...

8 Reads

முழம் சறுக்கும் போதெல்லாம்
அவள் கூந்தலில் மணக்கும்
மல்லிகை பூவாய்

தினம் தினம் பள்ளி செல்லும்
என் பிள்ளைகளின் கைகளில்
சினுங்கும் சில்லரையாய்

சில சமயம் அவள்
தலை வலியில் தவிக்கையில்
அவள் வலி போக்கும்
தைலமாய்

அவள் சமைக்கையில்
பல சமயம் விலைவாசி
உயர்வால் பொறிந்து
போகும் கருவேப்பிலையாய்

கருப்பட்டி காப்பி என்றாவது வெளுக்க வேண்டும் என்றால்
சில நேரம் கொஞ்சம்
பசும்பாலாய்

இரவில் ரசம் மட்டும் தானா
என பிள்ளைகள் கேட்கும்
பொதெல்லாம் பாக்கெட்
அப்பளமாய்

வீடு திரும்பையில்
என் முக சோர்வை கண்டு
கடையில் ஒரு டீ குடித்து
வர வேண்டியது தானே
என்று அவள் என் மேல்
கொண்ட பாசத்தில் சொல்ல

பாவம் அவளுக்கு
எப்படி தெரியும்
பத்து ரூபாய்
என் வாழ்வில்
நிகழ்த்தும் ஜாலங்கள்
எத்தனை எத்தனை என்று

#காவியபோகன்