ஆனா அதற்க்கு பின்னாடி இருந்த சூழச்சி யாருக்கும் தெரியாது அதுக்கு அப்பறம் ஆதித்யா குடும்பம் ல நடந்த சில சம்பவம் இதுல ஏதோ இருக்கு என எல்லோருக்கும் தெரிய வந்தது அப்போ எங்க அப்பாவும் தாத்தா வும் சேர்ந்து என்னையும் உன்னையும் கதிரையும் தலை மறைவா வைக்க உத்தரவு போட்டாறு அது மட்டும் இல்லாம உன்னோட தாத்தா கிட்ட சொல்லி உனக்குத் தற்காப்பு கலையை நல்ல சொல்லிக் கொடுக்கச் சொல்ல உன்னோட மாமா அதற்க்கு துணையா இருந்தாரு அதுக்கு அப்புறம் சில தகவல் தெரிஞ்சுது அவங்களோட அந்தத் தாக்குதல் 10 ஓட 11 இல்லை முக்கியமான ரெண்டு குடும்பம் அது தான் இந்தத் தமிழ் நாட்டின் வர்த்தகம் மற்றும் அரசியலயை தீர்மானிக்கிற முக்கிய குடும்பம் உங்க தாத்தா குமரி வேந்தன் என்ன தான் பல இழப்பைச் சந்திச்சி இருந்தாலும் உங்க தாத்தா எந்தக் காரணம் கொண்டு இந்த ஊருக்குக் கெட்ட விஷயம் நடக்க கூடாது என இருந்தாரு , அப்போ தான் சில ஒற்றுமைகள் தெரிஞ்சுது பத்து வருஷம் முன்னாடி நம்ம ஊருல இருந்து பல ஊருக்கு மறைமுகமா சில ஆயுதம் சிலை எல்லாம் கடத்திட்டு இருந்ததா தெரிய வந்தது அதற்க்கு தடையா உங்க அப்பா கார்த்திகேயன் இருக்க அவருக்கு உங்க தாத்தா துணையா இருக்க அவர் எல்லோரையும் கைது செஞ்சிட்டு இருந்தாரு அப்போ எங்க குடும்பம் உங்களுக்குத் துணையா இருந்ததால அந்தக் கூட்டம் கக்கு பெரிய பாதிப்பு இருந்துச்சு அவங்களோட முக்கிய குறிக்கோள் அந்தக் குடும்பத்தில இருந்த அடுத்த தலைமுறை தான் அவங்களை அழித்து விட்டால் அவர்களால் எதும் செய்ய முடியாது என ஒரு திட்டம் போட்டுத் தான் இருந்தார்கள் , அவர்கள் தான் இப்போ அந்த ஆயுதம் விட்டுட்டு போதை பொருள் கடத்தல் விவகாரம் டேட்டா திருடல் எனப் பல தவறான செயல்கள் ஈடு பட்டு இருக்காங்க இதுல ஒரு கிளை தான் அந்தக் கிஷோர் உம் அவன் பையன் விக்கி ,அவன் கூட்டம் இன்னும் தூத்துக்குடி ல யாரு யார் இருக்கா எனத் தெரியலை சீக்கிரம் நாம இதைக் கையில் எடுக்க வேண்டும் என வர்மா கூறினான் , எல்லோருக்கும் சதீஷ் சுரேஷ் இருவருக்கும் ரம்யா வர்மா கதிர் வாழ்க்கையில் நடந்ததை கேட்டு உறைந்து நிற்க அவர்களைப் பார்த்துக் கதிர் இதுக்கே இப்படி என்றால் நானும் வர்மா வும் ரம்யா வும் எடுத்துக் கிட்ட பயிற்சி எல்லாம் பார்த்தா என்ன ஆவீங்க எனக் கேட்க அவர்கள் என்ன சொல்ல எனத் தெரியாமல் முழித்தனர் … 
© அருள்மொழி வேந்தன்