...

10 views

சிவா sir
எனக்கு எப்போதுமே கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மீது மட்டுமல்ல என் கற்றலில் உதவி நண்பர் முதல் புத்தகம் பேனா ஏடுகள் வரை எல்லாவற்றின் மீதும் பெரும் மதிப்பு உண்டு...
என்னுடையது என்று மட்டுமல்ல..... எங்கு நோட்டுப் புத்தகம் போனாவை பார்த்தாலும் பத்திரப் படுத்துவேன் பெரும்பாலும் தீர்ந்து போனாலும் சேர்த்து வைப்பேன் எடுத்து பழைய புத்தகக் கடைக்கோ வேறு உபயோகத்துக்கோ தர மனம் வராது எப்போதும்!

அப்போ நீ நல்லா படிக்கிற புள்ள போல என்றொரு நினைப்பு வரும் உங்களுக்கு இன்னும் இளைய வயதினராய் இருந்தால்
இந்த அக்கா படிப்ஸ் போல என்றெல்லாம் தோன்றலாம்....
அப்படி இல்லை நான் பள்ளி வரை படிப்பில் நடுத்தர மாணவி தான்! எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் ஒன்றைத் தவிர பெரிதாக வேறொரு விழிப்புணர்வும் இருந்ததில்லை.....
இன்றும் பொருளுக்காக இன்னும் ஏதேதோ வேலைக்காக எங்கள் வீட்டில் உள்ளோரை தேடி வருகின்றனர்
ஆனால் என்னைத் தேடி வரும் ஒன்றிரண்டு பேரும் அறிவு வேண்டும் என்று வருவோராகத் தான் இருப்பர்..... எனக்கு அலைபேசியில் அழைப்பு விடுப்பவர்கள் கூட என் அன்பின் பயன் கருதி...