...

1 views

அவனும் நானும்
#poetrycommunity
#poemprompts

என் நேரங்களுடன்
அவனின் நொடிகளும்
கலந்தபடியால்
கலையாய் தொடரும் இன்னும்
சில நிமிடங்கள்

அவன் விரல்களுடன்
என்னை பிணைத்துக்கொண்டேன்
காதலின் பிசுபிசுப்பை கண்கள்
உணர்ந்து
நாசியுடன் ஓர் பெருமூச்சையும்
உள்ளிழுத்தான்
தொடர முடியாத தருணங்களின்
பிரிவிற்காக

நீ வருந்திவிடக் கூடாதென்பதே
என் வருடலின் அர்த்தமென அவனுக்கு
மேலும் புரிய வைத்தேன்
அவன் நெற்றியில் முத்தமிட்டு..
© kamal