...

12 views

காதலியின் காதல்❤️
திகட்டா உன்
குறுஞ்செய்தியும்
தினமும் உன்
குரலழைப்பும்
வார்த்தைகளாய் நீ
வர்ணங்களாய் நான்...
கரம் கோர்த்தும் தோள் சாய்ந்தும்
நடந்த தருணங்கள்
மழலையாய் நீ
மடி சாய்க்க நான்...
கண்ணங் குழியில்
தேங்கிய வெட்கங்களும்
வர மருத்த வார்த்தைகளும்
உணர்வுகளாய் நீ
நாணத்தில் நான்...
நேஞ்சாங்கூட்டில் பூட்டி
வைத்த ஏக்கங்களும்
உன்னை அறியும் ஊடல்களும்
வம்புகளாய் நீ
சாக்குகளாய் நான்...
கற்பனையான உன் ஸ்பரிசங்களும்
காதலின் கதகதப்பும்
கள்வனாய் நீ
களவாடப் பட்டவள் நான்...
எதிர்மறையான எண்ணங்களும்
தூங்கா இரவுகளும்
தவிப்புகளாய் நீ
தேடுபவளாய் நான்...
ஆழமான நினைவுகளும்
இனிப்பான வலிகளும்
நெடுந்தொடர் நீ
உனை மட்டும் தொடருவேன்
நான்...
தொடக்கம் நீயாயீன்
முடிவென்றும் நான்!
காத்திருக்கிறேன்... கனவுகள்
காணலாகாமல் கடைசிவரை
உன் கை சேர்ந்து
கரை சேர! என்னோடு நீ...
இல்லை
உன்னோடு நான்!
இறந்தாலும் கூட!!❤️

- சீதளா செ🌺@meowkutty
#poem_tamil #kavidhaigal #kadhal #penn #nee #naan #mayakkam #kadhalan #kadhali


© சீதளா செ