...

21 views

அவள்
அந்த பெண் செல்போனில் பேசியபடியே பஸ் ஏறினாள்.
இடம் கிடைத்தது உட்கார்ந்தாள். பேசிக்கொண்டே சில்லறை நீட்டி டிக்கெட் வாங்கினாள். பேசிக்கொண்டே தானிருந்தாள். பயணிகள் அவளையே உற்று பார்த்தார்கள். அவள் யாரையும் பார்க்கவில்லை. பேசும் சத்தம் கூட பக்கத்திலிருப்பவருக்கு கேட்காதவாறு மெல்லிய குரலில் பேசினாள். அவள் அப்படியென்ன தான் பேசுகிறாள்? என்று வெறுப்புணர்ச்சியோடு பார்க்கிறார்கள். பஸ் நிறுத்தம் ஒன்றில் பேசிக்கொண்டே இறங்கினாள். பேசிக்கொண்டே பாதையில் நடந்து போகிறாள். எங்கோ இன்னும் பேசிக்கொண்டேதான் போய்க்கொண்டிருப்பாளோ?

இரகசியமான பேச்சு
மறைக்காது வெறுக்காது
கேட்கிறது பொறுமையாய்
அவள் காது.

ந க துறைவன்.