...

5 views

பசி
26/12/2006 சென்னையின் மறக்க முடியாத நாள்.அன்று ஏற்பட்ட நிகழ்வுகள் இன்றும் பலரது உறக்கங்களை கேடுத்துக் கொண்டிருக்கின்றன.அந்த நிகழ்வு பலரது வாழ்வை மாற்றியது.அதில் ஒரு கதையை இப்போது பார்க்காப் போகிறோம்.
பெயர் மாணிக்கம் வயது 19 சென்னை சுனாமியால் பாதிக்கப்பாட்டவர்களில் ஒருவன்.சுனாமியில் தன் குடும்பம் முழுவதையும் இழந்தான் மாணிக்கம்.சுனாமி ஏற்பட்ட இரண்டு நாட்கள் கழித்து மாணிக்கம் ஒட்டிய வயிறுடனும் இருட்டிய கண்களுடனும் அழைந்து கொண்டிருந்தான்.அன்று வழங்கப்பட வேண்டிய உணவு பொட்டலங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.வழங்கப்பட மாட்டது என்பதே பலரது கருத்து. உணவினை எதிர் பார்த்துக்கொண்டே பொழுதும் கழிந்தது.மாணிக்கத்தின் பசி இன்னும் அதிகரித்தது.பலரிடம் வேலை கேட்டுப் பார்த்தான் அனைவரும் அவனை அலட்சியம் செய்தனர்.பிச்சை எடுத்தாவது உணவு உண்ண வேண்டும் என முடிவு செய்தான்.பிச்சையும் கேட்டான்,பல வசைவுகளுடன் உணவும் கிடைத்தது அரை வயிறு நிறைந்தது.இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன.மூன்றாம் நாள் மாணிக்கத்திற்க்கு உணவு கிடைக்கவில்லை.உணவுக்காக அவன் கையில் எடுத்த ஆயுதம் திருட்டு ஆனால் அவனது நெஞ்சம் ஒத்துழைக்கவில்லை.வேறு வழியில்லாமல் திருட ஆரம்பித்தான்.நெஞ்சுக்கு நீதி செய்ய நினைத்திருந்தால் அவனுக்கு இறுதி மரியாதை நடந்திருக்கும்.அதனால் நல்ல இதுவே முடிவு என நினைத்தான்.திருட்டு தொடர்ந்தது வயிறும் நிறைந்தது அதிக பணமும் பார்த்தான்.பணத்தை பார்த்தவுடன் மனம் மாறியது.நாளுக்கு நாள் அவன் திருட்டு வழக்கம் அதிகரித்து.திருட்டின் போது முதியவர் ஒருவரை கொலை செய்ததால் அவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.10ஆண்டுகளை சிறையில் கழித்தான்.வெளியே வந்தும் அவனால் திருந்தி வாழ முடியாமல் மரணத்தை நோக்கி பயணித்தான்.யாரவது ஒருவர் மாணிக்கத்திற்க்கு வேலை தந்திருந்தால் அவனது வாழ்க்கை திசை மாறிப்போயிருக்காது.
எத்தனையோ மாணிக்கங்கள் இன்னும்உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு நானும் காரணம் என்பதில் வருந்துகிறைன்.(பசிக்கும் நீதிக்கும் நடைபெற்ற போட்டியில் பசியே ஜெயித்தது.)
திருடர்கள் பிறப்பிக்கப்படுவதில்லை,உருவக்கப்படுகிறார்கள்!!!!!
-மனோ

மனமிருந்தால் பகிரவும்❤🦋

© ManoMutant