...

7 views

ராமநவமி கோகுலாஷ்டமி பெயர் காரணம்
ஒருநாள் அஷ்டமியும் நவமியும் வருத்தத்துடன் வைகுண்டத்திற்கு பெருமாளைக் காண சென்றது. பெருமாள் அஷ்டமி இடமும் நவமி இடமும் ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்.அதற்காக அஷ்டமியும் நவமியும் கூறியது பவுர்ணமி அமாவாசை போன்ற நாட்களில் மக்கள் இறைவனை வழிபடுகிறார்கள் ஆனால் இந்த அஷ்டமி நாட்களிலும் நவமி நாட்களிலும் மக்கள் யாரையும் வனங்கவில்லை அவர்கள் இதை ஒரு துக்கமான நாளாக கருதுகிறார்கள் அதனால்தான் நாங்கள் வருத்தத்துடன் இருக்கிறோம் என்று அஷ்டமியும் நவமியும் வைகுண்டநாதன் சீனிவாச பெருமாள் என்றும் கூறினார்கள். அதனால்தான் பெருமாள்ஈரம் கொண்ட மனதுடன் ராமனாக அவதரிக்கும் போது நவமி நாளிலும் கிருஷ்ணராக அவதரிக்க போது அஷ்டமி நாளிலும்அவதரித்தார் அதனால்தான் நாம் ராம நவமி என்றும் கோகுலாஷ்டமி என்றும் கூறுகிறோம் இந்த நிகழ்வுதான் ராமநவமி மற்றும் கோகுலாஷ்டமி யின் பெயர் காரணம்.
© Siva