...

5 views

அடியே அழகே!
உனக்கென்ன ஒரு கவிதை, என்ன செய்தாய் நீ இரு விழிகள் வைத்து கொண்டு, என் இதயம் என்னோடு இல்லையே, இது என்ன மாயமோ, இல்லை நீ தான் மோகினியோ, உன் வசம் வந்த இந்த இதயம் என்னிடமே கொடுத்து விடு, உன் சிரிப்பில் விழுந்து சிதைந்து போன என் இதயம் தனியே இருக்க என் இரு விழிகள் உன் வதனம் மீது நிலைத்து இருக்க, இது தான் காதலோ இல்லையே காதல் மெல்ல கொல்லுமே நீ பார்த்த நொடியில் என் உயிர் உன் வசம் வந்ததே அழகே!
காரணம் இன்றி கண்கள் மயங்கி உன்னிடம் சரண் அடைந்தேன் பேரழகே,
கருணை கொஞ்சம் காட்டு நிலவே,
மீளா மதிமயக்கம் என்னுள் இருக்க மதி உன் மீது கொண்ட மயக்கம் இதுவோ,
இத்தனை அழகை நான் கண்டு காணாமல் போனதோ என் உலகம்...
நான் கண்ட அழகிய ராட்சசியே 😍
© அருள்மொழி வேந்தன்

Related Stories