...

6 views

உன்னை கற்பதற்கும் உலகில் விற்பதற்கும்
கல்தோன்றி மண்தோன்றா காலத்து தமிழே
உன்னை கற்பதற்கும் உலகில் விற்பதற்கும்
ஊக்கமாய் இந்த உரைகள்

என் பாட்டன் வள்ளுவன் வாயாடிய வரிகளோ
வரமாய் வைய்யகம் வாழ்த்தி நிற்க
அதற்கு நிகராய் எதில் சென்று நான் தமிழ் கற்க

உலகின் ஒப்பற்ற உயிரினமோ ஆறறிவு
அதனினும் மிகச்சிறிது ஓரறிவு
எவ்வறிவினையும் பகுத்து கூறும் உடலமைப்பு
ஒல்காப் புகழ் தொல்காப்பியம் அதன் தனி சிறப்பு

பாரிய பண்பாடும் சீரிய சிலம்பும் மேகலையும் தேறிய
குறளிலே வாரியே வழங்கும் சிந்தாமணியுடனே
வளையாபதி குண்டலகேசியும்

கடல் போல் கம்பராமாயணம் காதில் சொன்ன கம்ப நாட்டாழ்வாரும்
கவி அரசி அவ்வை அள்ளித்தந்த ஆத்திச்சூடியும் அகிலத்திற்க்கே அறம் போதிக்கும் அற்புதமே

ஏற்றிப் புகழ்ப்பாடு எம்மதமும் சம்மதம் காணும் எம்மொழியே
வாழ்த்தி பாட வகையாய் விளங்கும் போற்றிப்புகழ் பொன்மொழியே

புலவர் பெயர் வர புது கவி அனைத்திற்கும் புத்துயிராய்
வித்தாக விளங்கும் சொத்தான தமிழே

அறமென்ற அழகையும் புறமென்ற புகழையும்
வரமென்ற வாழ்வாய் வகுத்தளித்த வாய்மொழியே
என் தாய்மொழி தமிழே

உலகெங்கு ஓடினாலும் வாடி ஒளிந்திடாத கோடி
மக்களின் நாடி துடிப்பாய் நாவால் ஓதி வளரும் உயிரான
உலகமொழி என் தமிழே

தேடி பிடித்தே ஆய்வு படித்தே ஆறடி நாழி கீழடி தாளி
சாட்சியும் சாற்றுதே சறுக்கிடா உன் புகழ் சங்கம் வளர்த்து
அங்கம் வகுத்த சாதனை தமிழே

போரை புறம் தள்ளு பொருளைப் பொதுவாக்கு
அருளை அன்பால் பெரு ஆதங்கத்தை ஆற்றலால் தொடு

வெறுப்பை நெருப்பால் சூடு பொறுப்பை புத்தியால் எடு
போன்றன பல போதனைகளை போதித்த புகழ் மொழியே
என் தமிழே

பாரிலே பரப்ப பகுத்தறிவை நிரப்ப தேரிலே நீ வர
தினம் தினமாய் திரளுதே தமிழ் பேசும் கூட்டம்
செம்மொழியான எம்மொழியே உன்னை உலகமொழியாக்குவதே எங்கள் நாட்டம்

தலைமுறை பல தாண்டினாலும் பிற மொழி பல நம்மை சீண்டினாலும் வரைமுறை அறிந்தே கற்றோம் கற்பித்தோம் அதனை

அன்றியும் தமிழ் பகைக் கொண்டோரையும் நகைத்து திண்டோரையும் தமிழ் பண்பாளயே பாடம் பயில்வித்தோம்

ஊராரெல்லாம் உற்றுநோக்கும் உன்னத மொழியே என் கண்ணெனத் தமிழே
உயிர்கொடுத்தேனும் உருமாற்றுவேன் உன் பிம்பத்தை உலகறிய
அதில் பெரும் இன்பத்தை அரங்கேற்றுவேன் என்
தமிழ் விரிய

தமிழ் எனும் தாரக மந்திரமே தடைகளைக் கடந்து படை
முழங்க தரணி ஆள
பாலகன் இவனோ தமிழ் பாற்கடலில் தத்தளித்து கவி பாட

இறுதியும் இனிதுமாய் உறுதியோடு உரக்க சொல்வேன்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வான் உள்ளவரை.

© ஆறாம் விரல் ​✍🏾

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamil