...

6 views

என் ஆசைகள் 2
நம்ம இப்போ ஆசைப்பட்றது உடனே கெடக்கிதோ இல்லயோ...
ஆனா அது எப்பவாச்சும் கெடக்கிறப்போ வழக்கம்போல இருக்க மகிழ்ச்சியை விட கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்.
ஏன்னா "நான் அப்போ ஆசைப்பட்டேன். இப்போ அது எனக்கு கெடச்சிருக்கு" அப்டின்னு தோனலாம்.
அந்த சூழ்நிலை கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும்.

11. ஊர்ல நம்ம வந்தா நாலு பேர் வணக்கம் வைக்கனும்.

12. அம்மா அப்பாவுக்கு நல்ல பெயர் வாங்கி குடுக்கணும்.
"அவங்க பையன்" அப்டின்னு சொல்லனும்...

13. என்னோட படிச்சவங்க "இவன் என்னோட ஃப்ரண்டு" அப்டின்னு மத்தவங்ககிட்ட சொல்லனும்.

14. நான் படிச்ச ஸ்கூல் காலேஜ் எல்லாத்துக்கும் சிறப்பு விருந்தினராக போகனும்.

15. அங்க உள்ள மாணவர்கள் முன்னால நின்னு பேசனும்.

16. அங்க என்னோட ஆசிரியர்கள் "இவரு நம்ம ஸ்கூல் (அ) காலேஜ்ல படிச்சவர்" அப்டின்னு சொல்லனும்.

17. நம்ம பண்ற சாதனை அப்டியே டீவி ல வந்தாலும் பரவாயில்லை.

18. டெல்லில என்னோட 1/4 வாழ்நாள் இருக்கனும்.

19. அப்பா அம்மாவ அவுங்க அங்க போய்டு வந்த இடங்களுக்கு எல்லாம் நான் அவுங்கள கூட்டிட்டு போகனும்.

20. முடிஞ்ச வரைக்கும் யாருக்கும் கெடுதல் செய்யாம இருக்கனும்.

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்
---நரிவெருஉத்தலையார்

இது சரியா என்னன்னு தெரியல. 11 அல்லது 12 ஆம் கிளாஸ்ல படிச்ச ஞாபகம்.

பொருள்: வாழ்க்கையில் யாருக்கும் நல்லது செய்யாவிட்டாலும் தீங்கு செய்யாமல் இருங்கள்

-ஆசைகள் தொடரும்.
© murugs

#pudukkottai #tamilnadu #dreams #desire #future #hope #kargilvijaydiwas #jaihind #momdadlove #mystory #selfmotivation #chiefguest #imagination #kottaikadu #தமிழ் #தமிழன்