...

5 views

ஆனந்த கடலில் நீந்த விட்டாள்
"மனதை" கவர்ந்திழுத்தாள்
"கவர்ச்சியை" காட்டி அழைத்தாள்
"வனப்பால்" வம்பிழுத்தாள்
"நாணத்தாள்" தலை குனிந்தாள்
கண்முன் "பேரழகாய்" நின்றாள்
"ஆசைக்கு" தூதுவிட்டாள்
"கூந்தல்" நுகர வைத்தாள்
"விழிக்குளத்தில்" நீந்த வைத்தாள்
"பிறையை" வணங்க வைத்தாள்
"இதழை" திறந்து வைத்தாள்
"இன்பத்தேன்" பருக வைத்தாள்
"மார்பு" தழுவ வைத்தாள்
"கொடியிடையில்" நழுவ வைத்தாள்
"மடிதனில்" சாய வைத்தாள்
"விரல்கொண்டு" தீண்டி விட்டாள்
"தேகம்மீது" படரவிட்டாள்
ஆனந்த "மயக்கம்" தந்தாள்
"வேட்கையை" விளைய வைத்தாள்
"உணர்வை" துண்டிவிட்டாள்
"பருவத்தை" உணர வைத்தாள்
"உள்ளத்தை" தந்து நின்றாள்
"பாதம்" வணங்க வைத்தாள்
"பாசம்" பொங்க வைத்தாள்
"அன்பு" மழையில் நனைத்து விட்டாள்
"ஆனந்த" கடலில் தவழ விட்டாள்.
- சங்கத்தமிழன்