...

5 Reads

என்னுடைய வாழ்க்கை
என்னால் வாழப்படுகின்றது!

உங்களுடைய வாழ்க்கையும்
உங்களால் என்ற எண்ணம்
என்னில் உண்டு.

இஃது எல்லாவிடத்திலும்
எல்லோரிடத்திலும்
பொருந்தக்கூடியதன்று
எனும் எண்ணமும்
என்னில் உண்டு.

எண்ணமெல்லாம்
என்னுடையதெனின்
என்னுடைய வாழ்க்கையும்
என்னுடையதே!

- ஜாக்பின்கௌதம்

#முட்டாள்மனிதன்
#ஜாக்பின்கௌதம்